Ingredients:
- To make puri:
- 1 cup Semolina (Rava / Suji)
- 3 tblsp Fine Wheat Flour (Maida)
- 1/4 tsp Baking Soda
- Oil to deep fry
- For filling:
- 2 cups of boiled chopped potatoes
- 1 1/2 cup chopped onions
- 1/2 cup chopped coriander leaves
- 1 1/2 cup grated carrots
- 2-3 tsp red chilli powder/ finely chopped green chilies
- 2 cups sev
- 1 cup cooked corn and peas
- 3/4 cup sweet chutney
- 1 cup thick curd
- 2-3 tsp chat masala
- Salt to taste
- 2 tablespoon of oil(optional)
Method:
- Mix sooji, maida, baking soda, salt and enough water to knead a soft dough.
- Stand covered with wet cloth for 15-20 minutes.
- Make small sized balls.
- With the help of some dry maida or sooji, roll into thin rounds.
- Heat oil in a pan and deep fry puris till very light brown and crisp.
- Drain in a paper towel for a while to dry out the oil.
- Store in an airtight container when cool.
- How to serve:
- Make holes in the puri with your thumb
- Start filling the items in succession: baked potatoes, onion, tomato, carrot, peas & corn
- Arrange the filled puris in a plate, preferably in round shape
- Pour dhai over the filled puris such that it percolates each puri
- Sprinkle chat masala, red chilly powder, coriander leaves and salt
- On the top, pour sweet chutney
- Spread the sev around
- Serve and enjoy :)
Images:
Ingredients:
- Peanuts - 100 grams
- Tamarind paste - 2 tsps
- Red chillies - 8-10 numbers
- Salt to taste
- Coconut (optional)
- Water for grinding
Method:
- Dry fry peanuts in kadai but do not remove its skin
- Let it cool down
- Grind the peanuts with tamarind paste, red chillies, salt and coconut
- Add water sparingly, it should be in chutney's consistency
Notes:
- You can eat this with dosa, idly, chapatti, etc...
Images:
Ingredients:
- முழு பச்சைப்பயிறு அல்லது உடைத்த பயத்தம் பருப்பு – 1 கப்
- மைதா – 1 கப்
- வெல்லம் – 1 கப்
- தேங்காய்த்துருவல் – 1/2 கப்
- ஏலப்பொடி – சிறிதளவு
- அரிசி மாவு – 2 டீஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
Method:
- பச்சைப்பயிரை 10 நிமிடங்கள் ஊறவைத்து மூழ்கும் அளவிற்குத் தண்ணீரை ஊற்றி இரண்டு விசில் வந்ததும் கேஸை அணைக்கவும்.
- பயத்தம் பருப்பானால் களைந்து அப்படியே வேகவைக்கலாம்.
- வெந்த பாசிப்பயிரை நன்றாக மசிக்கவும்.
- வெல்லத்தை உடைத்து, வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் வெல்லம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, அது கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும்.
- மீண்டும் வெல்லத் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில், வேக வைத்த பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து நன்றாகத் திரண்டு வரும் வரை கிளறவும்.
- பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும், தேவையானால் இன்னும் சிறிது நெய் விட்டுக்கொள்ளவும்.
- நன்கு கிளறவும், எல்லாமாக நன்கு சேர்ந்து கொண்டாடும், ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
- அது நன்கு ஆறியபின் சிறுசிறு உருண்டைகளாக ஒரே அளவில் உருட்டிக் கொள்ளவும்.
- இது தான் பூரணம்.
- அடுத்து , மேல் மாவிற்கு, மைதாவுடன் சிறிது உப்பு, அரிசி மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும் .
- எண்ணெயை சூடாக்கி பருப்பு உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
- இப்போது சுவையான 'பயத்தம்பருப்பு சுகியன்' தயார்.
Notes:
- சிலர் மேல் மாவிற்க்காக அரிசி உளுந்து அரைத்து செய்வார்கள். அப்படியும் செய்யலாம்
Ingredients:
- மசித்த வாழைப்பழம் - 1/2 கப்
- சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
- மைதா - 2 கப் எள் - 1 டீஸ்பூன்
- ஓமம் - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பூரி பொரிக்க
Method:
- முதலில் ஒரு பௌலில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, அத்துடன் எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக பூரி மாவு போன்று பிசைந்து கொள்ள வேண்டும்.
- அதை அப்படியே ஒரு 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடாவதற்குள், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, அதனை பூரிகளாக இட்டு வைக்கணும்.
- எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரி ரெடி!!!
- இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
Notes:
- மாலையில் நல்ல சுவையான அதே சமயம் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், கர்நாடகத்தில் உள்ள மங்களூரில் மிகவும் பிரபலமான மங்களூர் பன் என்று அழைக்கப்படும் வாழைப்பழ பூரியை செய்யலாம்.
- இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!
Ingredients:
- பாசி பருப்பு - 1 கப்,
- துருவிய கேரட் - 1 கப்,
- ஒரு வெள்ளரிக்காய் - பொடியாக நறுக்கவும்.
- பச்சை மிளகாய் - 5,
- எலுமிச்சம் பழம் - ஒரு மூடி
- கொதித்துமல்லி இலை - 1 கைப்பிடி,
- கறிவேப்பிலை - 10.
- பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
- உப்பு - 1 ஸ்பூன்
- தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்
Method:
- பாசி பருப்பை நன்கு அலசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பின் நன்கு தண்ணிரை வடித்து விட்டு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் , கொத்தமல்லி, உப்பு போட்டு கலக்கவும்.
- வாணலி இல் எண்ணெய்ப விட்டு, கடுகு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
- எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
- அவ்வளவுதான், 'பயத்தம் பருப்பு கோஸ்மல்லி' ரெடி !
Notes:
- இதற்கு பருப்பை பச்சையாகதான் போடவேண்டும்.பச்சை வாசனை பிடிக்காதவர்கள்,மைக்ரோவேவ்லே 2 நிமிஷம் 100% பவர்லே வைத்து எடுக்கலாம் அல்லது தாளித்ததும், வாணலி இல் பருப்பைக் கொட்டி இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கலாம். இதில் எல்லாமே பச்சையாக இருப்பதால் , அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. சிலர் தேங்காய் துருவல் சேர்ப்பார்கள். மாங்காய் ஸீஸன் என்பதால் மாங்காயையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
Ingredients:
- தயிர் 1 cup
- சுத்தமான தண்ணீர் 2 cups
- கொத்தமல்லி நன்றாக பொடியாக நறுக்கியது 2 tsp
- உப்பு தேவையான அளவு
- கரகரப்பாக அரைத்து கொள்ள :
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி - 1 சிறு துண்டு
- தாளிப்பதற்கு :
- கடுகு - 1/2 tsp
- பெருங்காயம் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 5 - 6
- எண்ணை - 1/2 tsp
Method:
- தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக சிலுப்பிக் கொள்ளவும்.
- கரகரப்பாக அரைத்து வைத்துள்ள விழுதை கடைந்த மோரில் சேர்க்கவும்.
- எண்ணை சூடேற்றி அதில் கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்தது, கரைத்து வைத்துள்ள மோரில் கொட்டவும் .
- சுவையான நீர் மோர் தயார்.
Notes:
- பச்சைமிளகாயை அரைக்காமல், பொடியாக நறுக்கி தாளித்தும் மோரில் கொட்டலாம்.இஞ்சி தேவை இல்லை என்றால் தவித்துவிடவும். பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.
Ingredients:
- வெல்லம் (பொடி செய்தது) - 1 கப்
- சுத்தமான தண்ணீர் - 4 கப்
- எலுமிச்சை பழ சாறு (தேவையான அளவு)
- 1/4 டீ ஸ்பூன் சுக்கு பொடி
- ஏலக்காய் பொடி 1/2 டீ ஸ்பூன்
Method:
- பொடி செய்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி கொள்ளவும்.
- வெல்ல தண்ணீரில் ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி இவற்றை சேர்த்து கலக்கவும். தேவையானால், எலுமிச்சை சாற்றினையும் சேர்க்கவும்.
Notes:
- பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.
Ingredients:
Method:
- சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல நாமும் நாம் குழந்தைகளும் சாப்பிடலாம். பத்திய சாப்பாடு என்ற நினைப்பே வராது. 'வெரைட்டியாக', 'வித்தியாஸ்மாக' இருக்கும் அவ்வளவ்தான் . என்ஜாய்!
Ingredients:
- பச்சரிசி மாவு 1 கப்
- காராமணி 1/4 கப்
- தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது - அரை கப் ( துருவியும் போடலாம் )
- பச்சை மிளகாய் 4 - 6 - பொடியாக நறுக்கவும்
- பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
- உப்பு
- தாளிக்க எண்ணெய்
- கடுகு உளுத்தம் பருப்பு
- கறிவேப்பிலை
- தண்ணீர் 2 கப்
Method:
- காராமணியை நன்கு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலி அல்லது உருளி இல் எண்ணெய்விட்டு அடுப்பில் வைக்கவும்.
- தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
- பிறகு, இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
- தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது, வேகவைத்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்க்கவும்.
- அடுப்பை சின்னதாக்கிவிட்டு, மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
- மாவு நன்றாக பந்து போல சுருண்டு வந்ததும் ஒரு தாம்பாளத்தில் கொட்டிவைத்துக் கொள்ளவும்.
- நன்கு ஆறினதும், நன்றாக அழுத்தி பிசையவும்.
- ஒரு எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக் கொண்டு அதை கைகளில் வைத்து அழுத்தி தட்டை போல செய்யவும்.
- இது போல மொத்த மாவையும் செய்யவும்.
- இவைகளை, அதாவது இந்த அடைகளை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் ஆவி இல் இட்லி போல வேகவைத்து எடுக்கவும்.
- பரிமாறும்போது உருகாத வெண்ணெயுடன் பரிமாறவும்.
- மிகவும் வாசனையாக ருசியாக இருக்கும்.
Images:
Ingredients:
- வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
- காராமணி 1/4 கப்
- தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது - அரை கப் (துருவியும் போடலாம்)
- வெல்லம் (பொடித்தது) 1 கப்
- ஏலக்காய் பொடி 1 டீ ஸ்பூன்
- தண்ணீர் 2 கப்
Method:
- காராமணியை நன்கு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலி அல்லது உருளி இல் இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும், வடிகட்டிக்கொள்ளவும்.
- பிறகு மீண்டும் அடுப்பில் வைக்கவும், வெல்லத் தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது, வேகவைத்த காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
- அடுப்பை சின்னதாக்கிவிட்டு, வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
- மாவு நன்றாக பந்து போல சுருண்டு வந்ததும் ஒரு தாம்பாளத்தில் கொட்டிவைத்துக் கொள்ளவும்.
- நன்கு ஆறினதும், நன்றாக அழுத்தி பிசையவும்.
- ஒரு எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக் கொண்டு அதை கைகளில் வைத்து அழுத்தி தட்டை போல செய்யவும்.
- இது போல மொத்த மாவையும் செய்யவும்.
- இவைகளை, அதாவது இந்த நோன்பு அடைகளை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் ஆவி இல் இட்லி போல வேகவைத்து எடுக்கவும்.
- பரிமாறும்போது உருகாத வெண்ணெயுடன் பரிமாறவும்.
Notes:
- தயிர் சேர்த்துக்க கூடாது.
- எண்ணெய் தேய்த்து குளிக்கணும் .
Images:
Ingredients:
- ஒரு கை நிறைய மிளகாய் வற்றல்கள் அல்லது பழுத்த பச்சை மிளகாய் - அல்லது எண்ணிக்கை தான் வேண்டும் என்றால் 15- 20 மிளகாய்கள் போதும்
- புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
- துவரம் பருப்பு 1/2 கப்
- தாளிக்க:
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
- உப்பு
- கறி வேப்பிலை 1 கை
- நெய் 2 ஸ்பூன்
- 1 /4 மஞ்சள் பொடி
Method:
- முதலில் துவரம் பருப்பை அலசி, குக்கரில் குழைய வேகவைக்க வேண்டும்
- பருப்பு வைக்கும்போதே, மிளகாய்களையும் அலசி, தனி கிண்ணத்தில் போட்டு பருப்புடன் வேகவையுங்கள்
- வெளியே எடுத்ததும், கை பொறுக்கும் சூட்டில் அந்த வெந்த மிளகாய்களை நன்கு கசக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள் (அந்த விதைகள் பல் இடுக்கில் மாட்டிக்கொண்டு கஷ்டம் கொடுக்கும்)
- பருப்பையும் நன்கு மசித்து , புளி பேஸ்ட் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்
- ஈய சொம்பை பயன்படுத்துவதாக இருந்தால், இதை எல்லாம் அதில் கொட்டி கொதிக்க விடவும்
- கைவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு போடவும்
- நன்கு கொதிக்கட்டும்
- வாணலி இல் நெய்விட்டு, மற்ற பொருட்களை போட்டு தாளித்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்
- நன்கு கொத்தித்து பொங்கும் போது, மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு விளாவ வேண்டும்
- அது மீண்டும் கொதித்ததும் இறக்கிவிடலாம்
- அவ்வளவுதான் அருமையான, சுவையான மிளகாய் பழ ரசம் ரெடி
- இதற்கு தேங்காய் துவையல் தான் காம்பினேஷின்
- மிக அருமையாக இருக்கும்
Notes:
- இந்த ரசத்துக்கு காரம் என்பது நாம் போடும் மிளகாய் மட்டுமே. அதனால் உங்களுக்குத் தேவையான அளவு போடவும். மேலும், இதற்கு ரஸப் பொடி வேண்டாம்
- எங்கள் வீட்டில் இது ரொம்ப விரும்பப்படும் ரசம்
- அதற்கு இரண்டு காரணங்கள்
- ஒன்று இது என் தாத்தா ( மாமனார்) ரின் குறிப்பு, நான் சின்ன வயதில் இருந்தபோது சொல்லித் தந்தார்
- மற்றது இதன் அசாத்திய சுவை
- ஒருமுறை செய்து பார்த்தீர்கள் என்றால் பின்பு விடவே மாட்டீர்கள்
Images:
Ingredients:
- 2 tbsp crushed coriander seeds
- 1 tbsp crushed fennel seeds
- ½ tbsp crushed cumin seeds
- ¼ tsp Asafoetida / Hing
- ½ tbsp kasoori methi / finely chopped fresh methi
- 2 tbsp red chilly
- 1 tsp Black Salt / Normal salt
- ½ tsp Garam Masala
- 1 tbsp amchoor / 1/8 citric acid / 1 spoon fresh lemon juice
- ½ tsp Black pepper
- 1/3 cup Besan
- ½ cup Moong Dal (Soak for about 1 hour and crush in mixer just an inch, so that the dal should divide into pieces. Be careful it should NOT become a paste)
- 1 tbsp crushed ginger and green chilly
- 2 tbsp oil
- To make Dough:
- 2 ½ cups Maida
- 1 tsp Salt
- ½ cup Ghee (Melted)
- Water as required
- Ghee / Oil to deep fry
Method:
- Wash the dal and soak for about an hour.
- While the dal soaks, we can make the dough since it has to be kept aside for about ½ an hour.
- In a bowl put the Maida followed by salt and ghee. Then gently mix it.
- If you take a handful of mixed dough and hold it, you should be able to hold it and if you leave that it should fall off into powder, that’s the right consistency. (You can obtain this in the ratio – 1:5 :: Ghee:Maida) [For samosa also the same consistency]
- Now add warm water slowly to the dough and mix well.
- Give more pressure and mix. When the dough is fully mixed, it would stick to your hand. That time, stop adding water. From this time, keep mixing for about 5 to 7 minutes till the dough becomes soft.
- Make sure that the dough is not sticking to your hand. On that stage stop and close the dough and keep aside.
- Now we will prepare the masala which we are going to keep inside the dough.
- In a pan pour some oil followed by crushed coriander, crushed fennel and crushed cumin.
- Then add crushed ginger and green chilly. (Keep the gas on normal heat.)
- Then add Black Pepper, red chilly, Hing, Methi, Salt, Garam Masala and amchoor,
- For about 2 min stir well.
- Then add besan flour to the mixture and mix it well till you get a nice aroma.
- Now add the crushed moong dal to this mixture and mix well. (Mix for about 4-5 min)
- Then transfer to a plate and allow it to cool down.
- After that make small balls out of that masala and keep aside. (According to the measurement which I gave, you will be getting 15 balls).
- Now take the madia dough and mix well.
- Then take a small portion of it, make it like a ball (lemon size), flatten it out by pressing both of your hands and stuff the masala in it and cover the masala with the dough. Ensure that you take out excess dough from it by pinching it from the top. Ensure that the masala is completely covered by the dough and there are no cracks in the ball. Keep this ball aside.
- With the rest of the dough and masala, make balls and keep aside.
- Now take 4 balls, hold each of it in your hands and press it, such that it should be like a small circle. (i.e like ‘thattai’). Each of this needs to be fried.
- Keep the rest of the dough balls closed.
- Pour the oil to fry in a frying pan and switch on the stove. Before it starts to heat, put all the 4 kachodis into the oil at the same time. Ensure that the stove is at medium heat (~170o C)
- It will take some time to fry (for single side to fry it will take 4-5 min).
- After it cooks slowly turn the kachodis.
- Then wait for about 4 more mins. You can see that it slowly turns into golden brown color.
- Once the kachodi is ready switch off the stove.
- Let the oil cool down. Then again switch on the stove and before it starts to heat put another set of kachodis at the same time as you did earlier. (This procedure is very important. The kachodi will fry well only when you do like this.)
- You can keep these kachodis for about 2 weeks in an air tight container
Notes:
- Green chilly - pudhina chutney and dates sweet chutney is a good combination for kachodi.
- Otherwise curd with salt and cumin powder is also a good side dish for the kachodi.
- It’s a wonderful Rajasthani dish which tastes yummy and it’s not so difficult to prepare.
- This recipe has been featured in BigBasket for best atta based recipe - https://www.bigbasket.com/flavors/recipes/1114/kachodi/
Images:
Ingredients:
- Poha – 1 cup ( thin)
- Potato (medium size) – 2 (boiled and mashed)
- Green Chilly – 2
- Finely chopped Coriander leaves – 2 table spoon
- Salt – 1 tsp
- Oil for deep fry
Method:
- Powder poha in a mixer grinder and make it like a flour.
- In a vessel, put mashed potatoes, Finely chopped Coriander leaves and Finely chopped green chilies.
- Add salt.
- Mix them well.
- Knead them like chappati dough.
- If you need, add some water and make the dough tough.
- Keep it as it is for ten min.
- Then, again knead it .
- In this stage also you can add water if you want.
- Because the poha would have absorbed the water.
- Now take little dough and make it like a stick. ( See the picture)
- Do all the dough like that and make them in the same length.
- So that, you can fry them uniformly.
- Now heat oil in a pan and start frying them.
- Just leave it as it is for a while and then try to turn them.
- When the sound stops, remove the Potato Poha fingers from the oil.
- serve it with tomato sauce.
- This will be very crunchy from outside and very soft inside.
Ingredients:
- கொள்ளு : 1 / 2 கப்
- தேங்காய் : 1/2 மூடி
- சிவப்பு மிளகாய் : 7
- பூண்டு : 7 பல்
- உப்பு : தேவையான அளவு
Method:
- தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- வாணலில் இல் கொள்ளைப் போட்டு , மிதமான தீ இல் , கருகாமல் , நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
- பூண்டை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டால் மிக்ஸியில் நன்றாக அரைபடும்.
- இப்போது தேங்காய், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கொள்ளு துவையல் தயார்.
- சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்
Notes:
- கொள்ளு உடம்பிற்கு மிகவும் நல்லது. எனவே, கொள்ளு துவையல், கொள்ளு தால், என்று வாரம் ஒருமுறையாவது உடம்புக்கு சேர்த்துக்கொள்வது நல்லது.
Ingredients:
- அவல் - 200 கிராம்
- கடலை மாவு - 100 கிராம்
- அரிசி மாவு - 50 கிராம்
- வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
- மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
- சோடா உப்பு - 1 சிட்டிகை
- எண்ணெய் - பொறிக்க
- உப்பு - தேவையான அளவு
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் நறுக்கியது - 2
- மிளகாய் பொடி தேவையான அளவு
Method:
- அவலை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
- வறுத்த வேர்க்கடலையையும் மிக்சி இல் ஒண்டிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
- பிறகு, அரிசிமாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் பொடி, , பெருங்காயம், சோடா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும், பிசைந்தமாவை கிள்ளிப்போட்டு, கரகரப்பாக பொரிந்ததும் எடுத்தால் அவல் வேர்க்கடலை பக்கோடா ரெடி.
- நல்ல 'கரகரப்பாக' இருக்கும்.
Notes:
- அவல் சீக்கிரம் ஊறிவிடும் , அதனால், நேரம் ஆக ஆக, பக்கோடா மாவு கெட்டியாகும். எனவே, அவ்வப்போது தண்ணீர் தெளித்து தளர்த்திக் கொள்ளவும்
Images:
Ingredients:
- 1 கப் பாம்பே ரவா
- 3 - 4 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவு அல்லது அரைத்த உளுந்து ஒரு கை
- ( இட்லிக்கு அரைக்கும்போது கொஞ்சம் எடுத்துக்கோங்கோ)
- வெங்காயம் - தேவையானால்
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்
- உப்பு
Method:
- ரவை இல் உளுத்தம் மாவு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு எல்லாம் போட்டு மட்டா தண்ணீர் விட்டு பிசையவும்.
- ஒரு அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
- பிறகு வாணலி இல் எண்ணெய்வைத்து அது சுட்டதும், மாவை உருட்டி போண்டாக்கள் போடவும்.
- தேவையானவர்கள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
- ரவை இருப்பதால் மொறுமொறுப்பாகவும், உளுந்து என்பதால் உள்ளே மெத் என்றும் அருமையாக இருக்கும்.
- வெறுமனையே நல்லா இருக்கும், வேண்டுமானால் தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறலாம்.
Images:
Ingredients:
- கெட்டி அவல் - இரண்டு கப்,
- புளிஜலம் - ஒரு கப்
- தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன் (optional)
- கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா ஒரு டேபிள் ஸ்பூன்
- மிளகாய் வற்றல் - ஆறு அல்லது ஏழு
- உப்பு
- தாளிக்க:
- கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
- வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு
- கறிவேப்பிலை
- மஞ்சள் பொடி கொஞ்சம்
- பெருங்காயப் பொடி - கொஞ்சம்
- நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
Method:
- கெட்டி அவலை நன்கு இரண்டு மூன்று முறை அழுக்கு போக அலசி , பிழிந்து, தயாராக வைத்துள்ள புளி கரைசலில் ஊற வைக்கவும்.
- தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல்போன்றவற்றை வறுத்து, பொடி செய்து, அவலுடன் சேர்க்கவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி,பெருங்காயப் பொடி என எல்லாம் போட்டு தாளித்து, அதில் அவல் கலவையை சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும்.
- இரண்டு மூன்று நிமிடங்கள் கிளறினால் போதுமானது
Notes:
- இது ஒரு சுவையான சிற்றுண்டி, செய்வதும் மிக சுலபம்
- குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய, அருமையான டிபன் இது
Ingredients:
- Orange fruit 1
- Honey 1 tsp
- Sugar (as per requirement)
- Lemon juice 2 tsp
- Basil seeds (Tulasi seeds) ½ tsp
- Water 3 cups
- Ice cream mould and sticks (4-5 numbers)
Method:
- Wash the orange fruit and remove the skin and the seeds.
- Then, in mixer grinder put the orange fruit and 2tsp lemon juice with small amount of water.
- Grind nicely,then add 1tsp of honey and sugar to the juice and mix it well.
- Then take the ice cream mould put some basil seeds in it and then pour the juice.
- Keep the ice cream in freezer for about 8-9 hours.
- Now a colorful orange stick ice is ready. Kids will like it a lot.
Notes:
- If you don't have ice cream mould you can use the stainless tumblers or any good plastic tumblers.
- Instead of orange you can use other fruits also.(like mango,apple,seedless grapes,etc.)
Images:
Ingredients:
- காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 10 -12
- மிளகு - 2 -4 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 10 -12
- தனியா 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- புளி ஜலம் - 2 கப் அல்லது 2 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
- உப்பு
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- மஞ்சள் பொடி - கொஞ்சம்
- தாளிக்க கொஞ்சம் கடுகு , கறிவேப்பிலை
Method:
- மாங்காய் துண்டங்களை கொஞ்சம் தண்ணிரில் ஊற வைக்கவும்.
- வாணலி இல் மிளகு,மிளகாய் வற்றல், தனியா மற்றும் கறிவேப்பிலையை கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுக்கவும்.
- மிக்சி இல் அரைக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
- புளி ஜலம் விடவும்.
- மட்டாக உப்பு போடவும்.
- ஊறவைத்த மாங்காய் துண்டங்களை போடவும்.
- பெருங்காயப்பொடி மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
- அரைத்து வைத்த மசாலாவையும் போடவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- மாங்காய் வெந்து குழம்பு இறுகும் வரை குழம்பு கொதிக்கட்டும்.
- பிறகு இறக்கவும்.
- ரொம்ப மணமான மிளகு குழம்பு தயார்.
- சுடு சாதத்தில் நிறைய நெய் விட்டு இதை சாப்பிடவும்.
- காச்சின அப்பளம் போறும் தொட்டுக்க
Notes:
- மிளகு குழம்பு உடலுக்கு ரொம்ப நல்லது. இதை மாங்காய் போட்டு அல்லது போடாமலும் செய்யலாம். குளிர் காலத்தில் சளி பிடித்திருக்கும் போது வாய்க்கு ரொம்ப ஆரோகியமாக இருக்கும்.
- மாங்காய் இல் உப்பு இருப்பதால் உப்பு போடும் போது நினைவாக குறைந்த அளவே போடவும்
Ingredients:
- பச்சைமிளகாய் 1 கிலோ
- கெட்டி யாக குழப்பின மோர் 1 கிலோ
- உப்பு
Method:
- பச்சை மிளகாய் களை நன்கு அலம்பவும்.
- காம்பு கிள்ள வேண்டாம், வால் பக்கத்தில் கீறவும் , அதாவது விதை சிதறாமல் மிளகாயை பிளக்கவும்.
- ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மோர் மொத்தத்தையும் விடவும்.
- உப்பு போட்டு கலக்கவும்.
- மிளகாய்களை அதில் போடவும்.
- மோர், மிளகாய்கள் மேலே இருக்கணும். ( தேவையானால் கொஞ்சம் ( ரொம்ப கொஞ்சம் ) தண்ணீர் விட்டுக்கொள்ளவும்)
- 2 நாள் அப்படியே ஊறட்டும்.
- ஆனால் தினமும் ஒரு முறை குலுக்கி விடனும்.
- முன்றாம் நாளில் இருந்து வெறும் மிளகாய்களை மட்டும் ( கலர் மாறி இருக்கும் ) எடுத்து , ஒரு முங்கில் தட்டில் போட்டு வெயிலில் காய வைக்கவும்.
- சாயங்காலம் ஆனதும், மீண்டும் மோரில் போட்டுவிடவும்.
- மறுநாள் மீண்டும் மிளகாய்களை காய வைக்கவும்.
- இப்படியே மொத்த மோரும் ஆகும் வரை செய்யணும்.
- அப்புறமும் மிளகாய்கள் நன்கு ( நொறுங்கும் பதம் ) காயும் வரை காய வைத்து சேமிக்கவும்.
- தேவையான போது எடுத்து வறுத்துக்கொள்ளவும்.
- வருஷத்துக்கும் நல்லா இருக்கும்.
- தயிர் சாதம் மற்றும் 'மோர் கூழ் ' செய்யும் போது உபயோகிக்கலாம்.
Ingredients:
- பிஞ்சான அவரைக்காய் 2 கிலோ ( அல்லது தேவையான அளவு )
- உப்பு
Method:
- பெரிய வாணலி அல்லது பெரிய குக்கரின் அடிபாகம் எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் விடவும்.
- நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அலம்பி வைத்துள்ள அவரை அலல்து கொத்ததவங்காய்களை அதில் போடவும்.
- காய்கள் முழ்கும் அளவு தண்ணீர் இருக்கணும்.
- மேலே மூடி போடவும்.
- ஒரு 2 நிமிடம் கழித்து நன்கு கிளறி விடவும்.
- காய்கள் அரை வேக்காடாக இருக்கும் போது உப்பு போடவும்.
- நன்கு வெந்ததும், வடி தட்டில் காய்களை கொட்டவும்.
- தண்ணீரை நன்கு வடித்துவிட்டு , காய்களை வெயிலில் நன்கு காய வைக்கவும்.
- காய்களை உடைக்க வரணும்.
- அப்படி ' மொறு மொறுப்பாக' காய வைக்கவும்.
- காற்று புடாத டப்பாக்களில் சேமிக்கவும்.
- தேவையான போது எடுத்து வறுக்கவும்.
- கலந்த சாதங்கள் மற்றும் மோர் சாதத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
Ingredients:
- கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )
Method:
- குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
- குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.
- இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.
- சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை.
Notes:
- கத்தரிக்காய் வற்றல் - இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.
Ingredients:
- 1 கிலோ கெட்டி அவல்
- 1/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
- 1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 200 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
- உப்பு
Method:
- முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
- பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
- இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
- ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா. வெங்காயம், ஓமம் அல்லது சீரகம் (தேவை இல்லை என்றால் போடவேண்டாம் ) மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
- நன்கு பிசையவும்.
- பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
- காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
- தேவயான போது வறுக்கலாம்.
- கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
- வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
- நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.
Notes:
- அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
- அபாரமாக இருக்கும்
Ingredients:
- ஒபர்ஜினி என்று சொல்லப்படும் குண்டு கத்தரிக்காய் 1 பெரியது
- புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 4 - 5
- எண்ணை 4 டீ ஸ்பூன்
- கடுகு 1/ 2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை கொஞ்சம்
- உப்பு தேவையான் அளவு
- பெருங்காயபொடி 1/4 ஸ்பூன்
Method:
- கத்தரிக்காயை அலம்பி துடைத்து, அதன் மேலே கொஞ்சம் எண்ணெய் தவடவும்.
- காஸ் அடுப்பில், மெல்லிய தணலில் நன்றாக சுட்டுக்கொள்ளவும்.
- எல்லா பக்கமும் நன்கு வேகணும்.
- பக்கத்தில் ஒரு பேசினில் தண்ணி வைத்துக்கொண்டு, சுட்ட கத்தரிக்காயை அதில் போடவும்.
- ஆறினதும் தோலை எடுக்கவும்.
- நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
- புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணிர் விட்டு கரைக்கவும்.
- வாணலி இல் அல்லது இலுப்பக்கரண்டி இல் கடுகு, உளுந்து, பெருங்காயபொடி, கறிவேப்பிலை தாளித்து இதன் மீது கொட்டவும்.
- அருமையான சுட்ட கத்தரிக்காய் கொத்சு ரெடி.
- அரிசி உப்புமாவுடன் ரொம்ப நல்லா இருக்கும்.
Notes:
- உப்புமா கொழுக்கட்டைக்கும் இது நல்லா இருக்கும்
Ingredients:
- விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காய் - 5 - 6 (பொடியாக நறுக்கவும்)
- தக்காளி - 2 (விதை எடுத்து பொடியாக நறுக்கவும் )
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- பூண்டு - 4 பற்கள்
- மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- புளிபேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
Method:
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும்.
- பின்பு அதில் உப்பு, மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கிளறி, பின் புளிபேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கினால், கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ரெடி!!!
Ingredients:
- சோயா சங் 1 கப்
- வெங்காயம் பொடியாக நறுக்கினது 1/2 கப்
- தக்காளி விதை நீக்கி பொடியாக நறுக்கினது 1/ 4 கப்
- பூண்டு பொடி 1 ஸ்பூன்
- துளி எண்ணைவிட்டு வறுத்து அரைத்த மிளகாய் பொடி 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் பொடியான நறுக்கினது 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
Method:
- முதலில் சோயா சங் ஐ நன்கு அலசி தண்ணீரில் ஊறவைக்கவும்.
- நன்கு ஊறினதும் பிழிந்து, மிக்சி இல் பொடியாக துருவவும்.
- வாணலி இல் எண்ணைவிட்டு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
- வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.அரைத்து வைத்ததை கொட்டவும்.
- நன்கு கிளறவும்.
- பூண்டு பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு போடவும்.
- நன்கு கிளறிவிடவும்; அது எல்லாமாக சேர்ந்து 'தொக்கு' போல ஆனதும் இறக்கிவிடவும்.
- அவ்வளவுதான், super taste 'சோயா சங் மசாலா' ரெடி.
- சப்பாத்தி , குபூஸ், 'நான்' எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
- இல்லை தோசைக்கு உள்ளே வைக்கும் மசாலாவாகவும் உபயோகிக்கலாம்.
- அல்லது பிரட் உள்ளே வைத்து சண்ட்விச் செய்யலாம்
Ingredients:
- முட்டை கோஸ் நறுக்கியது 2 கப்
- உப்பு
- மஞ்சள் பொடி ( தேவையானால் )
- பூண்டு 4 - 5 பல் (அரைக்க)
- பச்சை மிளகாய் 4 - 5 (அரைக்க)
- தனியா 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
- பட்டை 1 துண்டு (அரைக்க)
- தேங்காய்த் துருவல் 1 கப் (அரைக்க)
- பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
- கறிவேப்பிலை (அரைக்க)
- குழப்பிய கெட்டி மோர் 1 கப் (அரைக்க)
Method:
- வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கிய கோஸ் ஐ போட்டு, மூடி வேகவைக்கவும்..
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
- மற்றும் ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- பிறகு, வேகவைத்த கோஸ், உப்பு, சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டுங்கள்.
- அடுப்பை சிம் இல் வைத்து, குழப்பி வைத்துள்ள கெட்டி மோரை விட்டு , நன்கு கிளறி 2 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
- பிறகு கறிவேப்பிலை போட்டு இறக்குங்கள்.
- வாசனையான முட்டை கோஸ் தயிர் குருமா ரெடி!
- சப்பாத்தி பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
- எங்க வீட்டில் ஹிட் இது !
Notes:
- தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும
Ingredients:
- இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது 2 கப்
- வெங்காயம் 2
- உப்பு
- பூண்டு 10 பல் (அரைக்க)
- பச்சை மிளகாய் 10 -12 (அரைக்க)
- தனியா 1 டேபிள் ஸ்பூன்(அரைக்க)
- பட்டை 1 துண்டு (அரைக்க)
- தேங்காய்த் துருவல் 1 கப் (அரைக்க)
- பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
- பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2 (தாளிக்க)
- எண்ணெய் 2 - 3 டேபிள் ஸ்பூன் (தாளிக்க)
Method:
- காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள
- வெங்காயத்தை பொடியாக நறுக்கிவையுங்கள்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
- வாணலி இல் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
- வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- பிறகு, வேகவைத்த காய்கறி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
- வாசனையான வெஜிடபிள் தயிர் குருமா ரெடி.
Notes:
- காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டு ஒரு 10 நிமிஷம் கழித்து எடுத்து, துண்டுகளாக்கி, தனியே வாணலி il வேகவைத்து சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது. ரொம்ப குழைந்து விடும்.
- தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும
Ingredients:
- 500 Gms. உருளைக்கிழங்கு
- 250 கிராம் வெங்காயம் - பொடியாக நறுக்கவும்.
- 2 - 4 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 2 -4 பல்லு பூண்டு
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து
- 1/2 கடலை பருப்பு
- உப்பு
- கொஞ்சம் எண்ணெய்
- மஞ்சள் பொடி கொஞ்சம்
- கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
Method:
- உப்பு போட்டு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும்.
- ஆறினதும் , தோலுரித்து,உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
- பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
- பிறகு, வெங்காயம் போடவும், வதக்கவும்.
- இப்போது உருளைக்கிழங்கை போடவும்.
- மெதுவாக கிளறிவிடவும்.
- கொஞ்சமாய் உப்பு போடவும். ( ஏற்கனவே கிழங்கில் போட்டிருக்கோம் )
- கொஞ்சமாய் தண்ணீர் விடவும்.
- அடுப்பை சிம் இல் வைக்கவும்.
- அப்பப்போ கிளறி விடணும் .
- நன்கு சேர்ந்து வரும்போது, கிளறி கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கிடுங்கோ.
- அருமையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.
- இது பூரி இன் இணை என்றே சொல்லலாம்...அவ்வளவு இருக்கும்.
Notes:
- பூரி கிழங்கு என்று நம் தமிழ் நாட்டில் அன்பாக சொல்லப்படும் 'டிஷ்' இது
Ingredients:
- 500 Gms. உருளைக்கிழங்கு
- 250 கிராம் வெங்காயம் - பொடியாக நறுக்கவும்.
- 2 டீ ஸ்பூன் - மிளகாய் பொடி
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து
- 1/2 கடலை பருப்பு
- உப்பு , கொஞ்சம் எண்ணெய்
- மஞ்சள் பொடி கொஞ்சம்
Method:
- உப்பு போட்டு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும்.
- ஆறினதும் , தோலுரித்து, சதுரத்துண்டுகளாய் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
- பிறகு, வெங்காயம் போடவும், வதக்கவும்.
- இப்போது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
- மெதுவாக கிளறிவிடவும்.;மிளகாய் பொடி போடவும்.
- கொஞ்சமாய் உப்பு போடவும். ( ஏற்கனவே கிழங்கில் போட்டிருக்கோம் )
- அடுப்பை சிம் இல் வைக்கவும்.
- அது மெல்ல மெல்ல வதங்கட்டும்.
- அப்பப்போ கிளறி விடணும் .
- நன்கு 'மொரு மொரு'பானதும், கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கிடுங்கோ..அருமையான உருளைக்கிழங்கு கறி தயார்.
- இது சப்பாத்தி , பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
Notes:
- இது எங்கள் வீட்டில் எப்பவும் ஹிட். ................... 'தால் சாவல்' மற்றும் இந்த காய் செய்துவிட்டால் போறும் எங்களுக்கு
Ingredients:
- 1 கப் வேகவைத்த கொத்துக்கடலை
- 1 வெங்காயம் அல்லது ஒரு கொத்து வெங்காயத்தாள்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- கொத்துமல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய் கொஞ்சம்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி
Method:
- வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
- அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஐ போடவும்.
- கொஞ்சம் வதக்கவும்.
- பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- மஞ்சள் பொடி போடவும், அத்துடன் வெந்த கொத்து கடலையை போட்டு நன்கு மசிக்கவும்.
- 1/2 கப் தண்ணீர் விட்டு, மீண்டும் நன்கு மசிக்கவும்.
- உப்பு போட்டு கலக்கவும்.
- நன்கு கொதித்து சேர்ந்தாற்போல வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
- அருமையான கொத்துக்கடலை மசாலா ரெடி.
- பூரி மற்றும் சப்பாத்தி க்கு நல்லா இருக்கும்
Notes:
- வேண்டுமானால் கொத்துக்கடலை வேகும்போதே உப்பு போடலாம்.
- வேண்டுமானால் கொஞ்சம் கரம் மசாலா போடலாம்
Ingredients:
- வேகவைத்த கொத்துக்கடலை 1 கப் ( கடைகளில் கிடைக்கும் டின் கூட ஓகே தான் )
- பூண்டு பொடி 1 ஸ்பூன்
- மிளகாய் பொடி 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா 1/2 ஸ்பூன்
- உப்பி
- எண்ணெய் 1 ஸ்பூன்
Method:
- மிக்சி இல் வெந்த கொத்துகடலையை விழுதாக அரைக்கவும்.
- நீங்கள் 'டின்' கொத்து கடலை உபயோகிப்பதாக இருந்தால், அதை பலமுறை நன்கு அலசவும்.
- உப்பு போடும்போது குறைத்து போடவும்.
- வாணலி இல் எண்ணைவிட்டு, எல்லா பொடிகளையும் போட்டு நன்கு வறுக்கவும்.
- அரைத்து வைத்ததை கொட்டவும்.
- நன்கு பேஸ்ட் போல ஆனதும் இறக்கிவிடவும்.
- அவ்வளவுதான், super taste 'கொத்துக்கடலை மசாலா' ரெடி.
- சப்பாத்தி , குபூஸ், 'நான்' எல்லாவட்ட்ருக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
Ingredients:
- கொள்ளு 1 கப்
- வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
- பச்சை மிளகாய் 2 - 3
- தக்காளி 1 பொடியாக நறுக்கவும்
- உப்பு
- கொத்துமல்லி
- கடுகு,சீரகம் - 1 ஸ்பூன் (தாளிக்க)
- கொஞ்சம் எண்ணெய் (தாளிக்க)
Method:
- முதலில் கொள்ளை இரவே ஊறப்போடவும்.
- அல்லது குறைந்த பக்ஷம் 2 மணி நேரமாவது அது ஊறட்டும்.
- மறுநாள் கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
- வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு,சீரகம் தாளிக்கவும்.
- பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
- அது வதங்கினதும், வெந்த கொள்ளை போடவும்.
- நிறத்துக்கு தேவையானால் மஞ்சள் பொடி போடலாம்.
- அது கொதித்து கெட்டியானதும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
- அருமையான 'கொள்ளு தால் ' ரெடி.
- இதை சப்பாத்தி , பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்
Ingredients:
- இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது 2 கப்
- வெங்காயம் 2
- தக்காளி 3
- தேங்காய்த் துருவல் 1 கப்
- பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2 (தாளிக்க)
- எண்ணெய் 2 - 3 டேபிள் ஸ்பூன் (தாளிக்க)
- இஞ்சி 1 துண்டு (அரைக்க)
- பூண்டு 5 பல் (அரைக்க)
- சோம்பு அரை டீஸ்பூன் (அரைக்க)
- பச்சை மிளகாய் 5 -6 (அரைக்க)
Method:
- காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள
- வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
- தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
- வாணலி இல் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
- வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!
Notes:
- காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டு ஒரு 10 நிமிஷம் கழித்து எடுத்து, துண்டுகளாக்கி, தனியே வாணலி il வேகவைத்து சேர்க்கவேண்டும்.
- குக்கரில் போடக்கூடாது. ரொம்ப குழைந்து விடும்.
- தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும்
Ingredients:
- பட்டாணி 1 கப்,
- பனீர் 200 கிராம்,
- வெங்காயம் 2
- தக்காளி 5,
- இஞ்சி, பூண்டு அரைத்த விழுது,
- முந்திரி அரைத்த விழுது தலா 1 டேபிள் ஸ்பூன்,
- மிளகாய்த் பொடி 2 டீஸ்பூன்,
- தனியா பொடி 1 டீஸ்பூன்,
- மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்,
- சீரகத்தூள் அரை டீஸ்பூன்,
- கரம் மசாலா பொடி அரை டீஸ்பூன்,
- எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்,
- நெய் 1 டேபிள் ஸ்பூன்,
- உப்பு
Method:
- பட்டாணியை துளி உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள்.
- வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
- வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள்.
- அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்ச பொடி , உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள்.
- கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து கொதிக்கவிடுங்கள் .
- ஒரு 2 நிமிடம் கொதித்ததும், நன்கு கிளறி இறக்குங்கள்.
- அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!
Ingredients:
- கத்தரிக்காய் - 5
- உருளைக்கிழங்கு 2
- பெரிய வெங்காயம் 2
- தக்காளி 4
- உப்பு
- கறிவேப்பிலை கொத்துமாள்ளி கொஞ்சம்
- பூண்டு - 2 பல்
- தேங்காய்த் துருவல் 1 கப் (அரைக்க)
- வற்றல் மிளகாய் 6-8 (அரைக்க)
- தனியா 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
- சீரகம், சோம்பு தலா அரை டீஸ்பூன் (அரைக்க)
- கடுகு அரை டீஸ்பூன் (தாளிக்க)
- சோம்பு கால் டீஸ்பூன் (தாளிக்க)
- பிரிஞ்சி இலை 1 (தாளிக்க)
- எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் (தாளிக்க)
Method:
- முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
- பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள்.
- கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
- வாணலி இல், எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு தாளிக்கவும்.
- பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
- உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
- இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.
Ingredients:
- வேகவைத்த உருளை கிழங்கு 2 -3 (தோலுரித்து, சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)
- பச்சை பட்டாணி - வேகவைத்தது 1 கப்
- வெங்காயம் - 1 - பொடியாக நறுக்கிகொள்ளவும்
- பச்சைமிளகாய் - 2
- இஞ்சி - 1 துண்டு தோலெடுத்து , துருவிக்கொள்ளவும்
- பெங்களூர் தக்காளி 2 - விதை எடுத்து பொடியாக நறுக்கவும்
- உப்பு
- சீரகம் 1 டீ ஸ்பூன்
- எண்ணெய் 1 டீ ஸ்பூன்
- நெய் 1 டீ ஸ்பூன்
- மாங்காய் பொடி ( ஆம்சூர் ) 1/2 டீ ஸ்பூன்
- கரம் மசாலா பவுடர் 1/2 டீ ஸ்பூன்
- தனியா பொடி 1 1/2 டீ ஸ்பூன்
- மிளகாய் பொடி 1/2 to 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
- கொத்துமல்லி கொஞ்சம்
Method:
- மிக்சி இல் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி யை மையாக அரைத்துக் கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் மற்றும் நெய் விடவும்.
- சீரகத்தை தாளிக்கவும், அரைத்ததை போட்டு நன்கு வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கணும்.
- அத்துடன், பொடியாக நறுக்கின தக்காளி யை போட்டு நன்கு வதக்கவும்.
- பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை மற்றும் வெந்த பட்டாணியை போடவும்.
- கொஞ்சம் உப்பு போடவும்.
- கொஞ்சம் வதங்கினதும், எல்லா பொடிகளையும் போடவும்.
- அடுப்பை கொஞ்சம் தணித்து வைக்கவும்.
- அப்பப்போ கிளறி விடவும்.
- கொஞ்சம் 'கிரேவியாக' வேண்டுமானால் தண்ணீர் விடவும்; இல்லை உதிர் உதிராக வேண்டுமானால் அப்படியே கிளறி இறக்கிவிடவும்.
- அவ்வளவு தான், சுவையான 'ஆலு மட்டர்' தயார்.
- சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம் .
Ingredients:
- 1 1 /2 கப் கடலை மாவு
- 2 ஸ்பூன் மிளகாய் பொடி
- அரை ஸ்பூன் ஓமம்
- ஒரு சிட்டிகை பெருங்கயப்பொடி
- கால் ஸ்பூன் சோடா உப்பு
- 2 கப் திக்கான மோர்
- அரை ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயப்பொடி
- அல்லது காய்ந்த வெந்தய கீரை
- கறிவேப்பிலை
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- முதலில் ஒரு பேசினில் பாக்கி ஒரு கப் கடலை மாவை போட்டு, ஓமம், சோடா உப்பு, கொஞ்சம் மிளகாய் பொடி, உப்பு போடவும்.
- தண்ணீர் விட்டு பகோடா மாவு போல கரைக்கவும்.
- ஒரு பக்கமாய் வைக்கவும்.
- மோரை நன்கு குழப்பவும்.
- உப்பு, அரை கப் கடலை மாவு, கொஞ்சம் மிளகாய் பொடி, வெந்தய பொடி அல்லது பொடித்த வெந்தய கீரை போட்டு நன்கு கலக்கவும்.
- மாவு கட்டி தட்டாமல் நன்கு கலக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் துளிவிட்டு கொஞ்சம் ஓமம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
- கரைத்த மோரை அதில் விடவும்.
- அது கொதிக்கட்டும். இது தான் 'கடி'
- வாணலி இல் எண்ணெய் வைக்கவும்.
- சூடான எண்ணெய் இல் கரைத்து வைத்துள்ள மாவை எடுத்து பக்கோடாக்கள் போல போடவும்.
- நல்ல பவுன் நிறத்தில் எடுத்து , கொதித்துக்கொண்டிருக்கும் 'கடி' இல் போடவும்.
- இது போல எல்லா மாவும்ஆகும் வரை செய்யவும்.
- பக்கோடாக்கள் மொத்தமும் போட்டதும் ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
- பிறகு 'கடி பகோடாவை' அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- இது ஒரு ராஜஸ்த்தானி டிஷ் , சப்பாத்திக்கு பூரிக்கு ரொம்ப நன்னா இருக்கும்.
Ingredients:
- வெந்தய கீரை - ஒரு பெரிய கட்டு ( ஆய்ந்து, சுத்தப்படுத்தி நறுக்கி வைக்கவும் )
- வெங்காயம் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
- பூண்டு - 4 - 5 பல் - மிகவும் பொடியாக நறுக்கவும்
- பச்சை மிளகாய் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
- ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை (நன்கு பொடிக்கவும்; இது தான் இதன் மசாலா )
- ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை - இதை அப்படியே முழுசாக போட வைத்து கொள்ளுங்கள் .
- ஃபிரெஷ் கிரீம் - 1/4 கப்
- மாங்காய் பொடி - 1 ஸ்பூன் (ஆம்சுர் என் கடைகளில் விற்க்கும்)
- மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
- சர்க்கரை 1/2 ஸ்பூன்
- பால் - 1 கப் (ஃபுல் கிரீம் மில்க் )
- உப்பு
- எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
Method:
- வாணலி இல் எண்ணை விட்டு ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும்.
- வாசனை வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு போட்டு வதக்கவும்.
- இப்ப பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போடவும். கருகாமல் வதக்கவும்.
- நறுக்கி வைத்துள்ள வெந்தய கீரையை போடவும்.
- நன்கு கிளறவும், கீரை பாதி வெந்ததும் பாலை விடவும்.
- கீரை வேகும் வரை அப்ப அப்ப கிளறவும்.
- ஆம்சுர், மிளகாய் பொடி மற்றும் சர்க்கரை போடவும்.
- கிளறவும். உப்பு போடவும்.
- கிரீம் போடவும். நல்லா கொதித்ததும் இறக்கவும்.
- சப்பாத்தி - நான் - உடன் பரிமாறவும்.
Notes:
- இது ஃபிரெஷ் மேத்தி யால் செய்வது. அதாவது வெந்தய கீரையால் செய்வது. கீரை யை மெட்ராஸ் ல வாங்காதீங்க அது குட்டியாக இருக்கும். கொழ கொழ ப்பாக இருக்கும். வட இந்தியாவில் விற்கும்கீரை இல் செய்வது இது.
- இதில் பச்சை சோளம் அல்லது பச்சை பட்டாணி சேர்ப்பதுண்டு.
Ingredients:
- பனீர் - 250 கிராம் ( துண்டமாக்கவும்)
- காய்ந்த மேத்தி இலைகள் ( கசூர் மேத்தி - கடைகளில் கிடைக்கும் ) - 2 டேபிள் spoon
- மலாய் ( பால் ஏடு) - 4 டேபிள் ஸ்பூன்
- முந்திரி விழுது - 1/2 கப்
- மிளகு பொடி - 1 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- பால் - 1/2 கப்
- எண்ணை - 2 ஸ்பூன்
- உப்பு
- தண்ணீர் 1/4 கப்
Method:
- ஒரு வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் போடவும்.
- அது பொரிந்ததும் , வெந்தய கீரையை கையால் நொறுக்கி போடவும்.
- ஒரு கிளறு கிளறி, முந்திரி விழுது, பால் ஏடு போட்டு நன்கு கிளறவும்.
- எண்ணை பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.
- உப்பு மற்றும் மிளகு தூள் போடவும்.
- நன்கு கலக்கவும்
- பிறகு பால் மற்றும் தண்ணீர் விடவும்.
- நன்கு கலக்கவும் , ஒரு கொதி வந்ததும் , நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை
- போடவும்.
- மறுபடி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
- சுவையான பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " தயார்.
- சப்பாத்தி அல்லது நான் உடன் பரிமாறவும்.
Ingredients:
- கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி 1 கப்
- வெல்லம் 1 கப்
- தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
- சோடா உப்பு 1 சிட்டிகை
- ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
- பொறிக்க நெய்
- பூவன் வாழை பழம் 2
Method:
- அரிசியை ஒரு 1/2 மணி ஊறவைத்து அரைக்கணும், மட்டாய் தண்ணீர் விடணும்.
- கடைசி இல் வெல்லம்,வாழை பழம,ஏலப்பொடி,கோதுமை மாவு போடவும்.
- சோடா உப்பு போடவும்
- நன்கு அரைத்து எடுக்கவும்.
- தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்.
- பால் வேண்டுமானாலும் விட்டு அரைக்கலாம்.
- திக் ஆன தோசை மாவு பதத்தில் இருக்கணும்.
- அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும்.
- உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
- மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூன் களால் எடுக்கவும்.
- பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.
- சுவையான அப்பம் தயார்; இதை ஒரு வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.
- Fridge இல் என்றல் மாதக்கணக்கில் வைத்துக் கொள்ளலாம் :)
Notes:
- குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.
Ingredients:
- கம்பு - 1 கப்
- வேர்கடலை அரை கப்
- மைதா அரை கப்
- பொட்டுக்கடலை - கால் கப்
- மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன் பொடித்தது
- வெண்ணெய் - 2 டீஸ்பூன்
- உப்பு
- எண்ணெய் - பொறிக்க
Method:
- கம்பு, வேர்க்கடலையை தனித்தனியே வறுத்து மிக்சியில் மாவாக்கவும்.
- பொட்டக்கடலையையும் மாவாக்கிக் கொள்வும்.
- இத்துடன் மிளகு, சீரகம், மைதா, வெண்ணெய், உப்பு இவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- சிறிது மாவு எடுத்து சற்று கனமாக சப்பாத்தியாக இட்டு டைமண்ட் வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- சுவையான, 'கரகர'பான வேர்க்கடலை கம்பு சிப்ஸ் ரெடி.
- தித்திப்பு வேண்டுமானால் மிளகு, சீரகம் போடாமல் சர்க்கரை பாகில் பிரட்டி செய்யலாம்.
Ingredients:
- 2 கப் கேழ்வரகு மாவு
- 1/2 கப் பொட்டுக்கடலை மாவு
- 1 டீஸ்பூன் மிளகாய் பொடி
- 1/4 டீ ஸ்பூன் பெருங்காய பொடி
- உப்பு
- 1 டீ ஸ்பூன் எள் அல்லது சீரகம்
- 1 டீ ஸ்பூன் நெய்
- பொறிக்க எண்ணெய்
Method:
- எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு கலக்கவும்.
- கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் விட்டு, முறுக்கு மாவுப் பதத்தில் பிசையவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அடுப்பை 'சிம்'மில் வைத்து, முறுக்கு அச்சில் முள்ளு தேன்குழல் தட்டை போட்டு, மாவைப் போட்டு, காயும் எண்ணெயில் பிழியவும்.
- இரண்டு பக்கமும் திருப்பி போடவும்.
- கேழ்வரகு மாவு கருப்பாக இருப்பதால், சரியான பதம் பார்த்து எடுக்கவும் இல்லாவிட்டால் ரொம்ப பொரிந்து கருகிவிடும் புன்னகை
- அருமையான 'கர கர' பான கேழ்வரகு முள்ளு தேன்குழல் தயார்.
- இது அவ்வளவாக எண்ணெய் குடிக்காது.
Notes:
- பொட்டுகடலை மாவுக்கு பதிலாக அரசி மாவும் உபயோகிக்கலாம்.
Ingredients:
- கம்பு அல்லது திணை மாவு-2 கப்
- வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு-1கப்
- நறுக்கிய கொத்தமல்லி-5 தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம்-1/2கப்
- நறுக்கிய பச்சை மிளகாய-2
- எலுமிச்சை சாறு-1 தேக்கரண்டி
- இஞ்சி விழுது-1தேக்கரண்டி
- உப்பு-தேவைக்கேற்ப
- நெய் - சப்பாத்தி செய்ய
Method:
- சலித்து எடுத்து வைக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தேவைக்கு வைத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ரொட்டி செய்வதற்கு பிசைவது போல பிசைந்து கொள்ளவும். பின்னர் நான்ஸ்டிக் தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும்.
- கொஞ்சம் கனமான ரொட்டியாக இடவும்.
- இருபுறமும் நெய்விட்டு எடுக்கவும்.
- சுவையான கம்பு ஆலு ரொட்டி ரெடி.
- இதை பால் அல்லது தயிர் சேர்த்து சூடாக பரிமாறலாம் சுவையாக இருக்கும்.
Ingredients:
- பார்லி 2 கப்
- கோதுமை ரவை 1 கப்
- மிளகாய் வற்றல் 4 -5
- உப்பு
Method:
- பார்லியை நன்கு களைந்து ஒரு 4 மணிநேரம் ஊர வைக்கவும்.
- கோதுமை ரவையை 1/2 மணி ஊர வைக்கவும்.
- பிறகு இரண்டையும் மிளகா உப்பு போட்டு மைய அரைக்கவும்.
- மீண்டும் ஒரு அரைமணி அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு இட்லி வார்க்கவும்.
- ஹெல்தியான இட்லி இது
Notes:
- வேணுமானால் தண்ணிருக்கு பதில் தயிர் உபயோகிக்கலாம். இதே மாவில் தோசையும் வார்க்கலாம் .
Ingredients:
- கேழ்வரகு சேமியா - 1 கப்
- வறுத்த ரவை - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு-தேவைக்கு
Method:
- கேழ்வரகு சேமியாவைப் இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு, பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறவிடவும்.
- ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
- சேமியாவில் சுமாராக தண்ணீர் வடிந்தால்போதும்.
- ஏனென்றால் சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்; அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
- ஒரு பாத்திரத்தில் ஊறின சேமியா மற்றும் ரவையை போட்டு ஒரு 10 நிமிஷம் வைக்கவும்.
- ரவை ஊறினதும், தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கொண்டுவரவும்.
- பிறகு இட்லி தட்டுகளில் என்னை தடவி, இட்லி வார்க்கவும்.
- வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
- கரமான பூண்டு சட்னியும் ரொம்ப நல்லா இருக்கும்.
Ingredients:
- கம்பு மாவு ஒரு கப்
- உப்பு
- நெய்
Method:
- ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு மற்றும் உப்புபோட்டு நன்கு கலக்கவும்.
- கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
- அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
- ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும்.
- மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
- நெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
- சுவையான கம்பு ரொட்டி தயார்.
Notes:
- இந்த மாவு கொஞ்சம் கூட 'பிசுக்கே' இல்லாமல் இருக்கும். விண்டு விண்டு வரும், எனவே சிறிய ரொட்டிகள் செய்வது நல்லது. நிறைய நெய் போடணும், ஏன் என்றால் இது ரொம்ப 'சூடு'. இது நாங்க ராஜஸ்தானில் சாப்பிட்ட பக்குவம். நம்மூரில் எப்படி செய்வார்கள் என்று யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ!
- இது ரொம்ப நல்லா இருக்கும்.
- சைடு டிஷ் : ஒரு கை நிறைய பச்சைமிளகாய் எடுத்துக்கொண்டு பொடியாக நறுக்கவும். வாணலி இல் எண்ணெய் கொஞ்சம் (1 டேபிள் ஸ்பூன் ) வைத்து கடுகு தாளிக்கவும். பச்சைமிளகாய் யை போடவும். மஞ்சள் பொடி போடவும். உப்பு கொஞ்சம் போட்டு வதக்கவும்.
- நன்கு வதங்கினதும் ஒரு முடி எலுமிச்சம்பழம் அதிலே பிழியவும். அடுப்பை சின்னதாக்கவும். நன்கு கிளறி இறக்கவும். உப்பு, புளிப்பு நல்ல காரம் என்று இது இருக்கும். பாஜ்ரா மற்றும் எல்லா ரொட்டிகளுக்கும் சூப்பராக இருக்கும். முயன்று பார்க்கவும்.
Images:
Ingredients:
- தேங்காய் - அரை மூடி
- நெய் அப்பம் பொரிக்க
- தினை - 200 கிராம்
- பொடித்த வெல்லம் - ஒரு கப்
- வாழைப்பழம் - 1
- ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.
Method:
- தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
- தினையை வறுத்து மாவாக அரைக்கவும்.
- வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.
- அப்பக்காரலில் நெய் விட்டு , ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.
Notes:
- சமையல் குறிப்பு க்கு முன் தினை பற்றிய ஒரு சின்ன விளக்கம் புன்னகை ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். ஆங்கிலத்தில் மில்லட் என்பது சோளம், கம்பு கேப்பை (கேழ்வரகு) போன்ற தானிய வகையைக் குறிப்பதாகும்.
Ingredients:
- முன்பே நான் வேறு ஒரு கஞ்சி 'சத்துமாவு கஞ்சி'ஒன்று போட்டுள்ளேன், அது போல த்தான் இதுவும் ஆனால் இதில் பல சிறுதானியங்கள் சேர்த்துள்ளேன்.
- கேழ்வரகு - கால் கிலோ
- கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா இரண்டு டேபிள் ஸ்பூன்
- பொட்டுக்கடலை, கம்பு - தலா நாலு டேபிள் ஸ்பூன்
- முந்திரி, பாதாம் - தலா 10
- ஏலக்காய் - 5
- பார்லி - 4 டேபிள்ஸ்பூன்
- சர்க்கரை தேவைக்கு ஏற்ப
Method:
- கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.
- முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
- வெறுமன வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு ஆனால் காந்தாமல் வறுக்கவும்.
- முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
- முளை விட்ட தானியங்கள் மற்றும் வறுத்து வைத்தவற்றையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
- கஞ்சி போட:
- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
- கட்டி இல்லாமல் இருக்கணும்.
- பிறகு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
- சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும்.
- இதனுடன் சர்க்கரை மற்றும் பால் கலந்து கொடுக்கவும்.
- நல்லா பசி தாங்கும் .
Notes:
- 1 . அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கூட இதைக் கொடுக்கலாம்.
- பெரியவர்களும் குடிக்கலாம்.
- 2 . வேண்டுமானால் கஞ்சி போடாமல் உருண்டை செய்யலாம். இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம் புன்னகை
- 3 . ஒருவேளை முளைவிட்ட தானியங்கள் நன்றாக காயவில்லை என்று நினைத்தீர்கள் என்றால் அவற்றையும் வறட்டு வாணலி இல் வறுத்துக்கொள்ளவும்.
Ingredients:
Method:
Notes:
- சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது .இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன்.
Ingredients:
- முழு பாசிப்பருப்பு - 1 கப்
- துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
- கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
- அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை - சிறிது
- உப்பு - ருசிக்கேற்ப
- எண்ணெய் - தேவையான அளவு
Method:
- பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். (மட்டா தண்ணி விட்டு அரைக்கவும் )
- அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், கொத்தமல்லித்தழை சேருங்கள்.
- கடலை மாவு, அரிசிமாவு, உப்பும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள்.
- எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் அரித்தெடுங்கள்.
- ரொம்ப நல்ல டிபன்.
Ingredients:
- கடலை பருப்பு 1 கப்
- துவரம் பருப்பு 1/4 கப்
- மிளகாய் வற்றல் 6 - 8
- பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்_ 10 அல்லது பெரிய வெங்காயம் 1 - பொடியாக நறுக்கவும்.
- இஞ்சி_ 1 துண்டு - தோல்சீவி, துருவி வைத்துக்கொள்ளவும்.
- பூண்டு_ 2 - 3 - பொடியாக நறுக்கவும்.
- பச்சை மிளகாய் 2 - தேவையானால்
- சோம்பு 1 டீஸ்பூன் - தேவையானால் ஒன்றிரண்டாக பொடித்து போடலாம்
- கொத்துமல்லி
- கறிவேப்பிலை
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி , ஒரு 1/2 மணி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- அப்புறம், ஒருகை பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பாக்கி பருப்பை, மிளகாய் வற்றல் சேர்த்து கொஞ்சம் 'நர நர' வென்று அரைக்கணும்.
- தண்ணீர் மட்டாய் விடணும்.
- அரைத்த மாவை ஒரு பேசினில் போடணும்.
- அதில் பாக்கி சாமான்களை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கணும்.
- மாவு நல்ல கெட்டியாக இருக்கணும், ஒருவேளை கொஞ்சம் தளர இருந்தால், சிறிது அரிசிமாவு போட்டு கலந்துக்கலாம்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, உள்ளங்கை களுக்கு இடை இல் வைத்து அழுத்தி, ஓட்டை போடாமல் , தட்டி எண்ணெய் இல் போடணும்.
- வடைகளை இருபுறமும் திருப்பி விட்டு, நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- இப்போது சூப்பரான மசால் வடை ரெடி!
- 'கரகர'பாக ரொம்ப நல்லா இருக்கும்.
Notes:
- சாப்பிட்டு மீதம் இருந்தால் எலி பிடிக்க வைத்துக்கொள்ளலாம்.
Ingredients:
- ஆமை வடை என்பது 'கடலை பருப்பு ' வடை தான். இதை பண்டிகை நாட்களில் செய்வோம்.
- கடலை பருப்பு 1 கப்
- துவரம் பருப்பு 1/4 கப்
- மிளகாய் வற்றல் 4 - 6
- பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி , ஒரு 1/2 மணி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- அப்புறம், ஒருகை பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பாக்கி பருப்பை, மிளகாய் வற்றல் சேர்த்து கொஞ்சம் 'நர நர' வென்று அரைக்கணும்.
- தண்ணீர் மட்டாய் விடணும்.
- அரைத்த மாவை ஒரு பேசினில் போடணும்.
- அதில் பெருங்காய பொடி, எடுத்து வைத்திருந்த ஊறின பருப்பு, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கணும்.
- மாவு நல்ல கெட்டியாக இருக்கணும், ஒருவேளை கொஞ்சம் தளர இருந்தால், சிறிது அரிசிமாவு போட்டு கலந்துக்கலாம்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, உள்ளங்கை களுக்கு இடை இல் வைத்து அழுத்தி, ஓட்டை போடாமல் , தட்டி எண்ணெய் இல் போடணும்.
- வடைகளை இருபுறமும் திருப்பி விட்டு, நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- இப்போது சூப்பரான பருப்பு வடை ரெடி!
Notes:
- இதில் வெங்காயம் சோம்பு சேர்த்து செய்தால் , 'மசால் வடை' ( முன்காலத்தில் எலி பிடிக்க கூட உபயோகித்தார்கள் )
Images:
Ingredients:
- அரிசி மாவு ஒரு கப்
- கடலை மாவு அரை கப்
- பொடியாக நறுக்கின வெங்காயம் 3/4 கப்
- முந்திரி - பொடிசாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
- நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
- சோடா உப்பு அரை ஸ்பூன்
- உப்பு
- பெருங்கயப்பொடி
- கறிவேப்பிலை
- பொரிக்க எண்ணெய்
- பச்சை மிளகாய் தேவையானால்
Method:
- ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
- பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
- நறுக்கின வெங்காயம் சேர்க்கவும்.
- மட்டாக தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய்,முந்திரி மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
- மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும், அல்லது உருட்டி வைத்துக்கொண்டு எடுத்து போடவும்.
- நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
- 'வெங்காய மெது பகோடா' ரெடி.
- இது வெளியே நல்ல 'கர கர' ப்பாகவும் உள்ளே 'மெத்' என்றும் இருக்கும்.
Ingredients:
- பயத்தம் பருப்பு - 1 கப்,
- புளிப்பில்லாத தயிர் - 2 கப்,
- கேரட் துருவல் - 1 டீஸ்பூன்,
- தித்திப்பு சட்னி,
- பச்சை சட்னி யாவும் தேவைக்கு,
- உப்பு, எண்ணெய் - பொரிப்பதற்கு
- பச்சை மிளகாய் - 2,
- சீரகம் - 1 டீஸ்பூன்.
Method:
- பயத்தம் பருப்பை,களைந்து, ½ மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து, கரகரப்பாக, மட்டாக தண்ணீர்விட்டு அரைக்கவும்.
- பின் சீரகம், உப்பு சேர்த்து கலந்து எண்ணெயை காய வைத்து சிறு சிறு பக்கோடா மாதிரி கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
- 1 கப் தயிருடன், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து பொரித்து வைத்திருக்கும் வடையின் மீது ஊற்றி சிறிது ஊற விடவும்.
- பரிமாறும்போது மீண்டும் மீதி உள்ள தயிரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து வடைகளின் மேல் விடவும்.
- அதன் மேல் தித்திப்பு + புளிப்பு சட்னி, பச்சை சட்னி ஊற்றி துருவிய கேரட் தூவி அலங்கரித்து தரலாம்.
- அல்லது fridge இல் வைத்தும் தரலாம், அருமையாக இருக்கும்.
Notes:
- பச்சை சட்னி - கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை, இஞ்சி சேர்த்து அரைக்கவும். தித்திப்பு + புளிப்பு சட்னிக்கு - புளி விழுது, பேரீச்சை வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
Ingredients:
- மைதா-1 கப்,
- உடைத்த மிளகு பொடி -1/2 டீஸ்பூன்,
- வெண்ணெய் அல்லது நெய் -2 டீஸ்பூன்,
- கருப்பு சீரகம் (அல்லது) சீரகம்-சிறிது,
- உப்பு, எண்ணெய்-தேவைக்கு.
Method:
- நெய்/வெண்ணெய்யுடன் மைதாவை பிசையவும்.
- இது ரவை மாதிரி வரும் போது உப்பு, சீரகம்/கருப்பு சீரகம், மிளகு சேர்த்து நன்கு பிசையவும்.
- சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.
- பின் மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு விருப்பமான வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து , அது சூடானதும், வெட்டி வைத்த சிப்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- ஆறியதும் கலகலவென்று சத்தம் வரும்.
- அதனால் சிலர் இதை 'கல கலா' என்றும் சொல்வார்கள்
Notes:
- மிளகு காரம் பிடிக்காதவர்கள் மிளகாய் பொடி போட்டு பிசையலாம்.
- அல்லது, பொறித்து எடுத்த பிறகு சிப்ஸ் இன் மேல் போட்டு குலுக்கலாம்.
Ingredients:
- மைதா மாவு - 2 கப்,
- நெய் - 1/4 கப்,
- சர்க்கரை - 2 கப்,
- பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு,
- உப்பு - 1/2 சிட்டிகை
Method:
- நெய்யுடன் மைதாவை பிசையவும்.
- இது ரவை மாதிரி வரும் போது உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.
- பின் மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு விருப்பமான வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து , அது சூடானதும், வெட்டி வைத்த சிப்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- பின் வேறு ஒரு வாணலி அல்லது உருளி il சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.
- பொரித்த சிப்ஸ் களை பாகில் போட்டு நன்றாக கிளறி இறக்கவும் .
Notes:
- பாகில் சிறிது ஏலக்காய் பொடி சேர்க்கலாம்.
Ingredients:
- நவராத்திரி சனிக்கிழமை எள்ளு பொடி செய்வது வழக்கம்.
- எள் 1/2 கப்
- வெல்லம் 1/2 கப்
- ஏலக்காய் 2 - 3
Method:
- எள்ளை பொறுக்கவும்.
- விரட்டு வாணலி இல் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்.
- ஆறவிடவும்.
- மிக்சி இல் வெல்லம், ஏலக்காயுடன் போட்டு பொடிக்கவும்
- வேண்டுமானால் உருட்டலாம்.
- அப்படியே கொலுக்கு நைவேத்யம் செய்யவும்.
- சுவையாக இருக்கும்.
Ingredients:
- இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு கடலை பருப்பு,பயத்தம் பருப்பு போன்றவை ஏற்றவை.
- மேலே சொன்ன கடலை பருப்பு அல்லது பயத்தம் பருப்பு ஏதாவது ஒன்று 1 கப்
- மிளகாய் வற்றல் 2 -3
- பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் 1/2 கப்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- தாளிக்க எண்ணை
- உப்பு
Method:
- இது கடலை பருப்பு சுண்டல்
- இந்த இரண்டில் எந்த பருப்பை சுண்டல் செய்வதானாலும், ஊரவைக்க வேண்டியதில்லை.
- தேவையானபோது, நன்கு களைந்து, தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும்.
- சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
- பருப்பு ரொம்ப குழயக்கூடாது.
- ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
- கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
- வெந்த பருப்பை கோட்டவும்.
- நன்கு கிளறவும்.
- உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
- தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
- அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி
Notes:
- இதற்கு குக்கர் கூட வேண்டாம், வாணலி லையே செயலாம். தாளித்ததும் , களைந்த பருப்பை போட்டு, தண்ணீர் விட்டு மூடி அடுப்பை சின்னதாவ வைக்கணும். அப்ப, அப்ப கிளறனும். 'நருக்குனு' வெந்ததும், உப்பு, தேங்காய் துருவல் தூவி இறக்கணும். அவ்வளவுதான்
Ingredients:
Method:
Notes:
- முதலில் என்ன என்ன சுண்டல் கள் செயலாம் என பார்க்கலாம்.
- கொத்துக்கடலை,
- பச்சை பயிறு,
- வேர்கடலை,
- பட்டாணி,
- காராமணி,
- மொச்சை,
- ராஜ்மா,
- கொள்ளு,
- பயத்தம் பருப்பு,
- கடலை பருப்பு
- என சுண்டல்கள் செயலாம்.
- கார சுண்டல்கள் 3 வகையாக சுண்டல்கள் செயலாம்.
- 1. தேங்காய் பருப்பு போட்டு,
- 2. மிளகாய் பொடி போட்டு , அல்லது
- 3. மசாலா அரைத்து போட்டு.
- இனிப்பு சுண்டல்கள் 2 வகையாக செயலாம்.
- வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம்.
- சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு.
Ingredients:
Method:
Notes:
- நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் புன்னகை இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.
- சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் புன்னகை உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன
Ingredients:
- புளிச்சகீரை – 1 கட்டு
- புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
- வெல்லம் – ஒரு சிறிய துண்டு
- உப்பு
- தாளிக்க:
- கடுகு – 1 டீஸ்பூன்,
- பூண்டு – 6 - 8 பல் (பொடியாக நறுக்கி வைக்கவும் )
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
- வறுத்துப் பொடிக்க:
- கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 15
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
Method:
- கீரையை இலைகளாகக் ஆய்ந்து அலம்பித் துடைத்து, ஒரு துணியில் பரப்பி, ஒரு மணி நேரம் வரை உலர விடுங்கள்.
- எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து, சற்று சிவந்ததும் அரித்து எடுங்கள்.
- மீந்துள்ள எண்ணெயில் கீரையை நறுக்கி போட்டு, நன்கு வதக்குங்கள்.
- கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள்.
- வதக்கிய கீரை, புளி, வறுத்த கடுகு, வெந்தயம், மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வதக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தொக்கில் சேர்த்துக் கலக்குங்கள்.
- அருமையான 'கோங்குரா தொக்கு' ரெடி...ஆந்திரர்கள் இதை 'கோங்குரா பச்சடி' என்றே சொல்வார்கள் புன்னகை
- சாதம் போட்டு சாப்பிடனும் என்றால் நிறைய நெய் விட்டுக்கொள்ளுங்கள் இது ரொம்ப சூடு.
Ingredients:
- பெங்களூர் தக்காளி 1 கிலோ
- பூண்டு உரித்தது 200 கிராம்
- மிளகாய் பொடி 200 - 250 கிராம்
- உப்பு அநேகமாய் 100 - 125 கிராம் போதுமானது
- வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 3 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 2 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
- கடுகு 1 டேபிள் ஸ்பூன்
Method:
- தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல், பூண்டையும் போட்டு மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
- ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
- அதில் அரைத்த தக்காளி விழுதை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
- நன்கு கிளறிவிடவும்.
- மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
- நன்கு கிளறி விடவும்.
- கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
- மீண்டும் நன்கு கிளறி விடவும்.
- எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
- நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
- இதுவும் வருஷத்துக்கும் கெடாது .
- சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.
Notes:
- குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.
- பூண்டு பொடி கூட இப்போது கடைகளில் கிடைக்கிறது , அப்படி வேண்டுபவர்கள் , மிளகாய் பொடி போடும் போது 4 - 5 டேபிள் ஸ்பூன் பூண்டு பொடி போட்டு கிளறி இறக்கவும்.
- வாயில் பூண்டு கடி படவேண்டும் என்று நினைத்தால், பூண்டை நறுக்கி எண்ணெய் இல் வதக்கி , பிறகு அரைத்த தக்காளியை சேர்க்கவும்.
- அவசரத்துக்கு ஓர் 2 - 3 தக்காளிகளை அரைத்து வதக்கி, இட்லி க்கு தோசைக்கு தொட்டுக்க வைத்துக்கொள்ளலாம். அந்த சமையங்களில் எண்ணெய் குறைவாக விட்டாலே போதுமானது.
Ingredients:
- பெங்களூர் தக்காளி 1 கிலோ
- மிளகாய் பொடி 150 - 200 கிராம்
- உப்பு அநேகமாய் 75 - 100 கிராம் போதுமானது
- வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
- கடுகு 1 டேபிள் ஸ்பூன்
Method:
- தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல் மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
- ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
- அதில் அறத்த தக்காளியை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
- நன்கு கிளறிவிடவும்.
- மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
- நன்கு கிளறி விடவும்.
- கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
- மீண்டும் நன்கு கிளறி விடவும்.
- எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
- நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
- இதுவும் வருஷத்துக்கும் கெடாது புன்னகை
- சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.
Notes:
- குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.
Ingredients:
- நல்ல புளிப்பு மாங்காய் 1 கிலோ தோல் சீவி துருவி வைக்கவும்.
- மிளகாய் பொடி 200 கிராம்
- உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
- வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
- கடுகு 1 டேபிள் ஸ்பூன்
Method:
- மாங்காய்களை அலம்பி துடைத்து தோல் சீவி, துருவவும்.
- ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
- அதில் துருவின மாங்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
- நன்கு கிளறிவிடவும்.
- மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
- நன்கு கிளறி விடவும்.
- கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
- மீண்டும் நன்கு கிளறி விடவும்.
- எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
- நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
- வருஷத்துக்கும் கெடாது.
Notes:
- மாங்காய் தொக்கு ! - என்னைப்பொருத்த வரை உலகத்திலேயே அருமையான தொக்கு இது என்பேன். 'மாதா ஊட்டாத சாதத்தை மாங்காய் ஊட்டும்" என்று என் தாத்தா சொல்வார்.
- குறிப்பு : கொஞ்சம் புளிப்பு கம்மியாக இருக்கணும் தொக்கு என்று நினைப்பவர்கள் பெங்களுரா மாங்காய் இல் தொக்கு போடலாம். அல்லது ஊறுகாய் இல் வெல்லம் கொஞ்சம் போடலாம் புன்னகை எங்க அப்பாவுக்காக தனியாக நான் பங்களுராவில் தொக்கு போடுவேன்
Images:
Ingredients:
- எலுமிச்சம் பழம் - 1/2 கிலோ
- உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
- கருப்பு உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
- மிளகாய் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப் பொடி - 1/4 டீ ஸ்பூன்
- ஓமம் - 3 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை - 1 cup
- கடுகு 1/4 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா பொடி 1 டேபிள் ஸ்பூன்
Method:
- எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, நான்காக பிளந்து வைக்கவும்.
- ஒரு பேசினில் மற்ற சாமான்களை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
- இந்த மசாலாவை எல்லா எலுமிச்சங்காய்களிலும் அடைக்கவும்.
- ஒரு ஈரம் இல்லாத ஜாடி இல் அடுக்கவும் .
- அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.ஆனால் இதை 1 மாதம் கழித்து தான் உபயோகப்படுத்த துவங்கலாம்புன்னகை
- அதுவரை தினமும்ஜாடி இன் வாயை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் வைக்கணும்.
- இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
- சப்பாத்தி , சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Ingredients:
- எலுமிச்சம் பழம் - 1 கிலோ
- உப்பு - 100 - 150 கிராம்
- பச்சை மிளகாய் - 200 கிராம்
- வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
- பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 50 கிராம்
- கடுகு - 1 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
- இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
Method:
- எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
- பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
- இஞ்சியை தோல் சிவி துருவவும்.
- எலுமிச்சம் துண்டங்களுடன் போடவும்.
- ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
- அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி, மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
- நன்கு குலுக்கவும்.
- அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
- ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
- ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
- இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
- சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
- இதை 'அம்ருத்' என்று சொல்வார்கள்
Images:
Ingredients:
- எலுமிச்சம் பழம் - 1 கிலோ
- உப்பு - 100 - 150 கிராம்
- மிளகாய்ப் பொடி - 200 கிராம்
- வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
- பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - கால் கிலோ ,
- கடுகு - 1 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
Method:
- எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
- அதன் மேல் உப்பைத் தூவவும்.
- பிறகு மிளகாய் பொடி தூவவும்.
- அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
- நன்கு குலுக்கவும்
- ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
- அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
- ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
- ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
- இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
- சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Ingredients:
- எலுமிச்சம் பழம் - 1 கிலோ
- உப்பு - 100 - 150 கிராம்
- மிளகாய்ப் பொடி - 200 கிராம்
- வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
- பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - கால் கிலோ ,
- கடுகு - 1 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
Method:
- எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- பின்பு வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், எலுமிசம்பழ துண்டுகளை போடவும்.
- நன்கு கிளறவும்.
- கொஞ்சம் அது வதங்கட்டும்.
- இப்போது உப்பு போடவும்; மீண்டும் நன்கு கிளறவும்.
- காய் பாதி வெந்ததும், வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போடவும்.
- நன்றாகக் கிளறவும்.
- எல்லாமாக நன்கு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, மிளகாய்ப் பொடி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
- ஆறினதும் பாட்டில்களில் சேமிக்கவும்.
- உடனே யே தொட்டுக்கலாம்.
- இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
- சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Ingredients:
- புளிப்பான மாங்காய் - 10
- மிளகாய்ப் பொடி - 200 கிராம்
- உப்பு
- வெந்தயம் - 100 கிராம்
- வெள்ளை கொத்து கடலை 1/2 கிலோ
- எண்ணெய் 1 கிலோ
Method:
- இந்த ஊறுகாய்க்கு எல்லாமே பச்சையாகத்தான் போடணும்.
- மாங்காயை நன்கு அலம்பி , துடைத்து, கொட்டையும் சேர்த்து, ஒரு காயை 16 துண்டுகளாக நறுக்க வேண்டும்.
- எல்லா துண்டுகளுமே ஓட்டுடன் இருந்தால் நல்லது.
- உள்ளிருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்றாகத் துணியால் துடைக்கவும்.
- சுத்தமாக உலர்ந்த ஜாடியில் அல்லது ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மாங்காய் துண்டங்களை போடவும்.
- அதன் மேலே உப்பு மற்றும் மிளகாய் பொடி போடவும்.
- நன்கு குலுக்கவும்.
- மாங்காய் துண்டங்களின் மேல் உப்பும் மிளகாய் பொடியும் நன்கு ஒட்டி இருக்கணும்.
- இப்போது வெந்தயம் மற்றும் கொத்து கடலையை போடணும்; நன்கு குலுக்கணும்.
- இப்போது எண்ணெய் விடணும், மாங்காய் இன் மேலே எண்ணெய் மிதக்கும்படி இருக்க வேண்டும். ஈரம், காற்று படக் கூடாது.
- நன்கு மூடி வைக்கணும்.
- தினமும் நன்கு 'அடி ஓட்ட' கிளறி விடணும்.
- ஒரு வாரம் கழித்து உபயோகிக்க துவங்கலாம்.
- அருமையான ஊறுகாய் இது.
- தயிர் சாதம் என்று இல்லை பருப்பு சாம்பார் சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம்; ஆவக்காய் சாதமே சாப்பிடலாம்
Ingredients:
- மாங்காய் - 10
- மிளகாய் - 150 கிராம்
- உப்பு
- வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 1 - 1 1/2 கப்
- கடுகு 2 டீ ஸ்பூன்
Method:
- மாங்காயை நன்கு அலம்பி, துடைத்து, கொட்டை எடுத்துட்டு , சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு வாணலி இல் துளி எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு பொடிக்கவும்.
- 'கர கர'ப்பாக அரைக்கவும்.
- துண்டங்களை ஒரு பேசினில் போட்டு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, வெந்தயப்பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு நன்றாகக் குலுக்கவும்.
- ஒவ்வொரு துண்டத்திலும் எல்லாம் 'கோட்' ஆகி இருக்கணும்.புன்னகை
- வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும் .
- அதை மாங்காய் துண்டங்கள் மேல் கொட்டவும்.
- கொட்டி னதை நன்கு கலக்கவும்.
- ஒரு 2 நாள் கழித்து நன்றாக ஊறின பின் சாப்பிடலாம்.
- ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
Ingredients:
- மாவடு - 1 படி
- கல் உப்பு - 1 கப்
- மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
- விளக்கெண்ணெய் எண்ணெய் 1/2 cup
- அரைக்க :
- மிளகாய் வற்றல் - 30 -35
- கடுகு - 2 டேபிள் ஸ்பூன்
- விரலி மஞ்சள் - 2 -3
Method:
- உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
- மிளகாய் வற்றல்,கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மிளகாய் பொடி மட்டும் மஞ்சள் பொடி கலவையை , கலந்து பிசிறிக் கொள்ளவும்.
- ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் கொஞ்சம் மாவடுவை போடவும்.
- பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே கொஞ்சம் மாவடு, அதன்மேலே ஒரு உப்பு மறுபடி மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
- மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
- அப்பவே உபயோகிக்கலாம் .
- ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
- மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
- துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்
Ingredients:
- மாவடு - 1 படி
- கல் உப்பு - 100 கிராம்
- மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
- விளக்கெண்ணெய் எண்ணெய் 4 டீஸ்பூன்.
Method:
- உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
- பெரிய ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் மாவடுவை போட்டு விளக்கெண்ணெய் எண்ணெய் விட்டு நன்றாகக் குலுக்க வும்.
- பிறகு உப்பு, மஞ்சள் பொடி போட்டு மறு முறை குலுக்கவும்.
- அப்படியே வைக்கவும்.
- மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
- ஒரு நாலு நாளில் ஊறிடும்.
- ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
- மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
- துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்.
Ingredients:
- காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 1 கப்
- மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன்
- தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் உப்பு
- வறுத்து பொடித்த வெந்தய பொடி 1/4 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/2 டீ ஸ்பூன்
- தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்
Method:
- மாங்காய் வற்றலை ஒரு 5 நிமிஷம் வென்னீரில் போடவும்.
- தண்ணிரை வடி கட்டவும்.
- வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மாங்காய் மேல் கொட்டவும்.
- அதிலேயே மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி மற்றும் உப்பு போட்டு குலுக்கவும்.
- சுவையான ஊறுகாய் தயார்.
Notes:
- இந்த ஊறுகாய் 'இன்ஸ்டன்ட் ஊறுகாய்' காய்ந்த மாங்காய் இருந்தால் போறும், சில நிமிடங்களில் தயாரிக்கலாம்.
- மாங்காய் வத்தல் - நல்ல புளிப்பு மாங்காய் களில் இதை போடலாம். நன்கு காய வைத்து வைத்துக்கொண்டால், மாங்காய் சீசன் இல்லாத போது, இந்த வத்தலை உபயோகித்து , குழம்பு மற்றும் ஊறுகாய் போடலாம். முதலில் மாங்காய் வத்தல் போடும் முறையை பார்ப்போம்.
- தேவையானவை:
- புளிப்பான மாங்காய் தேவையான அளவு.
- உப்பு
- செய்முறை:
- மாங்காயை நன்கு அலம்பி துடைக்கவும்,
- பிறகு அதை செதில் செதிலாக வெட்டவும்.
- உப்பு போட்டு குலுக்கி வைக்கவும்.
- 'சல சல' வென தண்ணிர் விட்டுக்கொள்ளும்.
- மாங்காய் துண்டங்களை மட்டும் தினமும் வெயிலில் வைக்கவும்.
- மாலை இல் மீண்டும் உப்பு நீரில் போடவும்.
- இப்படி யே உப்பு நீர் முழுவதும் வற்றும் வரை செய்யவும்.
- பிறகு மாங்காய் துண்டங்களை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து பத்திரப்படுத்தவும்.
Ingredients:
- பெங்களுரா மாங்காய் - 1 ( கிளிமூக்கு மாங்காய் )
- மிளகாய் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- வறுத்துப் பொடித்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
- பெருங்காய பொடி - 1 டீஸ்பூன்.
- தாளிக்க:
- நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டேபிள்ஸ்பூன்
Method:
- மாங்காயைக் அலம்பி துடைத்துப் பொடியாக நறுக்கவும்.
- அதை ஒரு பேசினில் போடவும் .
- அதன் மேல் சுற்றிலும் உப்பைத் தூவவும்.
- பிறகு மிளகாய் பொடி தூவவும்.
- அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
- ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே மாங்காயின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
- அவ்வளவுதான், இதை உடனே யே தொட்டுக்கொள்ளல்லாம்.
- கல்யாணம் மற்றும் சீமந்தங்களில் இப்படி செய்வார்கள் , அதனாலேயே இந்த பேர் வந்தது
Notes:
- இப்ப மாங்காய் சீசன் அல்லவா, அதனால் முதலில் மாங்காய். அதிலும் இது ரொம்ப சிம்பிளான ஊறுகாய் - 'கல்யாண மாங்காய்' இதை 1 வாரம் வைத்துக்கொள்ளலாம். பிரிட்ஜ் இல் வைத்தால் 1 மாதம் வைத்துக்கொள்ளலாம்.
Images:
Ingredients:
- Sugar 2 cups
- Fine Wheat Rava 1 cup
- Ghee 2 tab sp
- Kesari powder or yellow color 1/2 sp
- Cashews 1 tab. Sp crushed
- raisins 10 – 12 wash and clean
- Saffron strings 10 -12
Method:
- Heat the ghee and fry the cashews and raisins and keep aside.
- Fry the wheat rava in the ghee.
- Add the kesari powder to the 2 cups water and add to the fried wheat rava.
- Keep stirring so that no lumps are formed.
- You can close the lid for some time.
- After checking ( whether it cooked or not) add sugar.
- Mix well.
- Allow it to cook for a while.
- Add saffron stings, mix well.
- Add fried cashewnuts and kis mis and mix well.
- Serve hot or cold.
Ingredients:
- Cooked Rice - 1/2 Cup
- 150 ml Milk
- 100 gms Cashew
- Safron / Cardamom Powder (Optional)
- Sugar
- Water
Method:
- Put rice, cashew, milk, sugar in mixer and mash
- Transfer to a vessel and bring it to boil. (Use low flame)
- Add water as it boils. And stir continuously.
- Remove from flame & serve.
Notes:
- You can serve it hot or cold. By the way, its really difficult to wait till it cools down, you know !
Ingredients:
- Wheat Flour
- Ghee
- Sugar
- Cashew Nuts
- Kismis
- Cardamom Powder
Method:
- Take 1 ½ table spoon of wheat flour and 1 tab sp ghee.
- Just pour ghee in a pan and fry wheat flour well.
- With in a min or two it will fry well.
- Add water into it. Mix well.
- In one min. it will cook.
- Add 2 tab of sugar and mix well.
- Remove from the fire. I used to eat as it is or, with chappati.
- When you want to eat this sweet with chappati, don’t put salt for chappati.
- If you want you can fry cashew nuts or kismis in ghee before you fry wheat flour. Or add ‘cardamom powder’.
- Your Yummy Magic Sweet is ready.
Notes:
- You can prepare this with in 5 min.
Ingredients:
- One boiled potato (always boil potato with salt)
- 5 – 6 bhel puri. (Now-a-days you get fried “puries” in shops. In one bag there will be 20 – 30 “puries”)
- 5 – 6 Methi patties (This also you will get in shops. Haldirams is the best)
- 1 Onion, chopped
- 2 – 3 green chilly chopped
- 2 – 3 sp Haldirams alu sev or bujjia sev or rice pori
- 10 – 12 Potato chips
- 1 tomato (half ripe), chopped
- Tomato sauce
- Soya sauce
- Salt
Method:
- Just mix every thing and eat
Notes:
- You can add fried corn flakes, fried and crushed papped or vathal
- You can put some fresh coriander leaves in this.
Images:
Ingredients:
Method:
- Use small cooker and for that use 'our school time tiffen box' . This way, you can cook just 1/2 cup rice and along with that you can cook some veg.& dal for 'koottu' or you can keep 1 tab spoon dal for sambar.
- Make 'potato spicy curry' , and use it as side dish, use it as 'masala' for masala dosa. Or Use the left over potato spicy curry, to make 'pav baji' . Just add 'pav baaji' masala in it and toast bread. that is all your Yummy pav baaji is ready to eat.
- While making Oats, just add one or two spoons 'Oval tin' or 'Complan' with milk. Your delicious Oats is ready.
- If I want only 'Koottu sadam' I will keep rice + yellow moong dal + cut veg.( beans, carrot, cabbage or chow chow..) togather in the cooker. After opening the cooker pour 1 cup water in that. Mix well. Add 'kuttu podi', salt and curry leaves in that. Just keep it on the stove. In another stove, make seasoning if you want. Add the seasoning to this. Mix well and eat !
- If you have Bread, take 2 slices of bread apply 'Puli Paste', and eat. If you want you can toast the bread.
- Make a quick & delicious soup, take one packet of 'Maggi Masala' ( to prepare maggi, I will use my own masala, and I will always keep these masala packets to make some other dishes). In a coffee mug put maggi masala, 1 sp tomato paste and pour 200 ml water. MW for 2 min. Your soup and toast is ready to eat.
- To make 'poricha kootu' you use 'kootu podi' generally. Instead of that if you use 'dosa milagai podi' especially containing 'til', will give a different taste with good aroma. No need to add coconut also.
- Just fry bell pepper and onion with agino moto and salt, in small quantity of oil. Use this as side dish for chappati or mix with cooked rice or with cooked noodles. You can stuff this in bread also.
- Pour 2 sp oil in a pan. Crush 1 packet of maggi and fry. Remove and put it on a paper towel. Put the fried maggi in a container and add salt, asafetida and red chilly powder.Shake well by putting the lid. Enjoy the 'Maggi Sev'Bow You can add garam masala also.
- Instead of 'Rasam Powder', you can use maggi masala and 1 sp crushed black pepper and cumin seeds to make Rasam. If you dont have time to cook the thur dal for rasam replace it with 1 sp of 'parrapu podi'
- You can add organo salt or magi salt or garam masala powder or ‘zater’ in the dough to get many varieties of masala chappati. You can also add ‘ Batsha’s pav baaji masala in the dough.
- If you want to make chappati round , first just press the dough in the chappati maker ( not the electrical one, the old one) so you will get a small round of chappati. Then you make it slightly big. Amma trained me like this only. Now a days without chappati maker’s help I will make ‘pakka’ round chappati.
- You can make sweet chappati or fruit chappati. While mixing the flour, you can add banana or apple to make fruit chappati.
- If you want sugar chappati add one or two tsp. Sugar while mixing the flour. Then eat with sugar syrup or honey.
- I used to stuff chappati with mashed potato and panner masala. They are my favorites.
Ingredients:
- Peas (fresh one) 1 cup
- Wheat flour 1 1/2 cup
- Milk 1/2 cup
- Salt
Method:
- Grind green peas with a little bit of water
- In a food processor put wheat flour and ground peas
- Add milk and salt
- Make a thick chappati dough
- Make chappati and enjoy
Notes:
- If you want you can add green chilly while grinding peas
Ingredients:
- Wheat flour 10 spoons
- Aats 2 1/2 spoons
- Water
- Salt to taste
Method:
- Mix all in a food processor
- Make chappati
- You will get very soft chappatis
- You can make 5 chappati out of this quantity
Ingredients:
- அதற்கான அளவு:
- பச்சரிசி - 2 கப்,
- முழு உளுத்தம் பருப்பு - அரை கப்,
- உப்பு - ருசிக்கேற்ப.
Method:
- அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.
- உப்பு சேர்த்து நன்கு கையால் கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.
- பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான்
Ingredients:
- கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி 1 கப்
- வெல்லம் 1 கப்
- தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
- சோடா உப்பு 1 சிட்டிகை
- ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
- பொறிக்க நெய்
- பூவன் வாழை பழம் 2
Method:
- அரிசியை ஒரு 1/2 மணி ஊறவைத்து அரைக்கணும், மட்டாய் தண்ணீர் விடணும்.
- கடைசி இல் வெல்லம்,வாழை பழம,ஏலப்பொடி,கோதுமை மாவு போடவும்.
- சோடா உப்பு போடவும்
- நன்கு அரைத்து எடுக்கவும்.
- தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்.
- பால் வேண்டுமானாலும் விட்டு அரைக்கலாம்.
- திக் ஆன தோசை மாவு பதத்தில் இருக்கணும்.
- அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும்.
- உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
- மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூன் களால் எடுக்கவும்.
- பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.
Notes:
- அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.
Ingredients:
- கொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
- வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
- வெந்த உருண்டைகளை போட்டு கிளறவு.
- அடுப்பை சின்னதாக்கவும் .
- தோசை மிளகாய் பொடி தூவி கிளறி இறக்கவும்
- 'மணி கொழுக்கட்டைகள்' தயார்
- ரொம்ப சுவையாக இருக்கும்.
Method:
Images:
Ingredients:
- அரிசி மாவு 2 கப் (களைந்து உலர்த்தி அரைத்தது)
- உப்பு 1 சிட்டீகை
- நெய் 1 டீ ஸ்பூன்
- தண்ணீர் 1 1/2 முதல் 2 கப்
Method:
- உருளி அல்லது ஆழமான 'non stick pan' இல் தண்ணீர் ஊற்றவும்
- அது நன்கு கொதிக்கும் பொது, உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
- அடுப்பை சின்னதாக்கி மாவை கொட்டி கிளறவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
- தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.
- நன்கு உருண்டு வந்ததும் முடிவைக்கவும்.
- சொப்பு செய்யும் முறை :
- கொஞ்சம் ஆறினதும், நன்கு அழுத்தி பிசையவும்.
- மாவிலிருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்துக்கொண்டு, விரல்களால் ஓரத்தை அழுத்திக்கொண்டே கப் போல் செய்யவும்.
- கட்டைவிரலை நடுவில் அழுத்திக்கொண்டு, மற்ற விரல்களால் ஓரத்தை அழுத்தவும்.
- சிறிய கப் வடிவம் வந்ததும், செய்து வைத்துள்ள பூரணத்தை ( தேங்காய் பூரணம், உளுந்து பூரணம்,எள் பூரணம், கடலை பருப்பு பூரணம் ) வைத்து உள்ளங்கை யை குவித்து கப் இன் ஓரங்களை ஒன்றாக சேர்த்து குவிக்கவும்.
- குவித்ததை அழுத்தி மோதகம், அதாவது கொழுக்கட்டையாக பிடிக்கவும்.
- இட்லி தட்டில் வைத்து ஆவி இல் வேக விடவும்.
- கொழுக்கட்டை தயார்.
- சொப்பு செய்ய வாரா விட்டால்?.....
- கையால் சொப்பு செய்ய வராவிட்டால், இப்படி செய்து பாருங்கள்.
- சாதாரணமாக, வரட்டு அரிசி மாவில் செய்வதை விட களைந்து உலர்த்தின மாவில் ஈசி யாக செய்ய வரும்.
- அப்படி வராவிட்டால், ஒரு சின்ன உருண்டை மாவை எடுத்துக்கொண்டு, 2 பிளாஸ்டிக் பேபரின் நடுவில் வைத்து கையால் அல்லது அப்பாளாக்குழவியால் மெல்ல ஒரு ஓட்டு ஒட்டவும்.
- ஒரு சிறிய வட்டமாக மாவு மாறும்.
- அதை கை இல் எடுத்து, உள்ளங்கை இல் வைத்துக்கொண்டு, சிறிய ஸ்பூன் ஆல் பூரணத்தை எடுத்து அதில் வைத்து மெல்ல குவிக்கவும்.
- அல்லது,
- அதை ஜஸ்ட் இரண்டாக மடித்து ஓரங்களை அழுத்திவிடவும்.
- இது 'சோமாஸ்' போல இருக்கும்.
- அல்லது,
- கோதுமை மாவை சப்பாத்தி க்கு பிசைவது போல் மாவு பிசைந்து, சிறிய சிறிய பூரி கள்ளாகவோ , அல்லது ஒரே பெரிய சப்பாத்தி போலோ இடவும்.
- ஒரு டப்பா மூடியை கொண்டு சப்பாத்தி யை வட்ட வட்டமாக கட் செய்யவும்.
- அதன் நடுவில் பூரணத்தை வைத்து குவித்து முடி, கொழுக்கைட்டை கள் செய்யவும்.
- இது போல் மொத்தமும் செய்து விட்டு, அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து எல்லாவற்றைய்ம், நன்கு பொரித்து எடுக்கவும்.
- இப்படி செய்வதால், 2 - 3 நாள் வைத்திருந்து சாப்பிடலாம்.
- முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
- இது பத்து இல்லை
Ingredients:
- வறுத்த, பன்சி ரவா 1 கப் ( அதாவது சோள ரவை )
- மிளகு சீரகம் 2 டீ ஸ்பூன் ( உடைத்து வைத்துக்கொள்ளவும் )
- தாளிக்க:
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை 1 கைப்பிடி
- எண்ணை 3 - 4 ஸ்பூன்
- நெய் 2 -3 ஸ்பூன்
- முந்திரி உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்
Method:
- ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
- தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
- அதிலேயே உடைத்த மிளகு சீரகத்தையும் போடவும்.
- இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பன்சி ரவையை கொட்டி கிளறவும்.
- நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
- அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
- ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
- நல்ல சுவையான 'பன்சி ரவா உப்புமா ' தயார்.
- மஞ்சளாக பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
- தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.
Ingredients:
- கெட்டி அவல் 2 கப்
- வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
- பச்சை மிளகாய் 6 - 8
- இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
- உருளைகிழங்கு - பொடியாக நறுக்கியது 1 கப்
- தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
- காரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
- தாளிக்க:
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
Method:
- கெட்டி அவலை தண்ணீர் விட்டு இரண்டுமுறை அலசவும்.
- அழுக்குகள் போனதும் நன்கு பிழிந்து வடிய விடவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
- வெங்காயம் போடவும்.
- பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கு மற்றும் காரட் துருவல் போட்டு வதக்கவும்.
- நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
- இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பிழிந்து வைத்துள்ள அவலை போட்டு கிளறவும்.
- இது நன்கு வெந்ததும், அதன் மேலே கொத்துமல்லி மற்றும் தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
- எலுமிச்சை சாறு விட்டு ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
- இந்த வெஜிடபுள் அவல் உப்புமா வெறுமனே வே ரொம்ப நல்லா இருக்கும்.
Ingredients:
- உடைத்த அரிசி அல்லது குருணை - 2 cup
- நல்லெண்ணெய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- வற்றல் மிளகாய் 4 -5
- உப்பு தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு எல்லாம் 1 ஸ்பூன் அளவில் எடுத்துக்கோங்கோ + ஒரு கைப்பிடி அளவு பச்சை வேர்கடலை
- பெருங்காயம் - அரை டீஸ்பூன்
- புளி ஜலம் - 3 கப் அல்லது புளி பேஸ்ட் 2 டீ ஸ்பூன்
Method:
- ஒரு நான்ஸ்டிக் அல்லது இலுப்பச்சட்டில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை , பெருங்காயம் வேர்கடலை எல்லாம் தாளிக்கவும்.
- ஒரு கப்க்கு 2 முதல் 2 1/2 கப் தண்ணீர் என்று அளந்து கொண்டு, புளி ஜலம் + தண்ணீர் வாணலி இல் விடவும்.
- உப்பு போடவும்.
- அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கிவிட்டு, உடைத்து வைத்துள்ள குருணையை அதில் போடவும்.
- நன்கு கிளறவும்.
- மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
- அப்பப்போது ஒருமுறை கிளறி விடவும்.
- தண்ணீர் தேவையானால் விடவும்.
- ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
- வெறும் தயிர அல்லது ஒன்றுமே கூட வேண்டாம் இதற்கு , அப்படியே ரொம்ப நல்லா இருக்கும்
Ingredients:
- உடைத்த அரிசி அல்லது குருணை (பருப்புகளுடன் ) - 2 cup
- தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 1 கப்
- ப.மிளகாய் 3 (தேவையானால் )
- வற்றல் மிளகாய் 4 -5
- உப்பு தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு எல்லாம் 1 ஸ்பூன் அளவில் எடுத்துக்கோங்கோ
- பெருங்காயம் - அரை டீஸ்பூன்
- உடைத்த மிளகு சீரகம் - 1 டீ ஸ்பூன்
Method:
- ஒரு நான்ஸ்டிக் அல்லது இலுப்பச்சட்டில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை , பெருங்காயம் எல்லாம் தாளிக்கவும்.
- ஒரு கப்க்கு 2 முதல் 2 1/2 கப் தண்ணீர் என்று அளந்து கொண்டு, வாணலி இல் விடவும்.
- உப்பு போடவும்.
- அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கிவிட்டு, உடைத்து வைத்துள்ள குருணையை அதில் போடவும்.
- நன்கு கிளறவும்.
- மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
- அப்பப்போது ஒருமுறை கிளறி விடவும்.
- தண்ணீர் தேவையானால் விடவும்.
- நன்கு வெந்ததும், தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
- ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
- தேங்காய் சட்னி, கத்தரிக்காய் கொத்சு அல்லது வெறும் தயிரு கூட போறும்.
Notes:
- தேங்காய் துருவலை வெறும் வாணலி இல் வறுத்தும் போடலாம்
Ingredients:
- 2cup பயத்தம் பருப்பு
- 2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
- 2 1 /2cup நெய்
- 2 tabsp உடைத்த முந்திரி
- ஏலப்பொடி
Method:
- பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும்.
- மிக்ஸ்யில் பொடிக்கவும்.
- ஒரு சல்லடை இல் போட்டு சலிக்கவும்.
- மீண்டும் அரைக்கவும்.
- ஒரு பேசினில் போடவும்.
- பொடித்த சர்க்கரையும் போடவும்.
- ஏலப்பொடி போடவும்.
- ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து அதன் மீது கொட்டவும்.
- நன்கு கலந்து உருண்டை பிடிக்கவும்.
- That is all. 'மா லாடு' ரெடி.
Notes:
- நீங்கள் மெட்ராஸில் இருப்பவரானால் வறுத்த பயத்தம் பருப்பு , சர்க்கரை , ஏலம் எல்லாம் போட்டு மாவு மிஷின்ல் கொடுத்தால் சுலபமாக அரைத்து தருவார்கள். நீங்கள் வீட்டில் நெயில் முந்திரி பொரித்து போட்டால் போரும்.
- நான் எப்பவும் அதுபோல் வீட்டில் வைத்து இருப்பேன். எப்பவேண்டுமாலும் 'மா லட்டு' தயார் பண்ணலாம்.அதுவும் நொடியில்.
- இந்த பொடியை பாலில் கரைத்து கொதிக்க வைத்தால், சுவையான பயத்தம் கஞ்சி / பாயாசம் ரெடி. நீங்களும் முயன்று பாருங்களேன்.
Ingredients:
- மிஷின் (மெல்லிசு ) அவல் 1 /2 கப்
- சக்கரை 3/4 கப்
- ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
- முந்திரி திராக்ஷை 1 டேபிள் ஸ்பூன்
- நெய் 5 டேபிள் ஸ்பூன்
- பால் 1 கப்
Method:
- ஒரு உருளி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
- அதிலேயே அவலை போட்டு வறுகக்வும் .
- அவல் நன்கு வறுபட்டதும், பாலை விடவும்.
- அவல் நன்கு வெந்ததும் சக்கரை சேர்க்கவும்.
- ஏலப்பொடி போட்டு கிளறி கெட்டியானதும் இறக்கவும்.
- அவல் கேசரி தயார்
Ingredients:
- மிஷின் (மெல்லிசு ) அவல் 1 /2 கப்
- சக்கரை 3/4 கப்
- ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
- முந்திரி திராக்ஷை 1 டேபிள் ஸ்பூன்
- நெய் 1 டேபிள் ஸ்பூன்
- பால் 1 கப்
Method:
- ஒரு உருளி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
- அதிலேயே அவலை போட்டு வறுகக்வும் .
- அவல் நன்கு வறுபட்டதும், பாலை விடவும்.
- வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கலாம்.
- அவல் நன்கு வெந்ததும் சக்கரை சேர்க்கவும்.
- ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.
Notes:
- கெட்டி அவல் உபயோகிப்பதானால் அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.அப்புறம் பிழிந்து வடியப்போடனும். அப்பவும் வறுக்க முடியாது எனவே மெல்லிசு அவல் தான் பாயசம் மற்றும் கேசரிக்கு சிறந்தது. கெட்டி அவல் கொண்டு, அவல் சக்கரை செய்யலாம், வெல்ல அவல் செயலாம் . மிஷின் அவல் வெள்ளையாக குப்பை இல்லாமல் இருக்கும். கெட்டி அவலில் தவிடு இருக்கும்.
Images: