Tuesday, October 6, 2020

மைசூர் பாகு

Ingredients:
  • ஒரு கப் கடலை மாவு
  • இரண்டு கப் நெய்
  • இரண்டு கப் சர்க்கரை
  • வேண்டுமானால் அரை ஸ்பூன் ஏலப்பொடி


Method:
  • ஒரு ஆழமான உருளி இல் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு , சர்க்கரையை போடவும்.
  • அது கொதித்து ஒரு இழை பாகாக வரும்போது ( கொதித்துக்கொண்டு இருக்கும் பாகை ஆள் காட்டி விரலால் தொட்டுக்கொண்டு அதை கட்டை விரலால் தொட்டால் நடுவில் ஒரு நூல் போல வரும் அது வே கம்பி பதம் ) அளந்து வைத்திருக்கும் கடலை மாவை ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் ஆக பாகில் தூவி கிளறனும்.
  • ஒரு ஸ்பூன் நெய் விடனும்.
  • இப்படி மொத்த மாவும் நெய்யும் முடியும் வரை போட்டு போட்டு கிளறனும்.
  • மொத்தமாக கொட்டக் கூடாது
  • மாவு கட்டி இல்லாமல் இருப்பது முக்கியம்.
  • ஒரு கட்டத்தில் உருளி இல் இருக்கும் மைசூர் பாகு இல் நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்.
  • மேலும் நிறைய ஓட்டைகள் இருப்பது போல தோன்ற ஆரம்பிக்கும்.
  • இப்போது அடுப்பை சின்னதாக்கி விட்டு ஒரு தட்டில் நெய் கொஞ்சம் தடவவும்.
  • மைசூர் பாகை அதில் கொட்டவும்.
  • ஒரு பத்து நிமிடம் ஆறினதும் துண்டங்கள் போடலாம்.


Notes:
  • மைசூர் பாகு மெத் என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல வேண்டுமானால், சர்க்கரை யை ஒன்றரை கப் எடுத்துக்கொள்ளுங்கள் . மற்றும் கிளறும்போது ஒரு சிட்டிகை சோடா உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.சரியா?

No comments:

Blog Archive