Tuesday, October 6, 2020

மஞ்சுரியன் தோசை

Ingredients:
  • 1 கப் உளுத்தம் பருப்பு
  • 4 கப் அரிசி
  • 1 டீ ஸ்பூன் வெந்தயம்
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 10 -12 காரட்
  • 20 -25 பீன்ஸ்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 5-6 பச்சை மிளகாய் (நறுக்கியது )
  • 10 - 12 வெங்காய தாள் (நறுக்கியது )
  • சிறிதளவு இஞ்சி துருவவும்
  • 3 -4 பூண்டு பற்கள்
  • 2 ஸ்பூன் சோள மாவு
  • 1/4 ஸ்பூன் அஜினோமோடோ
  • 2 ஸ்பூன் சோயா சாஸ்
  • 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  • கொத்துமல்லி சிறிதளவு
  • உப்பு
  • எண்ணெய்


Method:
  • உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தையம் மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் 1 -2 மணி நேரம் ஊறவைக்கணும்.
  • பிறகு அவற்றை நன்றாக அரைக்கவும்.
  • பிறகு அரைத்த மாவை 6 -8 மணி நேரம் வரை புளிக்க விடவும்.
  • காரட் மற்றும் பீன்ஸ் சை பொடியாக நறுக்கி, பட்டாணியுடன் துளி உப்பு போட்டு நன்றாக வேகவைக்கவும்.
  • வாணலி இல் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும்.
  • பிறகு வேகவைத்த காரட் , பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி, சோயா சாஸ், அஜினமொடோ, சில்லி சாஸ் மற்றும் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
  • பிறகு இந்த சோள மாவை, வாணலி இல் உள்ள மஞ்சுரியனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இறுதியாக பொடியாக நறுக்கிய வெங்காய தாள் மற்றும் கொத்துமல்லி சேர்த்து இறக்கவும்.
  • இப்பொழுது மஞ்சுரியன் தயாராகி விட்டது.
  • பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு தோசை வார்க்கவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு, மீண்டும் அதை பழைய படி போட்டு அதன் மேல் மஞ்சுரியன் வைத்து மூடி ( மசாலா போல ) எடுக்கவும்.
  • இதை அப்படியே சாப்பிடலாம் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்

No comments:

Blog Archive