Tuesday, October 6, 2020

சர்க்கரை நோயாளிகளுக்கான தோசைகள்

Ingredients:
  • சோள மாவு அல்லது பாஜ்ரா அதாவது கம்பு மாவு அல்லது கேழ்வரகு மாவு ஏதாவது ஒன்று 2 கப்
  • உளுந்து 1/2 கப்
  • உப்பு
  • எண்ணெய்


Method:
  • உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு நன்கு அரைக்கவும்.
  • கிரைண்டர் இல் உளுந்து அரைபடும் போதே எடுத்துக்கொண்ட மாவை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
  • இரண்டும் சேர்ந்து நன்கு அரைபடட்டும் ஒரு 2 நிமிஷம்.
  • பிறகு எடுத்து உப்பு போட்டு கரைத்து வையுங்கள்.
  • மறு நாள் தோசை வார்க்கலாம்.
  • மெத் என்று அருமையாக இருக்கும்.


Notes:
  • சர்க்கரை நோயாளிகளுக்கான தோசை இது ; நீங்கள் மிக்சி இல் அரைப்பவரானால் கோதுமை மாவை 1 கப் தண்ணிரில் கலந்து, மிக்சி இல் 2 நிமிடம் சுற்றி எடுக்கவும். பிறகு உளுந்த்தமாவுடன் கலக்க வேண்டியது தான்

No comments:

Blog Archive