Wednesday, August 31, 2011

பூண்டு ரசம்

மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செயலாம் அல்லது இப்படி தனியாகவே பூண்டு உரித்து போட்டும் செயலாம். எப்படி செய்தாலும் சாப்பிட்டதும், கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஜலம் வரணும், அது தான் கணக்கு , சரியா?

தேவையானவை :

கண்டத்திப்பிலி 2 ஸ்பூன் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும – மைலாபூர் “டப்பா செட்டி கடை” ல கிடைக்கும் )
குண்டு மிளகாய் 2 -4
மிளகு 2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1 ஸ்பூன்
தனியா 1 – 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 -1 1/2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
வேகவத்த துவரம் பருப்பு 1/2 கப்
அல்லது துவரம் பருப்பு வேகவைத்த ஜலம் 1 கப்
உரித்த பூண்டு 1 கை நிறைய

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு, கண்டத்திப்பிலி, மிளகாய் ,மிளகு, துவரம் பருப்பு, தனியா எல்லாம் போட்டு வறுக்கவும்.
அதே வாணலி இல் மீதி நெய் யை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து , பூண்டை நன்றாக வதக்கவும்
அதிலிருந்து ஒரு 10 பல் பூண்டு எடுத்து , வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் போட்டு , ஆறினதும் நல்ல விழுதாக தண்ணீர் விட்டு அரைக்கவும்
பூண்டு வதக்கிய வாணலி இல் 1 டம்ப்லர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
நன்கு கலக்கவும் , நன்கு கொதிக்க விடவும்.
பூண்டு நன்கு வெந்ததும், அரைத்துவைத்துள்ளதை கொட்டவும்
மீண்டும் கொதிக்க விடவும்.
பருப்பை கரைத்துவிடவும அல்லது பருப்பு ஜலம் விடவு.
மீண்டும் நன்கு கொதித்ததும் இறக்கவும்
ரொம்ப வாசனையாக சூப்பராக இருக்கும்.
நல்ல சூடு சத்தத்தில் நெய் விட்டு இந்த பூண்டு ரசமும் விட்டு சாப்பிடணும்.
நல்ல தளர பிசையுங்கோ.
வேண்டுமானால் 1 கப் ரசம் குடியுங்கோ ரொம்ப நல்லது.

குறிப்பு: இதற்க்கு பருப்பு துவையல் செய்தால் தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும் . மிளகு அதிகமாய் மிளகாய் குறைவாய் இருக்கணும். சில பேர் பருப்புடன் பூண்டையும் வேக வெச்சுடுவா, அப்படி செய்தால் பூண்டு ரொம்ப குழியந்துவிடும் . இப்படி வதக்கி போட்டால் நல்லா கண்ணுக்கு தெரியும், கரண்டியால அரித்து போட்டுக்கலாம்


மிளகு குழம்பு

மிளகு குழம்பு – உடலுக்கு ஆரோகியமான ஒரு குழம்பு. பத்திய குழம்பு என்று கூட சொல்லலாம்.

தேவையானவை:

10 குண்டு மிளகாய்
2spoon தனியா
2 – 4 ஸ்பூன் மிளகு
பெருங்காயம்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
கறிவேப்பிலை – கொஞ்சம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

முதலில் சொன்னவைகளை எண்ணெயில் வறுத்து, புளி பேஸ்ட் உடன் நன்கு அரைக்கவும்.
இரண்டு டம்பளர் தண்ணிரில் கரைக்கவும்.
ஒரு ஆழமான வாணலில் தாரளமாக எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்ததை கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் போட்டு, மிளகு குழம்பு விட்டு சாப்பிடவும்.
‘பருப்பு துவைய’ லுடன் நன்றாக இருக்கும்.

குறிப்பு: இந்த குழம்பில் காய்ந்த மாங்காய் துண்டங்கள் போட்டும் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புளி மற்றும் உப்பை குறைக்கவும்.

சளி , ஜுரத்துக்கு மிளகு ரசம்

முதலில் சளி , ஜுரத்துக்கு என்ன சாப்பிடலாம் என்ன கூடாது என பார்போம். சாதாரணமாக எல்லோருக்கும் சளி பிடிக்கும் , அது உடம்பு சூட்டாலா அல்லது குளுமையாலா என முதலில் தெரிந்து கொள்ளனும்.

குளுமையால சளி என்றால் தலை கனக்கும், கழுத்து , அள்ளை பக்கம் வலிக்கும். மூக்கில் சளி வரும். அப்ப என்ன சாப்பிடணும் என்றால், மிளகு சீரக ரசம், பூண்டு ரசம், மிளகு குழம்பு, மிளகு டீ என மிளகு அதிகம் சேர்த்துகனும்.

இதுக்கு ரூல் என்ன வென்றால், “சளி பிடித்தால் வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு நல்ல தூங்கணும். ஜுரம் வந்தால் “லங்கனம் பரம ஔஷதம் ” அதாவது சாப்பிடாமல் பட்டினி போடணும்” என்பா என் பாட்டி .

நல்லா விக்க்ஸ் வேடு பிடிக்கலாம், உடல் சூடுதரும் பண்டங்களை சாப்பிடலாம். அதாவது அத்திபழம் – இதை சூடு நீரில் ஊறவைத்து சாப்பிடலாம். பப்பாளி சாப்பிடலாம். கேழ்வரகால் ஆன பண்டங்களை சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை: குளுமையான கறிகாய்கள், அதாவது பூசணி, சௌ சௌ,
சுரைக்காய், வெந்தய கீரை போன்றவை. மற்றும் சோம்பு, பனம் கல்கண்டு , பனை வெல்லம். (சாதாரண வெல்லம் சூடு , ஆனா பனை வெல்லம் குளுமை புன்னகை )

இப்ப மிளகு ரசம் வைப்பதை பார்போம்.

தேவையானவை:

ரசப்பொடி 1 – 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 – 1 1/2 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து
1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்த்து
நெய் 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலியில் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்
நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்
உப்பு போடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் துவரம் பருப்பை போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது மிளகு ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.

குறிப்பு: ரசம் நாங்க ஈய பாத்திரத்தில் தான் செய்வோம். அது எல்லோரிடமும் இருக்காது என்று தான் நான் வாணலி என்று சொன்னேன். ஈய சோம்பு இருந்தால் அதில் வைக்கும் [b]சர்ற்றமுது (நாங்க ரசத்தை அப்படித்தான் சொல்வோம் புன்னகை ) கு ஈடு இணை இல்ல. ஆனால் ஈய சொம்பை அப்படியே அடுப்பில் வைக்க கூடாது. உருகிவிடும். புளி தண்ணி விட்டு தான் வைக்கணும். வேற வாணலி இல் தாளித்தம் செய்து அதில் கொட்டனும். மேலும் ஈய சொம்பில் எவ்வளவு திரவம் இருக்கோ அது வரை தான் தீ இருக்கணும் இல்லாட்டா உருகிடும். ஜாக்கிரதையாக கையாளனும் அந்த சொம்பை.


வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (1)

இது ஒரு பெரிய விஷயமான்னு நினைபிர்கள் , ஆமாம். எதுக்கும் முறை நு ஒன்னு இருக்கே. புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">

சுடு சாதத்தில் ‘பிரெஷ் ‘ ஆக உருக்கின ஆவின் நெய் விட்டு ( எனக்கு உத்துகுளி வெண்ணை பிடிக்காது. சோகம்" longdesc="5" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/440806.gif" alt="சோகம்"> முதலில் நல்லா இருக்கும் பிறகு கொஞ்சம் புளிப்பு வாசனை வரும். உங்களுக்கு பிடிச்சா மாதிரி நெய் விடுக்கொங்கோ ) நல்லா குழைய வேகவைத்த பயத்தம் பருப்பை போட்டு ‘மை ‘யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே ‘லபக்’என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு ‘குண்டான்’ சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
Try பண்ணி பாருங்கள்.

வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (2)

இப்ப தயிர் சாதம் .
இதுக்கு நன்றாக மசித்த சாதத்தில், கெட்டியான எருமை தயிர் விட்டு, உப்பு போட்டு ‘மை ‘யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே ‘லபக்’என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு ‘குண்டான்’ சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
இதையும் Try பண்ணி பாருங்கள்.

குழம்பு பொடி

முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்

500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்

மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.

இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி

காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு

செய்முறை :

கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .

இனிப்புச் சட்னி

தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

செய்முறை:

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பதத்தில் இருக்க வேண்டும்.


புளிச் சட்னி

100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.

இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.

ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.

நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.

இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.

பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.

இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார். இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.

அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும். பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.

Blog Archive