Showing posts with label சாற்றமுது வகைகள். Show all posts
Showing posts with label சாற்றமுது வகைகள். Show all posts

Wednesday, October 7, 2020

மிளகாய் பழ ரசம்

Ingredients:
  • ஒரு கை நிறைய மிளகாய் வற்றல்கள் அல்லது பழுத்த பச்சை மிளகாய் - அல்லது எண்ணிக்கை தான் வேண்டும் என்றால் 15- 20 மிளகாய்கள் போதும்
  • புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
  • துவரம் பருப்பு 1/2 கப்
  • தாளிக்க:
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • சீரகம் 1 ஸ்பூன்
  • பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
  • உப்பு
  • கறி வேப்பிலை 1 கை
  • நெய் 2 ஸ்பூன்
  • 1 /4 மஞ்சள் பொடி


Method:
  • முதலில் துவரம் பருப்பை அலசி, குக்கரில் குழைய வேகவைக்க வேண்டும்
  • பருப்பு வைக்கும்போதே, மிளகாய்களையும் அலசி, தனி கிண்ணத்தில் போட்டு பருப்புடன் வேகவையுங்கள்
  • வெளியே எடுத்ததும், கை பொறுக்கும் சூட்டில் அந்த வெந்த மிளகாய்களை நன்கு கசக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள் (அந்த விதைகள் பல் இடுக்கில் மாட்டிக்கொண்டு கஷ்டம் கொடுக்கும்)
  • பருப்பையும் நன்கு மசித்து , புளி பேஸ்ட் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்
  • ஈய சொம்பை பயன்படுத்துவதாக இருந்தால், இதை எல்லாம் அதில் கொட்டி கொதிக்க விடவும்
  • கைவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு போடவும்
  • நன்கு கொதிக்கட்டும்
  • வாணலி இல் நெய்விட்டு, மற்ற பொருட்களை போட்டு தாளித்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்
  • நன்கு கொத்தித்து பொங்கும் போது, மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு விளாவ வேண்டும்
  • அது மீண்டும் கொதித்ததும் இறக்கிவிடலாம்
  • அவ்வளவுதான் அருமையான, சுவையான மிளகாய் பழ ரசம் ரெடி
  • இதற்கு தேங்காய் துவையல் தான் காம்பினேஷின்
  • மிக அருமையாக இருக்கும்


Notes:
  • இந்த ரசத்துக்கு காரம் என்பது நாம் போடும் மிளகாய் மட்டுமே. அதனால் உங்களுக்குத் தேவையான அளவு போடவும். மேலும், இதற்கு ரஸப் பொடி வேண்டாம்
  • எங்கள் வீட்டில் இது ரொம்ப விரும்பப்படும் ரசம்
  • அதற்கு இரண்டு காரணங்கள்
  • ஒன்று இது என் தாத்தா ( மாமனார்) ரின் குறிப்பு, நான் சின்ன வயதில் இருந்தபோது சொல்லித் தந்தார்
  • மற்றது இதன் அசாத்திய சுவை
  • ஒருமுறை செய்து பார்த்தீர்கள் என்றால் பின்பு விடவே மாட்டீர்கள்

Images:


கொள்ளு ரசம் - 2

Ingredients:
  • கொள்ளு - இரண்டு டேபிள் ஸ்பூன்
  • தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
  • துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
  • மிளகு - ஒரு டீஸ்பூன்
  • சீரகம் - அரைடீஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிது
  • தக்காளி - 2
  • மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
  • புளிபேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:-
  • நெய் - 2 டீஸ்பூன்
  • கடுகு - அரை டீஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிது
  • கொத்தமல்லி - சிறிதளவு


Method:
  • ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுக்க வேண்டும்.
  • ஆறியவுடன், வறுத்த கொள், தனியா, 1 தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
  • ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும். கொள்ளு நன்றாக வெந்ததும், புளி இன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
  • இது ஒரு 2 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
  • தாளிக்கும் கரண்டி இல் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், பெருங்காயம் போட்டு வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.
  • கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு சாப்பிடவும்.
  • சூடாக 1 கப் குடிக்க கூட செய்யலாம் ...அருமை ஆக இருக்கும் ....நெஞ்சு கபம் போவதற்கு ரொம்ப நல்லது

கொள்ளு ரசம்

Ingredients:
  • கொள்ளு - 1 கப்
  • புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
  • குண்டு மிளகாய் வற்றல் - 4
  • கொத்தமல்லி விதை - தனியா - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை
  • பூண்டு - 3 பல் நறுக்கியது
  • நெய்
  • கடுகு


Method:
  • கொள்ளை, துளி மஞ்சள் பொடி போட்டு, குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து , வேக வைக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும், வேக வைத்த கொள்ளு, மிளகாய் வற்றல்,கொத்தமல்லி விதை, சீரகம் எல்லாம் போட்டு மிக்சியில் நன்கு அரைக்கவும்.
  • வேண்டுமானால் கொஞ்சம் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
  • வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் புளி பேஸ்ட் மற்றும் அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்து, புளி வாசனை போனதும், 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும்.
  • இது மீண்டும் கொதிக்கட்டும்.
  • ஒரு 2 நிமிடம் கொதித்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
  • சுவையான 'கொள்ளு ரசம்' ரெடி !


Notes:
  • 1. சாதத்தோடு மட்டுமல்லாமல் வெறும் ரசத்தைக் கொஞ்சம் பூண்டு போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு பொருமல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.
  • 2. " கொள்ளு பருப்பு " செய்யும்போது, கொள்ளு வேகவைத்த தண்ணீர் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு அதில் கூட ரசம் செய்து விடலாம்.

புதினா வெங்காய ரசம்

Ingredients:
  • 1 கப் வெந்த துவரம் பருப்பு
  • 10 - 12 சின்ன வெங்காயம் - நறுக்கி வைக்கவும்
  • 1 தக்காளி - விதை நீக்கி நறுக்கவும்
  • 1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
  • உப்பு - தேவையான அளவு
  • 2 டீ ஸ்பூன் நெய்
  • 1 கை புதினா இலைகள் நறுக்கியது
  • 1டீ ஸ்பூன் கடுகு
  • 1 டீ ஸ்பூன்சீரகம்
  • 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி


Method:
  • வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
  • நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் புதினா போட்டு வதக்கவும்.
  • உப்பு போடவும்.
  • மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
  • 1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
  • வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
  • நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
  • ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும் .
  • ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
  • கொத்துமல்லி தூவவும்.
  • வேண்டுமானால் கறிவேப்பிலையும் போடலாம்.
  • சுவையான புதினா வெங்காய ரசம் ரெடி


Notes:
  • வேண்டுமானால் 2 தக்காளி போட்டு புளியை குறைக்கலாம்

'பன்னீர் ரசம்'

Ingredients:
  • 1 கப் வெந்த துவரம் பருப்பு
  • ஒரு கை நிறைய 'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்'
  • 1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
  • உப்பு - தேவையான அளவு
  • 2 டீ ஸ்பூன் நெய்
  • 1 டீ ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
  • 1டீ ஸ்பூன் கடுகு
  • 1 டீ ஸ்பூன்சீரகம்
  • 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி


Method:
  • வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
  • 1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
  • உப்பு போடவும்.
  • மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
  • வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
  • நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
  • ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணி விட்டு விளாவவும்.
  • ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
  • 'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்' மற்றும் கொத்துமல்லி தூவவும்.
  • சுவையான , மணமான 'பன்னீர் ரசம்' தயார்.
  • இந்த ரோஜா இதழ்கள் இந்த ரசத்துக்கு அருமையான மணம் தரும்

தக்காளி + பூண்டு ரசம்

Ingredients:
  • ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • சீரகம் 1 ஸ்பூன்
  • தக்காளி 2 ( விதைகள் நீக்கவும்) - நறுக்கி வைக்கவும்
  • பூண்டு 10 - 12 பற்கள் - நறுக்கவும்
  • மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  • பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
  • உப்பு
  • கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி 1 கை
  • 2 டீ ஸ்பூன் மிளகு சீரகம் உடைத்து
  • நெய் 2 ஸ்பூன்


Method:
  • வாணலி il நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
  • நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை போடவும், நன்கு வதக்கவும்.
  • உப்பு போடவும், 1 டம்பளர் தண்ணீர் விடவும்.
  • நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
  • ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகம் போடவும்.
  • மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
  • அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
  • கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தூவவும்.
  • உங்களது தக்காளி + பூண்டு ரசம் தயார், ரொம்ப அருமையாக இருக்கும்.
  • என்காத்தில் எப்பவும் இது தான்
  • சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
  • வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.
  • 'புளியே' இல்லாத ரசம் இது

தக்காளி ரசம்

Ingredients:
  • ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • சீரகம் 1 ஸ்பூன்
  • தக்காளி 2 ( விதைகள் நீக்கவும்)
  • மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  • பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
  • உப்பு
  • கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி 1 கை
  • 2 டீ ஸ்பூன் மிளகு சீரகம் உடைத்து
  • நெய் 2 ஸ்பூன்


Method:
  • வாணலி il நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
  • நறுக்கி வைத்துள்ள தக்காளி + கறிவேப்பிலை போடவும், நன்கு வதக்கவும்.
  • உப்பு போடவும், 1 டம்பளர் தண்ணீர் விடவும்.
  • நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
  • ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகம் போடவும்.
  • மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
  • அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
  • கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தூவவும்.
  • உங்களது தக்காளி ரசம் தயார்.
  • சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
  • வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.
  • 'புளியே' இல்லாத ரசம் இது

பைன் ஆப்பிள் ரசம்

Ingredients:
  • 1 கப் வெந்த துவரம் பருப்பு
  • 2 - 3 துண்டுகள் painaapple - அன்னாசிப்பழ துண்டுகள்
  • 1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
  • உப்பு - தேவையான அளவு
  • 2 டீ ஸ்பூன் நெய்
  • 1 டீ ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் ( தேவையானால் )
  • 1டீ ஸ்பூன் கடுகு
  • 1 டீ ஸ்பூன்சீரகம்
  • 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி


Method:
  • வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
  • நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
  • உப்பு போடவும்.
  • மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
  • 1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
  • வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
  • நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
  • ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள அன்னசிப்பழ துண்டுகளை போடவும்.
  • ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
  • கொத்துமல்லி தூவவும்.
  • வேண்டுமானால் கறிவேப்பிலையும் போடலாம்
  • சுவையான , மணமான பைன் ஆப்பிள் ரசம் தயார்

'டேஸ்டி ரசம்’

Ingredients:
  • இஞ்சி 2 இன்ச்
  • தக்காளி 1
  • புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
  • ரசப்பொடி 1 ஸ்பூன்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • நெய் 1 ஸ்பூன்
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • சீரகம் 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி
  • பெருங்காயப்பொடி


Method:
  • வாணலி இல் நெய்விட்டு கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கணும்.
  • 2 டம்ளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் போட்டு கலக்கவும்.
  • உப்பு மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி, ரசப்பொடி, துண்டாக்கப்பட்ட தக்காளி, துருவின இஞ்சி எல்லாம் போட்டு கொதிக்கவிடவும்.
  • மீண்டும் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவணும்.
  • அது கொதித்ததும் இறக்கிடணும்.
  • அவ்வளவு தான் 'டேஸ்டி ரசம் ' ரெடி

எலுமிச்சை ரசம்

Ingredients:
  • 1/2 கப் வேகவைத்த பயத்தம் பருப்பு
  • 2 - 4 பச்சை மிளகாய்களை பருப்புடன் வேகப்போடுங்கள்
  • 2 இன்ச் இஞ்சி தோல் சீவி துருவி பார்ப்புடன் வேகப்போடுங்கள்.
  • 1 எலுமிச்சை இன் சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
  • 1/4 மஞ்சள் பொடி
  • உப்பு
  • நெய்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
  • கறிவேப்பிலை / கொத்துமல்லி


Method:
  • குக்கரில் பயத்தம்பருப்பு வைக்கும்போதே, அதில் துருவின இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை போட்டுவிடவும்.
  • வாணலி இல் நெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • அதில் பருப்பு கலவையை கொட்டவும்.
  • அதில் மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு எல்லாம் போடவும்.
  • கொஞ்சநேரம் அது கொதிக்கட்டும்.
  • 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவணும்.
  • அது கொதித்ததும் இறக்கிடணும்.
  • பிறகு எலுமிச்சை சாறு விட்டு கலக்கணும்.
  • ரொம்ப சாதுவான ரசம் இது

Images:


வேப்பம் பூ ரசம்

Ingredients:
  • 2 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1/2 டீ ஸ்பூன் கடுகு
  • 8 - 10 மிளகாய் வற்றல்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் வேப்பம் பூ ( புது பூ அல்லது காய்ந்த பூ )
  • 2 டீ ஸ்பூன் நெய்
  • கறிவேப்பிலை


Method:
  • வாணலி இல் 1 டீ ஸ்பூன் நெய்விட்டு முதலில் வேப்பம் பூவை வைத்து தனியே எதுத்து வைத்துக்கொள்ளணும் .
  • மீண்டும் 1 டீ ஸ்பூன் நெய்விட்டு கடுகு கறிவேப்பிலை மிளகாய் வற்றல் தாளித்து, 2 டம்ளர் தண்ணீர் விடவும்.
  • புளி பேஸ்ட் போட்டு நன்கு கலக்கவும்.
  • உப்பு பெருங்காயம் போடவும்.
  • நன்கு கொதிக்க விடுங்கோ.
  • வாசனை போனதும் மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
  • வறுத்து வைத்துள்ள வேப்பம் பூவை போடவும்.
  • ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • சீக்கிரம் செய்யக்கூடிய சுவையான ரசம் இது


Notes:
  • எங்க பாட்டி சொல்வா, இந்த ரசம் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பண்ணக் கூடாது என்று. எனவே இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

பத்திய ரசம்

Ingredients:
  • 1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1 டீ ஸ்பூன் மிளகு
  • 1 டீ ஸ்பூன் சீரகம்
  • 2 டீ ஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 டீ ஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி
  • உப்பு
  • 2 ஸ்பூன் நெய்


Method:
  • மிளகு, சீரகம் மற்றும் துவரம் பருப்பு இவைகளை பொடித்து வைக்கவும்.
  • வாணலி இல் நெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • 1 டம்ளர் தண்ணீர் விட்டு, புளி பேஸ்ட் போட்டு கலக்கவும்.
  • பொடித்து வைத்துள்ள பொடி பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
  • நன்கு கொதித்ததும் இன்னும் 1/2 கப் தண்ணீர் விட்டு விளாவி, ஒருகொதி வந்ததும் இறக்கவும்.
  • சுடு சாதத்துடன் நெய்விட்டு பரிமாறவும்.

கர்நாடகா தக்காளி ரசம் - 2

Ingredients:
  • 2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
  • 2 -3 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • 2 -3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • 2 -3 டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 - 2 டீ ஸ்பூன் நெய்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • மஞ்சள் பொடி
  • உப்பு


Method:
  • வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
  • அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
  • ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ,கொத்துமல்லி எல்லாவற்றையும் மிக்சி இல் விழுதாக அரைத்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
  • அது ஒரு 5 நிமிடம் கொதிக்கட்டும் .
  • மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
  • அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
  • ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான ' கர்நாடகா சாறு ' தயார்.
  • சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்


Notes:
  • குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
  • இதை புளி பேஸ்ட் போட்டும் செய்யலாம், புளி மற்றும் தக்காளி இரண்டும் போட்டும் செய்யலாம்...உங்கள் டேஸ்டுக்கு தக்கபடி செய்யலாம்

கர்நாடகா தக்காளி ரசம்

Ingredients:
  • 2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
  • 1/2 கப் வெந்த துவரம் பருப்பு
  • 2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • 1 tea ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
  • 1 டீ ஸ்பூன் மிளகாய் பொடி
  • 1/2 டீ ஸ்பூன் மிளகு பொடி
  • 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1/2 டீ ஸ்பூன் சீரகப்பொடி
  • 1 ஸ்பூன் கடுகு
  • 2 - 4 குண்டு மிளகாய் வற்றல்
  • 1 - 2 டீ ஸ்பூன் நெய்
  • உப்பு


Method:
  • வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
  • அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.
  • ஒரு மூடி போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு, மிளகு பொடி , சீரகப்பொடி ,வெந்த துவரம் பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி,பெருங்காயம் எல்லாம் சேர்க்கவும்.
  • அது ஒரு 10 நிமிடம் கொதிக்கட்டும் .
  • மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
  • அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
  • கொத்துமல்லி தூவவும்.
  • ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான கர்நாடகா தக்காளி ரசம் தயார்.
  • சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்


Notes:
  • குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்

கர்நாடகா அரைத்துவிட்ட ரசம்

Ingredients:
  • தனியா ஒரு டேபிள் ஸ்பூன்
  • தக்காளி ஒன்று ( விதை நீக்கி நறுக்கவும் )
  • மிளகாய் பொடி அரை ஸ்பூன்
  • சீரகம் ஒரு ஸ்பூன்
  • தேங்காய் துருவல் 2 - 4
  • பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன்
  • வெந்த துவரம் பருப்பு
  • புளி பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன்
  • நெய் 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் ஒரு ஸ்பூன்
  • கடுகு ஒரு ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கொத்துமல்லி கொஞ்சம்
  • மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை


Method:
  • வாணலி இல் வெந்த துவரம் பருப்பு, தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பெருங்கயப்பொடி உப்பு போடவும்.
  • தனியாவை தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
  • புளி பேஸ்ட் மற்றும் இரண்டு தம்ளர் தண்ணிர் விடவும்.
  • அரைத்த விழுது போடவும்.
  • அது மீண்டும் ஒரு 2 நிமிடத்தில் கொதிக்க ஆரம்பிக்கும்; அப்போது இறக்கவும்.
  • கொத்துமல்லி தூவி இறக்கவும்.
  • வாணலி இல் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்.
  • சுடு சாதத்துடன் நெய் விட்டு பரிமாறவும்.

அரைத்துவிட்ட ரசம்

Ingredients:
  • மிளகு ஒரு டீஸ்பூன்
  • தனியா ஒரு டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 8 - 10
  • தேங்காய் துருவல் 2 - 4
  • பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன்
  • வெந்த துவரம் பருப்பு
  • புளி பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன்
  • நெய் 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் ஒரு ஸ்பூன்
  • கடுகு ஒரு ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை


Method:
  • வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகு , மிளகாய் வற்றல் மற்றும் தனியாவை வறுக்கவும்.
  • தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
  • மீண்டும் வாணலி இல் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • புளி பேஸ்ட் மற்றும் இரண்டு தம்ளர் தண்ணிர் விடவும்.
  • உப்பு, அரைத்த விழுது போடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்கயப்பொடி போடவும்; நன்கு கலக்கவும்.
  • அது நன்கு கொதிக்கட்டும்.
  • வெந்த பருப்பை கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • ரசம் ஒரு ஏழு எட்டு நிமிடம் கொதித்ததும் கரைத்த பருப்பை கொட்டவும்.
  • அது மீண்டும் ஒரு 2 நிமிடத்தில் கொதிக்க ஆரம்பிக்கும்; அப்போது இறக்கவும்.
  • சுடு சாதத்துடன் நெய் விட்டு பரிமாறவும்.
  • ரொம்ப சுவையாக இருக்கும் இந்த அரைத்துவிட்ட ரசம் .

பாப்பா ரசம்

Ingredients:
  • ரசப்பொடி 1/2 ஸ்பூன்
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • சீரகம் 1 ஸ்பூன்
  • தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
  • பூண்டுப்பற்கள் 4
  • மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  • பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
  • உப்பு
  • கறி வேப்பிலை சில இலைகள்
  • ஒரு சிட்டிகை மிளகு உடைத்த்து (தேவையானால் )
  • நெய் 1 ஸ்பூன்


Method:
  • வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
  • நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • உப்பு போடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி போடவும்.
  • 1 /2 டம்பளர் தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
  • ஒரு 3 - 4 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு போடவும்.
  • அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
  • உங்களது பாப்பா ரசம் தயார்.
  • சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு நன்கு மசித்து ஊட்டவும்.
  • குழந்தைகளுக்கு சாதம் ஆரம்பிக்கும் போது இதை செய்து தரலாம், நாமும் சாப்பிடலாம் .

பருப்பு ரசம்

Ingredients:
  • ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
  • புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • சீரகம் 1 ஸ்பூன்
  • தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
  • பூண்டுப்பற்கள் 10
  • மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  • பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
  • உப்பு
  • கறி வேப்பிலை 1 கை
  • 2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து (தேவையானால் )
  • நெய் 2 ஸ்பூன்


Method:
  • வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
  • நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • உப்பு போடவும்.
  • மஞ்சள் போடி, பெருங்காயப்பொடி போடவும்.
  • 1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
  • நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
  • ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு போடவும்.
  • வெந்த பருப்பு மற்றும் 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்.
  • அது ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
  • உங்களது பருப்பு ரசம் தயார்.
  • சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.

கொள்ளு ரசம்

Ingredients:
  • கொள்ளு 4 டேபிள் ஸ்பூன்
  • ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
  • புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  • பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
  • உப்பு
  • கறி வேப்பிலை 1 ஆர்க்
  • நெய் 2 ஸ்பூன்


Method:
  • கொள்ளை நன்கு வறுத்து பிறகு குக்கரில் இல் வேக வைக்கவும்.
  • வாணலி இல் நெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • 1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
  • அதில் ரசப்பொடி, பெருங்கயப்போடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
  • நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
  • பிறகு வெந்தகொள்ளை தண்ணீர் விட்டு கரைத்து விடவும்.
  • அது ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
  • உங்களது கொள்ளு ரசம் தயார்.
  • சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
  • இந்த ரசம் நெஞ்சு கபம் கரைய உதவும்.

கொட்டு ரசம்

Ingredients:
  • ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
  • புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
  • 1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்த்து
  • தாளிக்க:
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • சீரகம் 1 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  • பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
  • உப்பு
  • கொத்தமல்லி தழை 1 கை
  • நெய் 2 ஸ்பூன்


Method:
  • வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
  • 1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்
  • தக்காளி, உப்பு போடவும்; ரசப்பொடி , உடைத்து வைத்துள்ள துவரம் பருப்பை போடவும்.
  • அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து பெருங்கயப்பொடி மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
  • 1 டம்பளர் தண்ணீர் விடவும்; அது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
  • உங்களது கொட்டு ரசம் தயார்.
  • சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.


Notes:
  • பருப்பு வேகவைக்காமல் சீக்கிரம் செய்யக்கூடிய ரசம் இது.

Blog Archive