- துவரம் பருப்பு 100 கிராம்
- மேலே சொன்ன காய் ஏதாவது ஒன்று 1/4 கிலோ
- கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.
- துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
- APP 3 - 4 டீ ஸ்பூன்
- புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணை , உப்பு
- கறிவேப்பிலை , தாளிக்க கடுகு
- வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி கொஞ்சம்
- பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
Method:
- மேலே சொன்ன ஏதாவது ஒரு காய் 1/4 கிலோ எடுத்துக்கொண்டு , அலம்பி நறுக்கவும்.
- குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
- உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
- அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
- அப்பப்போ கிளறி விடவும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.
- சுவையான 'புளிப்பு கூட்டு ' ரெடி
- பொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.
Notes:
- இந்த கூட்டுக்கு அதாவது புளிக்கூட்டுக்கு துவரம் பருப்பு தான் போடணும் இந்த கூட்டு செய்வதற்க்கு பெங்களூர் கத்தரிகாய்எனப்படும் சௌ சௌ , கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்ற காய்களை உபயோகிக்கலாம்.
No comments:
Post a Comment