Tuesday, October 6, 2020

வெல்ல அடை

Ingredients:
  • கோதுமை மாவு 2 கப்
  • வெல்லம் 1 1/2 கப்
  • துளி உப்பு
  • தேங்காய் துருவல் 1/2 கப்
  • நெய்


Method:
  • அழமான வாணலி இல் 4 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை பொடித்து போடவும்.
  • அது கரைந்ததும் கொதிக்கட்டும் , அடுப்பை சின்னதாக்கி விட்டு கோதுமை மாவை போடவும்.
  • நன்கு கட்டி இல்லாமல் கிளறவும்.
  • கொஞ்சம் நெய், தேங்காய் துருவல், சிட்டிகை உப்பு மற்றும் ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.
  • ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
  • நல்லா ஆறினதும் நார்த்தங்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
  • பிறகு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் அடை போல தட்டவும்.
  • அடுப்பில் தோசை கல்லை போட்டு சூடானதும், தட்டி வைத்த அடையை அதில் போடவும்.
  • இரண்டு புறமும் நெய்விட்டு எடுக்கவும்.
  • வெல்ல அடை தயார்.
  • இதுவும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


Notes:
  • இது போல கேழ்வரகு மாவில் கூட செய்யலாம்

No comments:

Blog Archive