- சோள மாவு (corn flour ) - 1/4 கப்
- சப்ஜா விதை - 1 டேபிள் ஸ்பூன்
- வனிலா மற்றும் டூட்டி fruity ஐஸ்கிரீம் - 2
- டூட்டி ஃரூட்டி - 2 டேபிள் ஸ்பூன்
- செர்ரி - 2 டேபிள் ஸ்பூன்
- முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
- பிஸ்தாம் பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- சின்ன சின்னதாக வெறும் இனிப்பு சுவையுடன் இருக்கும் கலர் கலர் மிட்டாய்கள் ( படத்தை பார்க்கவும் புன்னகை)
- பொடியாக நறுக்கிய கிஸ் மிஸ்
- கடைகளில் கலர் கலராக கிடைக்கும் fruit ஜெல்லி - இதை நாம் சாப்பிடும் ஐஸ்கிரீம் ன் சுவைக்கு தகுந்தாற்போல தேர்ந்து எடுக்க வேண்டும்.
- மேலே படத்தில் நான் பச்சை மட்டும் மஞ்சள் எடுத்துக் கொண்டுள்ளேன். அதில் மஞ்சள் கலர் ஜெல்லியை துண்டு துண்டாகவும், பச்சையை ஒரு பெரிய துண்டாகவும் வைத்துள்ளேன் புன்னகை
- ஒரு tray ஐஸ் cubes .
Method:
- முதலில் சப்ஜா விதையை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
- அதில் சோள மாவைப் போட்டு கிளறவும்.
- அதை அப்படியே சூட்டுடன் எடுத்து, முறுக்கு அச்சில், ஓமப்பொடி தட்டு போட்டு வைத்துக்கொள்ளவும்.
- ஐஸ் cubes களை ஒரு பெரிய பேசினில் போட்டுக்கொண்டு, அச்சில் உள்ள மாவை, அதன் மேல் பிழியவும்.
- அவை உடனே கெட்டிகாக , வெந்த சேமியா போல மாறிவிடும்.
- அதை அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பெரிய கண்ணாடி தம்ளரில் , அல்லது உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் டூட்டி ஃப்ரூட்டியை போட்டு அதன் மேல் பிழிந்து வைத்துள்ள சேமியா, சப்ஜா விதை, ஐஸ்கிரீம், என ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே வரவும். கடைசி இல் மேலே அழகாக ஒரு செர்ரி வைத்து, பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு தூவி பரிமாறவும்.
- மிகவும் அருமையாக இருக்கும்.
- கடைகளில் வாங்குவதை விட இது நல்லாவே இருக்கும்.
- அழகிற்காக மேலும், 2 வேபர் பிஸ்கேட்டுகளை வைத்தேன் !
Images:
No comments:
Post a Comment