- முன்பே நான் வேறு ஒரு கஞ்சி 'சத்துமாவு கஞ்சி'ஒன்று போட்டுள்ளேன், அது போல த்தான் இதுவும் ஆனால் இதில் பல சிறுதானியங்கள் சேர்த்துள்ளேன்.
- கேழ்வரகு - கால் கிலோ
- கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா இரண்டு டேபிள் ஸ்பூன்
- பொட்டுக்கடலை, கம்பு - தலா நாலு டேபிள் ஸ்பூன்
- முந்திரி, பாதாம் - தலா 10
- ஏலக்காய் - 5
- பார்லி - 4 டேபிள்ஸ்பூன்
- சர்க்கரை தேவைக்கு ஏற்ப
Method:
- கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.
- முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
- வெறுமன வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு ஆனால் காந்தாமல் வறுக்கவும்.
- முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
- முளை விட்ட தானியங்கள் மற்றும் வறுத்து வைத்தவற்றையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
- கஞ்சி போட:
- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
- கட்டி இல்லாமல் இருக்கணும்.
- பிறகு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
- சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும்.
- இதனுடன் சர்க்கரை மற்றும் பால் கலந்து கொடுக்கவும்.
- நல்லா பசி தாங்கும் .
Notes:
- 1 . அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கூட இதைக் கொடுக்கலாம்.
- பெரியவர்களும் குடிக்கலாம்.
- 2 . வேண்டுமானால் கஞ்சி போடாமல் உருண்டை செய்யலாம். இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம் புன்னகை
- 3 . ஒருவேளை முளைவிட்ட தானியங்கள் நன்றாக காயவில்லை என்று நினைத்தீர்கள் என்றால் அவற்றையும் வறட்டு வாணலி இல் வறுத்துக்கொள்ளவும்.
No comments:
Post a Comment