- வறுத்த, பன்சி ரவா 1 கப் ( அதாவது சோள ரவை )
- மிளகு சீரகம் 2 டீ ஸ்பூன் ( உடைத்து வைத்துக்கொள்ளவும் )
- தாளிக்க:
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை 1 கைப்பிடி
- எண்ணை 3 - 4 ஸ்பூன்
- நெய் 2 -3 ஸ்பூன்
- முந்திரி உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்
Method:
- ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
- தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
- அதிலேயே உடைத்த மிளகு சீரகத்தையும் போடவும்.
- இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பன்சி ரவையை கொட்டி கிளறவும்.
- நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
- அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
- ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
- நல்ல சுவையான 'பன்சி ரவா உப்புமா ' தயார்.
- மஞ்சளாக பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
- தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.
No comments:
Post a Comment