Tuesday, October 6, 2020

ரிப்பன் பகோடா - 2

Ingredients:
  • 2 கப் அரிசி
  • 1 கப் கடலை பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 10 - 12 மிளகாய் வற்றல்
  • உப்பு
  • 2 டீ ஸ்பூன் நெய் அல்லது வெண்ணை
  • சோடா உப்பு ஒரு சிட்டிகை
  • பொரிக்க எண்ணெய்


Method:
  • அரிசி , கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் எல்லாம் ஒன்றாக போட்டு மிஷினில் கொடுத்து அரைக்கவும்.
  • ஒரு பேசினில் சோடா உப்பு மற்றும் வெண்ணை போட்டு நன்கு நுரைக்க தேய்க்கவும்.
  • பிறகு உப்பு மற்றும் அரைத்த மாவை போட்டு கலக்கவும்.
  • கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
  • முறுக்கு அச்சில் 'ரிப்பன் பகோடா' தட்டு போட்டு மாவை ரொப்பி சூடான எண்ணெய் இல் பிழியவும் .
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
  • கலப்பு மாவில் செய்வதை விட அரைத்து செய்யும் இது ரொம்ப ருசியாக இருக்கும்.

No comments:

Blog Archive