Ingredients:
- கேழ்வரகு மாவு 1 கப்
- மைதா 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு 2 - 3 டேபிள் ஸ்பூன்
- கோதுமை மாவு 2 - 3 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது 2 - 3 டீ ஸ்பூன்
- முருங்கை இலை புதியது அல்லது காயவைத்தது 2 - 3 கைப்பிடி
- உப்பு
- தோசை வார்க்க எண்ணெய்
Method:
- ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
- அதில் முருங்கை இலை, மைதா, அரிசி மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
- கொஞ்சம் சூடான தண்ணீர் விட்டு கரண்டியால் நன்கு கலக்குங்கள்.
- தோசை மாவு பதம் வரும்வரை தண்ணீர் சேர்க்கலாம்.
- கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்ததும், தோசைக்கல்லை அடுப்பில் போடுங்கள்.
- கலந்த மாவை எடுத்து தோசைகளாக வார்த்து எடுங்கள்.
- அருமையான 'கேழ்வரகு முருங்கை தோசை ' தயார்.
- வெறும் தயிர் போதும் இதற்கு தொட்டுக்கொள்ள.
- மாவு கரைத்ததுமே வார்க்கலாம், மெத் என்று இருக்கும்.
Images:
Ingredients:
- கேழ்வரகு மாவு 1 கப்
- உருவிய முருங்கை இலை அல்லது காய்ந்த முருங்கை இலை ஒரு கைப்பிடி
- உப்பு
- பச்சை மிளகாய் 2
Method:
- ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
- அதில் முருங்கை இலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
- கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையுங்கள்.
- அதை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் துளி எண்ணெய் தடவிக்கொண்டு இந்த உருண்டை ஒன்றை எடுத்து அடை போல தட்டுங்கள்.
- தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, அது சூடானதும் அதில் இந்த அடையை போட்டு,
- துளி எண்ணெய் விட்டு, இரண்டு புறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள்.
- மொத்த மாவையும் இதே போல் செய்யுங்கள்.
- அருமையான 'கேழ்வரகு முருங்கை இலை அடை ' தயார்.
- எதுவும் தொட்டுக்கொள்ளத்தேவை இருக்காது.
- அப்படியே நன்றாக இருக்கும்.
Ingredients:
- அளவு :
- 4 கப் கேழ்வரகு மாவு
- 1 கப் உளுந்து
- 2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
- ( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
Method:
- அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
- பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- தண்ணீர் மட்டா விடவும்.
- ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
- அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
- அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
- அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
- ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன் சூப்பர் !
- மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம்.
Images:
Ingredients:
- 1 கப் உளுந்து
- 3 கப் கேழ்வரகு மாவு ( நீங்கள் முளை கட்டி அரைத்தாலும் பரவாஇல்லை, கடை மாவு என்றாலும் பரவாஇல்லை)
- உப்பு.
Method:
- உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊர வைக்கவும்.
- பிறகு நன்கு அரைக்கவும் .
- பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போடவும்.
- உப்பு போடவும்.
- அரைத்த உளுத்தம் மாவையும் போட்டு கரைத்து வைக்கவும்.
- அவ்வளவுதான்; தோசை மாவு ரெடி.
- நீங்க உடனேவும் வார்க்கலாம், மறுநாள் பொங்கினதும் கூட வார்க்கலாம்.
- நல்ல மெல்லிசாக, 'மொறு மொறு' என்று வரும்.
Images:
Ingredients:
- தோசை -
- இட்லி அரிசி -- 3 ஆழாக்கு (நான் இன்று பச்சரிசி இல் தான் செய்தேன் )
- வெந்தயம் --- 3 டேபிள் ஸ்பூன்
Method:
- வெந்தயத்தை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போறும்.
- முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.
- 3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை யாக இருக்கும்.
- கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும்.
- உளுந்தைபோல பார்ப்பதற்கு நுரைத்து வரும்; நம்ப முடியாத அளவிற்கு 'புஸு புஸு' என்று வரும் புன்னகை
- அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- பிறகு அரிசியை நன்கு மையாக அரைக்கவும்.
- இரண்டையும் ஒன்றாக முதல் நாளே உப்பு போட்டு பக்குவமாக கரைத்துவைக்கவேண்டும்.
- மறு நாள் காலை நன்கு பொங்கி வந்திருக்கும்.
- காலை தோசை கல்லில் தோசை வார்க்க வேண்டும் .
- நல்ல 'பவுன்' கலரில், 'பட்டு பட்டாக' ரொம்ப அருமையாக வரும்.
- அவ்வளவுதான் சூப்பர் 'வெந்தய தோசை' ரெடி.
Ingredients:
- வெந்த பயத்தம் பருப்பு 1 கப்
- கரம் மசாலா 1/2 ஸ்பூன்
- மிளகாய் பொடி தேவைக்கு ஏற்ப
- உப்பு
- தாளிக்க : சீரகம் 1 ஸ்பூன்
- எண்ணெய் + நெய் தோசை வார்க்க
- தோசை மாவு 2 கப்
Method:
- ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும்.
- அதில் வெந்த பருப்பு, + தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
- மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
- தனியே எடுத்து வைக்கவும்.
- தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
- இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
- பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து மூடி பரிமாறவும்.
- கெட்டித்தைருடன் பரிமாறவும்.
Notes:
- மிளகாய் பொடிக்கு பதிலாக, பச்சைமிளகா, இஞ்சி அரைத்து போடலாம்
Images:
Ingredients:
- மசாலா பொடி செய்யத் தேவையானவை:
- குண்டு மிளகாய் 10 -12
- அன்னாசிப்பூ 4 -5
- தனியா 2 - 3 டேபிள் ஸ்பூன்
- மிளகு 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை 2 -3
- சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் 4 -5
- கிராம்பு 4 -5
- மசாலா செய்ய :
- வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
- சின்ன வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
- பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
- இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
- கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
- மஞ்சள் பொடி 1 டீ ஸ்பூன்
- தோசை மாவு 2 கப்
- தோசை செய்ய தேவையான நெய் + எண்ணெய்
- தாளிக்க : கடுகு மற்றும் சீரகம்
Method:
- துருவின தேங்காயை வறட்டு வாணலி இல் வறுக்கவும்.
- ஒரு துளி எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்த மசாலா சாமான்களை வறுத்து பொடிக்கவும்.
- ஒரு ஆழமான வாணலி இல் நெய் மட்டும் எண்ணெய் விட்டு, தாளிக்கவும்.
- பிறகு அதில் பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
- உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் பொடி போட்டு, தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறவும்.
- அதில் மசாலா பொடியை தேவையான அளவு போடவும்.
- நன்கு கலக்கவும்.
- உப்பு போட்டு மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
- தோசைக்கல்லை அடுப்பில போட்டு, மெல்லிய தோசை வார்க்கவும்.
- நெய்விட்டு திருப்பவும், பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலா 2 -3 ஸ்பூன்கள் தேவைக்கு ஏற்ப வைத்து மூடி பரிமாறவும்.
- இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள புதினா அல்லது கொத்துமல்லி அல்லது தேங்காய் சட்னி என எதுவேண்டுமானாலும் நல்லா இருக்கும்.
Notes:
- செய்து வைத்த மசாலா பொடி மீந்து போனால் வதக்கல் கறியமுதுகள் செய்யும்போது உபயோகப்படுத்தலாம்
Ingredients:
- வெந்த பயத்தம் பருப்பு 1 cup
- வெல்லம் 1 cup
- துருவிய தேங்காய் ஒரு மூடி
- முந்திரி 25 -30
- ஏலக்காய் 3 - 4
- சுக்கு பொடி ஒரு சிட்டிகை
- நெய் 1/2 cup
- தோசை மாவு 2 கப்
Method:
- ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு முந்திரி யை வறுக்கவும்.
- அதில் வெந்த பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் போடவும்.
- தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
- நன்கு கிளறவும்.
- ஏலப்பொடி போடவும்.
- தனியே எடுத்து வைக்கவும்.
- தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
- இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
- பிறகு அதில் செய்து வைத்துள்ள இனிப்பை வைத்து மூடி பரிமாறவும்.
- குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இது
Ingredients:
- தேங்காய் 1
- பச்சரிசி 2 ஆழாக்கு
- உப்பு
- 1 ஸ்பூன் எண்ணை தோசை மாவில் விட.
Method:
- தோசை செய்வதற்கு அரிசியை 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
- தேங்காய்யை துருவி அரிசியுடன் உப்பு போட்டு அரைக்கவும்.
- உப்பு மற்றும் 1 ஸ்பூன் எண்ணை விட்டு கலக்கி வைக்கவும்.
- ஒரு 15 - 20 நிமிடம் கழித்து தோசை வார்க்கவும்.
- ரவா தோசை போல கல்லின் ஓரத்திலிருந்து மாவை விடவும்.
- மாவு கொஞ்சம் தண்ணியாக இருக்கணும்.
- இட்லி பானை மூடியால் முடி வைக்கவும்.
- 1 நிமிடம் கழித்து திறந்து எடுக்கவும்.
- வெள்ளை வெளேர் என்கிற 'மெத் மெத்' தோசை தயார்.
- துளிக்கூட எண்ணை கிடையாது இதில்.
- காரமாக 'சாகு' அல்லது 'குருமா' தொட்டுக்கலாம்.
Ingredients:
- Fresh தோசை மாவு 1 கப்
- வெல்லம் 1 கப்
- ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் 1/2 கப்
- நெய் தோசை வார்க்க
Method:
- ஒரு பாத்திரத்தில் தோசை மாவு மற்றும் வெல்லம், ஏலப்பொடி,தேங்காய் துருவல் எல்லாத்தையும் போட்டு கரைக்கவும்.
- வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கவும்.
- ஒரு 10 நிமிஷம் கழித்து தோசை வர்க்கவும்.
- நெய்விட்டு இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
- சாப்பிட கொடுக்கும் போதும் நெய் விட்டு தரவும்.
- அருமையாக இருக்கும்.
Ingredients:
- அரிசி மாவு 1 கப்
- கோதுமை மாவு 1 1/2 கப்
- வெல்லம் 2 கப்
- ஏல பொடி 1 டீ ஸ்பூன்
- சோடா உப்பு ஒரு சிட்டிகை
- நெய் தோசை வார்க்க
Method:
- வெல்லத்ததை தட்டி தண்ணிரில் போடவும்.
- மண்போக வடிகட்டவும்.
- மாவுகள், சோடா உப்பு மற்றும் உப்பு எல்லாம் அந்த வெல்லத் தண்ணிரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
- ஒரு அரைமணி அப்படியே வைத்துவிட்டு , பிறகு தோசை வார்க்கணும்.
- நெய் விட்டு வெல்ல தோசை வார்க்கணும்.
- சுவையான 'வெல்ல தோசை' தயார்.
- குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
Notes:
- அடுப்பு நிதானமாக எரிய வேண்டியது முக்கியம், இல்லாவிட்டால் தோசை தீய்ந்து விடும்.
Ingredients:
- சோள மாவு அல்லது பாஜ்ரா அதாவது கம்பு மாவு அல்லது கேழ்வரகு மாவு ஏதாவது ஒன்று 2 கப்
- உளுந்து 1/2 கப்
- உப்பு
- எண்ணெய்
Method:
- உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு நன்கு அரைக்கவும்.
- கிரைண்டர் இல் உளுந்து அரைபடும் போதே எடுத்துக்கொண்ட மாவை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
- இரண்டும் சேர்ந்து நன்கு அரைபடட்டும் ஒரு 2 நிமிஷம்.
- பிறகு எடுத்து உப்பு போட்டு கரைத்து வையுங்கள்.
- மறு நாள் தோசை வார்க்கலாம்.
- மெத் என்று அருமையாக இருக்கும்.
Notes:
- சர்க்கரை நோயாளிகளுக்கான தோசை இது ; நீங்கள் மிக்சி இல் அரைப்பவரானால் கோதுமை மாவை 1 கப் தண்ணிரில் கலந்து, மிக்சி இல் 2 நிமிடம் சுற்றி எடுக்கவும். பிறகு உளுந்த்தமாவுடன் கலக்க வேண்டியது தான்
Ingredients:
- கோதுமை மாவு 2 கப்
- மோர் 1 கப்
- உப்பு
- தேவையானால் தண்ணீர்
- தோசை வார்க்க எண்ணெய்
- இதில் தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- சீரகம் 1 டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
- கறிவேப்பிலை
Method:
- கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
- நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
- நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
- நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
- இன்ஸ்டன்ட் கோதுமை தோசை ரெடி
Ingredients:
- கோதுமை மாவு 2 கப்
- உளுந்து 1/2 கப்
- உப்பு
- எண்ணெய்
Method:
- உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு நன்கு அரைக்கவும்.
- கிரைண்டர் இல் உளுந்து அரைபடும் போதே கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
- இரண்டும் சேர்ந்து நன்கு அரைபடட்டும் ஒரு 2 நிமிஷம்.
- பிறகு எடுத்து உப்பு போட்டு கரைத்து வையுங்கள்.
- மறு நாள் தோசை வார்க்கலாம்.
- மெத் என்று அருமையாக இருக்கும்.
Notes:
- சர்க்கரை நோயாளிகளுக்கான தோசை இது
Ingredients:
- 4 ஆழாக்கு பச்சரிசி
- 1 ஆழாக்கு உளுந்து
- 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
- உப்பு
- தோசை வார்க்க எண்ணெய்
Method:
- அரிசி பருப்பு மற்றும் வெந்தயம் எல்லாத்தையும் தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைத்து மிக்சி அல்லது கிரைண்டர், ஆட்டுக்கல் என எதிலாவது தனித்தனியாக நன்கு அரைக்கவும்.
- ஒன்றாக உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- ஒரு 8 - 10 மணிநேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
- இந்த 'வெந்தய தோசை' வெந்தய மனமுடன் லைட் மஞ்சள் கலரில் தோசை அருமையாக இருக்கும்.
Notes:
- உடலுக்கு ரொம்ப குளுமை, எனவே வெய்யநாளில் செய்து சாப்பிடுவது ரொம்ப நல்லது.
Images:
Ingredients:
- அரிசி 1 கப்
- உளுத்தம் பருப்பு 1/4 கப்
- கடலை பருப்பு 3/4 கப்
- வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய்
Method:
- அரிசி பருப்பு மற்றும் வெந்தயத்தை களைந்து ஒன்றாகவே ஊறவைக்கவும்.
- 2 -3 மணிநேரம் ஊரினதும் கொஞ்சம் 'காரகர்'பாக அரக்கவும்.
- உடனேயே வார்க்கலாம்.
- அந்த காலத்தில் தவலை இல் வார்ப்பளாம் ; இப்போ நம்மால் முடியாது.
- அதனால் குழிவான வாணலி இல் வார்க்கலாம்.
- வாணலி இல் முதலில் எண்ணெய் விட்டுக்கொண்டு , ஒரு கரண்டி மாவை விடவும்.
- ரொம்ப பரத்த வேண்டாம் .
- சுற்றிலும் எண்ணெய் விட்டு, இட்லி பானை முடியால் அதை மூடி விடவும்.
- 2 நிமிடம் கழித்து திறந்தால் , அடை மேல்பக்கம் வெந்து இருக்கும், அதை திருப்பி போடணும்.
- அப்போது வரும் மேல் பக்கம் நல்ல மொரு மொரு பாக இருக்கும்.
- திருப்பி போட்டதும் இலுப்ப சட்டியை முட வேண்டாம்.
- மறு புறம் போட்டதும் மீண்டும் எண்ணெய் விடணும்.
- அந்த பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.
- சுவையான 'தவல அடை ' ரெடி.
- ரொம்ப நல்லா இருக்கும்.
Notes:
- வெந்தய கசப்பு இருக்கும் இந்த அடை இல், அது பிடிக்காத வா, ஒரு நாள் முன்பே வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து விட்டு மறுநாள் அரிசி பருப்பு ஊற வைத்து இந்த வெந்தயத்தை சேர்த்து அரைக்கலாம். வெந்தயம் ஊற வைத்த தண்ணியையும் வீணாக்காமல் அரைக்க உபயோகபடுத்தலாம்.
Ingredients:
- கோதுமை மாவு 2 கப்
- வெல்லம் 1 1/2 கப்
- துளி உப்பு
- தேங்காய் துருவல் 1/2 கப்
- நெய்
Method:
- அழமான வாணலி இல் 4 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை பொடித்து போடவும்.
- அது கரைந்ததும் கொதிக்கட்டும் , அடுப்பை சின்னதாக்கி விட்டு கோதுமை மாவை போடவும்.
- நன்கு கட்டி இல்லாமல் கிளறவும்.
- கொஞ்சம் நெய், தேங்காய் துருவல், சிட்டிகை உப்பு மற்றும் ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.
- ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
- நல்லா ஆறினதும் நார்த்தங்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
- பிறகு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் அடை போல தட்டவும்.
- அடுப்பில் தோசை கல்லை போட்டு சூடானதும், தட்டி வைத்த அடையை அதில் போடவும்.
- இரண்டு புறமும் நெய்விட்டு எடுக்கவும்.
- வெல்ல அடை தயார்.
- இதுவும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
Notes:
- இது போல கேழ்வரகு மாவில் கூட செய்யலாம்
Ingredients:
- அரிசி மாவு 3/4 கப்
- உளுத்தம் மாவு 1/4 கப்
- சோயா மாவு 1/4 கப்
- சோடா உப்பு 1/4 கப்
- உப்பு
- எண்ணெய்
Method:
- மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
- ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
- அவ்வளவுதான் 'சோயா தோசை' ரெடி.
- இது உடம்புக்கு ரொம்ப நல்லது.
Ingredients:
- 1 கப் பச்சை அரிசி
- 1 கப் புழுங்கல் அரிசி
- 1 கப் பாசி பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- இஞ்சி
Method:
- அரிசி பருப்பை தனி தனியாக ஒரு அரைமணி ஊறவைத்த பின்பு, அரைக்கவும்.
- இப்பொழுது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.
- தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்லா இருக்கும்
Ingredients:
- 2 கப் பச்சை பயறு
- 1 கப் அரிசி
- உப்பு
- எண்ணெய்
- இஞ்சி
Method:
- பச்சை பயறு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு 4 முதல் 6 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
- பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
- வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
- ஹைதராபாத்தில் இதற்கும் தொட்டுக்கொள்ள ரவா உப்புமா செய்வார்கள்.
- பச்சை கலருடன் தோசை பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கும்
Notes:
- பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.
Images: