Showing posts with label
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள்.
Show all posts
Showing posts with label
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள்.
Show all posts
Ingredients:
- வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப்
- வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 6 (வறட்டு வாணலியில் லேசாக வறுக்கவும்)
- பூண்டு – 6 - 8 பல்
- உப்பு – தேவையான அளவு.( வறட்டு வாணலியில் லேசாக வறுக்கவும்)
Method:
- கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
- சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சூப்பர் போங்கோ
Ingredients:
- புதினா 2 கப் உருவியது
- உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
- தனியா 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- குண்டு மிளக்காய் வற்றல் 12 -14
- புளி சிறிய எலுமிச்சை அளவு
- பெருங்காய பொடி 1/4 டீ ஸ்பூன்
- உப்பு
- எண்ணை
- மிளகு 1 ஸ்பூன் (காரம் அதிகம் தேவைபடுபவர்கள் இதை சேர்க்கலாம் )
Method:
- முதலில் புதினாவை ஆய்ந்து அலம்பி வடிய விடணும்.
- வெறும் வாணலி இல் நன்கு வறுக்கணும்.
- வறுத்ததை கை இல் நொறுக்கினால் நொறுங்கணும் அது தான் பதம்
- அதை தட்டில் கொட்டி வைக்கவும்
- புளியை சிறிது சிறிதாக பிச்சு போட்டு நன்கு வறுக்கணும்
- அதையும் தனியே வைக்கக்ணும்.
- பின் வாணலி இல் எண்ணை விட்டு மற்ற சாமான்களை வறுக்கணும்
- பின்பு எல்லா வற்றை யும் மிசில பொடிக்கணும்.
- கமகமக்கும் புதினா பொடி தயார்.
- சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
- நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
- தொட்டுக்கொளா சுட்ட அப்பளம் அல்லது தயிர் போறும் .
Ingredients:
- 1 கப் தேங்காய் துருவல்
- 1/3 கப் எள்
- 1/2 கப் வேர்கடலை வறுத்தது
- பூண்டு 15 - 20
- 2 மிளகாய் வற்றல்
- உப்பு
Method:
- தேங்காய் துருவலை சிவக்க வறுக்கவும்.
- அதேபோல எள்ளையும் வறுக்கவும்.
- இவைகளுடன் மற்ற பொருட்கள் சேர்த்து மிக்சி இல் அரைக்கவும்.
- அவ்வளவுதான் வேர்கடலை பூண்டு பொடி ரெடி.
- சுடுசாதத்தில் போட்டு சாப்பிடவேண்டியது தான்
Ingredients:
- பொட்டுகடலை 1 கப்
- வேர்கடலை 1 / 4 கப்
- வத்த மிளகாய் 20 - 25
- பூண்டு 10 - 15
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு கொஞ்சம்
Method:
- எல்லாவற்றையும் வறட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும்.
- பின் மிக்சி இல் போட்டு பொடிக்கவும் .
- அவ்வளவு தான் பருப்பு பொடி தயார்.
Ingredients:
- 1 கப் சிவக்க வறுத்த தேங்காய் துருவல்
- 1/2 கப் வறுத்த வேர்கடலை
- 1/2 கப் வறுத்த எள்
- 10 மிளகாய் வற்றல் (குண்டு)
- 10 -12 பூண்டு
- உப்பு
- கொஞ்சம் எண்ணை
Method:
- எல்லாவற்றயும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
- சாத்ததில் போட்டு சாப்பிடவும்.
- சுவையாக இருக்கும்.
Ingredients:
- 10 பல் பூண்டு
- ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 3 - 4 குண்டு மிளகாய்
- உப்பு
Method:
- எல்லாவற்றையும் ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
- எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
- வாசனையாக நல்ல இருக்கும்.
- சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
- சாப்பிடவும்.
Notes:
- எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.
Ingredients:
- 1 கப் துவரம் பருப்பு
- 10 மிளகாய் வற்றல்
- 1 டீ ஸ்பூன் மிளகு
- 10 பல் பூண்டு
- உப்பு
Method:
- முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
- பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
- பூண்டு பற்களை உரித்து அப்படியே போட்டு அரைக்க தரனும்.
- மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
- கொஞ்சம் பூண்டு வாசத்துடன் நன்ன்றாக இருக்கும்.
- ஆனால் இதை fridge இல் வைப்பது நல்லது.
- (பூண்டில் கொஞ்சம் ஈரப்பசை இருக்கும் அல்லவா அதுதான் "fridge " லவைக்கணும்.)