Wednesday, October 7, 2020

கொள்ளு ரசம்

Ingredients:
  • கொள்ளு - 1 கப்
  • புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
  • குண்டு மிளகாய் வற்றல் - 4
  • கொத்தமல்லி விதை - தனியா - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை
  • பூண்டு - 3 பல் நறுக்கியது
  • நெய்
  • கடுகு


Method:
  • கொள்ளை, துளி மஞ்சள் பொடி போட்டு, குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து , வேக வைக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும், வேக வைத்த கொள்ளு, மிளகாய் வற்றல்,கொத்தமல்லி விதை, சீரகம் எல்லாம் போட்டு மிக்சியில் நன்கு அரைக்கவும்.
  • வேண்டுமானால் கொஞ்சம் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
  • வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் புளி பேஸ்ட் மற்றும் அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்து, புளி வாசனை போனதும், 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும்.
  • இது மீண்டும் கொதிக்கட்டும்.
  • ஒரு 2 நிமிடம் கொதித்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
  • சுவையான 'கொள்ளு ரசம்' ரெடி !


Notes:
  • 1. சாதத்தோடு மட்டுமல்லாமல் வெறும் ரசத்தைக் கொஞ்சம் பூண்டு போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு பொருமல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.
  • 2. " கொள்ளு பருப்பு " செய்யும்போது, கொள்ளு வேகவைத்த தண்ணீர் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு அதில் கூட ரசம் செய்து விடலாம்.

No comments:

Blog Archive