Thursday, October 8, 2020

சம்பா சாதம்

Ingredients:
  • அரிசி - 1 கப்
  • மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
  • சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
  • நெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு - 10
  • உப்பு


Method:
  • அரிசியைக் களைந்து தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வரும்படிக்கு சாதம் வடிக்கவும்.
  • மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக , வெண் பொங்கலுக்கு பொடித்துக் கொள்வது போல பொடிக்கவும்.
  • வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.
  • அதில் பொடித்ததையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, உதிர்த்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.
  • நன்றாக, ஆனால் சாதம் நொறுங்காமல் கிளறி வைக்கவும்.
  • கறிவேப்பிலை வேண்டுமானாலும் தாளிக்கலாம் .
  • சுவையான சம்பா சாதம் தயார்.
  • அப்படியே சாப்பிடலாம் , நல்லா இருக்கும்..தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டி இருக்காது


Notes:
  • இது பொதுவாக பெருமாள் கோவில்களில் கிடைக்கும் பிரசாதம்

No comments:

Blog Archive