- 2 கப் குழைவாக வடித்த சாதம்
- 1 கப் புளிப்பிலாத 'கடுத்த' தயிர்
- 1/4 கப் பால்
- 50 கிராம் வெண்ணெய்
- 1 டீ ஸ்பூன் வறுத்து பொடித்த உளுத்தம் பொடி ( தேவையானால் )
- 1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
- தாளிக்க :
- 4 -5 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்.
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்து
- கொஞ்சம் கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் துருவிய இஞ்சி
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தாளிக்க
Method:
- சாதத்தை நன்கு மசிக்கவும்.
- அதில் கொஞ்சம் சூடுபடுத்திய பால் மற்றும் வெண்ணை போட்டு நன்கு மசிக்கவும்.
- சாதம் கொஞ்சம் ஆறினதும், அதில் தயிர் மற்றும் உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
- பெருங்காயப்பொடி மற்றும் உளுத்தம் பொடி போட்டு கலக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சாதத்தின் மேலே கொட்டவும்.
- மீண்டும் நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான 'பஹாளா பாத்' அதுதான் தயிர் சாதம் தயார்
Notes:
- இதை இன்னும் சூப்பராக செய்ய , துருவின காரட், மாதுளை முத்துகள், சின்ன சின்ன பச்சை திறக்ஷைகள் எல்லாம் போடலாம்
No comments:
Post a Comment