Showing posts with label பச்சடி & ரைட்டா வகைகள். Show all posts
Showing posts with label பச்சடி & ரைட்டா வகைகள். Show all posts

Friday, October 9, 2020

தக்காளி பச்சடி

Ingredients:
  • 2 தக்காளி - கெட்டியானதாகவும், பெங்களுர் தக்காளியாகவும் இருக்க வேண்டும்.
  • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
  • பச்சை மிளகாய் - 4 -6
  • இஞ்சி 2 -3 இன்ச் அளவு
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • எண்ணெய் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை ஒரு ஆர்க்


Method:
  • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
  • கொஞ்சமும் தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
  • பொடியாக நறுக்கின தக்காளியை அதில் போட்டு நன்கு கலக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
  • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
  • எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.

Thursday, October 8, 2020

ஜவ்வரிசி பச்சடி

Ingredients:
  • 1 கப் ஜவ்வரிசி
  • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
  • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • தாளிக்க :
  • அரை ஸ்பூன் கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • இரண்டு ஸ்பூன் எண்ணெய்


Method:
  • வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  • வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
  • இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் போட்டு தாளித்து பச்சடி மேல் கொட்டவும்.
  • அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி பச்சடி ரெடி.
  • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

ஜவ்வரிசி, வெங்காயப் பச்சடி

Ingredients:
  • 2 வெங்காயம் - பொடியாக நறுக்கி வைக்கவும்
  • 1 கப் ஜவ்வரிசி
  • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
  • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • தாளிக்க :
  • அரை ஸ்பூன் கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • இரண்டு ஸ்பூன் எண்ணெய்


Method:
  • வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  • வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
  • இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
  • ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
  • பரிமாறுவதற்கு முன், நன்றாக ஊறி உள்ள ஜவ்வரிசி பச்சடி மேல் கொட்டவும்.
  • நன்கு கலக்கி பரிமாறவும்.
  • அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி, வெங்காயப் பச்சடி ரெடி.
  • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.


Notes:
  • சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். அதனால் ஆறினதும் சேர்க்கவும் . அப்படி உடனே போடும் பட்ஷத்தில் கூட உள்ள ஜவ்வரிசி அந்த நீரை உறிஞ்சிவிடும். பச்சடி கெட்டியாக இருக்கும்.

வெங்காயப் பச்சடி

Ingredients:
  • 2 வெங்காயம் - பொடியாக நறுக்கி வைக்கவும்
  • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
  • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • தாளிக்க :
  • அரை ஸ்பூன் கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • அரை ஸ்பூன் எண்ணெய்


Method:
  • தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
  • ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
  • தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  • இதன் மேல் கொட்டவும்.
  • அவ்வளவுதான், சுவையான வெங்காயப் பச்சடி ரெடி.
  • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.


Notes:
  • சிலர் வெங்காயத்தை பச்சையாகவே நறுக்கி செய்வார்கள். அப்படி செய்யும்போது, சாப்பிட்டபின் வாய் நாற்றம் அடிக்கும். இதுவும் அப்படி ஆகும் என்றாலும், கொஞ்சம் குறைவாக உணரலாம்.
  • சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். ஒருவேளை மதியம் புலவுடன், வெங்காய பச்சடி வைக்க வேண்டும் என்றால், வெங்காயம் ஆறினதும், தயிர் மட்டும் விட்டு, உப்பு போடாமல் கொடுத்து அனுப்பவும். சாப்பிடும்போது உப்பை போட்டு கலந்து உபயோகிக்கட்டும்.

பூந்தி ராய்த்தா பச்சடி

Ingredients:
  • புளிக்காத கெட்டித்தயிர் – 1கப்
  • காரா பூந்தி –2கப்
  • உடைத்து வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
  • நெய் இல் வறுத்த முந்திரிபருப்பு – 5 - 6 (உடைத்து வைத்துக் கொள்ளவும் )
  • பச்சைமிளகாய் – 2
  • சர்க்கரை – 1 டீஸ்பூன்
  • மல்லித்தழை – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப


Method:
  • பச்சைமிளகாய், கொத்து மல்லித்தழை, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, உப்பு சேர்த்துத் தயிருடன் கலக்கவும்.
  • பரிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பூந்தி யைத் தயிருடன் கலந்து மேலே முந்திரி தூவி பரிமாறவும்.

காரட் பச்சடி

Ingredients:
  • 2 காரட் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
  • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
  • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • தாளிக்க :
  • அரை ஸ்பூன் கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • அரை ஸ்பூன் எண்ணெய்


Method:
  • ஒரு பேசினில் , துருவிய காரட், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  • தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
  • அவ்வளவுதான், சுவையான காரட் பச்சடி ரெடி.
  • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.


Notes:
  • சிலர் காரட்டை துருவாமல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.

நார்த்தங்காய் பச்சடி

Ingredients:
  • நாரத்தை 1 (பொடியாக நறுக்கியது)
  • உப்பு – தேவைக்கேற்ப
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • மஞ்சள்தூள் 1/2டீஸ்பூன்
  • துருவிய வெல்லம் – 1/4கப்
  • கடுகு – 1/4டீஸ்பூன்
  • நறுக்கிய பச்சைமிளகாய் – 3
  • வெந்தய பொடி 1 /4 டீ ஸ்பூன்
  • மிளகாய் பொடி 1 /4 டீ ஸ்பூன்
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்


Method:
  • வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்து, புளிக்கரைசலில் சேர்க்கவும்.
  • அத்துடன், பொடியாக நறுக்கிய நாரத்தங்காய்,மஞ்சள் பொடி சேர்க்கவும்.
  • நார்த்தங்காய் நன்கு வெந்ததும், உப்பு வெல்லம் சேர்க்கவும்.
  • எல்லாமாக சேர்ந்துகொண்டு வரும்போது, கொஞ்சம் வெந்தய பொடி மற்றும் மிளகாய் பொடி போடவும்.
  • இன்னும் கொதித்து இறுகினதும், இறக்கவும்.


Notes:
  • புளி கரைசலுக்கு பதிலாக ஒரு வேளை நீங்கள் புளி பேஸ்ட் உபயோகித்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்போது தான் நாரத்தங்காய் வேகும்.

மாங்காய் இஞ்சி பச்சடி!

Ingredients:
  • புளிப்பில்லாத தயிர் – 2கப்
  • நறுக்கிய மாங்காய் இஞ்சி – 11/2டீஸ்பூன்
  • தேங்காய்த் துருவல் – 4டேபிள்ஸ்பூன்
  • சீரகம் 1 /2 டீஸ்பூன்
  • கடுகு – 1/4டீஸ்பூன்
  • கொத்துமல்லி இலைகள் – சிறிதளவு
  • பெருங்காயம்
  • எண்ணெய்
  • உப்பு – தேவைக்கேற்ப


Method:
  • தேங்காய், சீரகம், மாங்காய் இஞ்சி முதலியவற்றை விழுதாக அரைக்கவும்.
  • தயிரில் அரைத்தவிழுது, உப்பு போட்டுக் கலந்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்துமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.

மல்டி வெஜிடபிள் பச்சடி

Ingredients:
  • துருவிய கேரட்,சௌசௌ,முட்டைகோஸ் குடைமிளகாய் – தலா 2டேபிள்ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – தலா 1டேபிள்ஸ்பூன்
  • வறுத்த கசகசா – 1/2டீஸ்பூன்
  • கடுகு – 1/4டீஸ்பூன்
  • பச்சைமிளகாய் – 1
  • மல்லித்தழை - சிறிதளவு
  • தயிர் – 3கப்
  • உப்பு – ருசிக்கேற்ப
  • எண்ணெய் – தேவையானாளவு.


Method:
  • வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும்.
  • குழப்பி வைத்துள்ள தயிரில் கொட்டவும்.
  • தேங்காய், பச்சைமிளகாய், கசகசா மற்றும் கோத்த்துமல்லி எல்லாவற்றையும் விழுதாக அரைக்கவும்.
  • பின்பு, மிகவும் பொடியாக நறுக்கிவைத்துள்ள காய்கறிகள் அரைத்த விழுது எல்லாவற்றையும் தயிரில் போட்டு நன்கு கலக்கவும்.
  • உப்பு போட்டு கலந்து பரிமாறவும்.

மணத்தக்காளி வற்றல் பச்சடி

Ingredients:
  • மணத்தக்காளி வற்றல் – 1/4கப்
  • கெட்டித்தயிர். – 2கப்
  • மிளகாய்வற்றல் – 1
  • துவரம்பருப்பு – 1/2டீஸ்பூன்.
  • சீரகம் – 1/4டீஸ்பூன்
  • நெய் – 2டீஸ்பூன்
  • பெருங்காயம் – ஒரு சிட்டிகை
  • உப்பு – தேவைக்கேற்ப


Method:
  • வாணலி இல் நெய்விட்டு மணத்தக்காளி வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • பின் மிளகாய் வத்தல்,சீரகம், துவரம்பருப்பு, இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
  • பிறகு, அனைத்தையும் தயிரில் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு சேர்க்கவும்.

நெல்லிமுள்ளி பச்சடி

Ingredients:
  • நெல்லிமுள்ளி – 10 - 15
  • புளிப்பில்லாத தயிர் – 2கப்
  • பச்சைமிளகாய் – 4
  • தேங்காய்த்துருவல். - 3டேபிள்ஸ்பூன்
  • நெய் – 1டீஸ்பூன்
  • கொத்தமல்லி – 1/4கப் நறுக்கியது
  • உப்பு - தேவைக்கேற்ப


Method:
  • நெல்லிமுள்ளியை ஒரு அரைமணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும்..
  • அதில், தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  • அரைத்த அனைத்தையும் புளிக்காத தயிரில் கலந்து,உப்பு போட்டு கலக்கவும்.
  • பிறகு, நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
  • தேவையானால் கொத்துமல்லி தூவலாம்.
  • குறிப்பு: பெரிய நெல்லிக்காய்களை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வதையே நெல்லி முள்ளி என்று சொல்கிறோம். இந்த பச்சடியை பொதுவாக துவாதசி அன்று செய்வார்கள். காய்ந்தாலும் நெல்லிக்காய் இல் உள்ள சத்துக்கள் வீணாவது இல்லை.

விளாம்பழ பச்சடி

Ingredients:
  • விளாம்பழம்- - 2
  • பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
  • சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
  • கடுகு – 1/4டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • நெய் – 2டீஸ்பூன்
  • உப்பு – ஒருசிட்டிகை


Method:
  • விளாம்பழத்தை உடைத்து,ஓட்டிலிருந்து எடுத்து, கூழாக மசித்து வைக்கவும்.
  • வெல்லத்தை தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.
  • வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
  • மீண்டும் அடுப்பில் வைத்து, 'பிசு பிசு' பாகு வந்ததும், ( கையில் தொட்டால் ஓட்டவேண்டும், அது தான் பதம் ) மசித்து வைத்த விளாம்பழத்தை போட்டு கலக்கவும்.
  • உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • ஒரு சின்ன கடாய் அல்லது தாளிக்கும் கரண்டி இல், நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.
  • அருமையான விளாம்பழ தித்திப்பு பச்சடி தயார் !

வெள்ளரிக்காய் பச்சடி 2

Ingredients:
  • 2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
  • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
  • பச்சை மிளகாய் - 4 -6
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • இஞ்சி 2 -3 இன்ச் அளவு
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • எண்ணெய் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
  • கொஞ்சமும்
  • தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
  • துருவிய வெள்ளரிக்காயையும் அதில் போட்டு நன்கு கலக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
  • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
  • எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.

வெள்ளரிக்காய் பச்சடி 3

Ingredients:
  • 2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
  • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
  • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • தாளிக்க :
  • அரை ஸ்பூன் கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • அரை ஸ்பூன் எண்ணெய்


Method:
  • ஒரு பேசினில் , துருவிய வெள்ளரிக்காய், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  • தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
  • அவ்வளவுதான், சுவையான வெள்ளரிக்காய் பச்சடி ரெடி.
  • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.


Notes:
  • சிலர் வெள்ளரிக்காயை துருவல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.

தேங்காய் இஞ்சி பச்சடி

Ingredients:
  • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
  • பச்சை மிளகாய் - 4 -6
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • இஞ்சி 2 -3 இன்ச் அளவு
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • எண்ணெய் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
  • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
  • எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.
  • முக்கியமாய் 'ஸ்ரார்த துவையலுக்கு; ரொம்ப நல்லா இருக்கும்.

நெல்லிக்காய் பச்சடி

Ingredients:
  • பெரிய நெல்லிக்காய் - 5
  • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
  • பச்சை மிளகாய் - 2 - 4
  • தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
  • இஞ்சி 1 இன்ச் அளவு
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • எண்ணெய் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • நெல்லிக்காயை நறுக்கிக்கொள்ளவும்.
  • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள நெல்லிக்காய் விழுதில் கொட்டவும்.
  • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

மாங்காய் பச்சடி

Ingredients:
  • 1 ஸ்பூன் வேப்பம் பூ
  • 4 ஸ்பூன் மாங்காய் துண்டுகள்
  • 3 ஸ்பூன் வெல்லம்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 ஸ்பூன் உப்பு
  • 1 ஸ்பூன் நெய்


Method:
  • முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • பிறகு வேப்பம் பூ போட்டு வதக்கவும். பிறகு மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
  • பிறகு 1 கப் தண்ணீர் விடவும். மாங்காய் துண்டுகள் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.
  • உப்பு போடவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும்.
  • அருமையான பச்சடி ரெடி.


Notes:
  • புது வருட பிறப்பு அன்று செய்வது வழக்கம். அறு சுவை பச்சடி அது. அறு சுவைகள்: இனிப்பு, கசப்பு, காரம், உப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பு. இவை அனைத்தும் இந்த பச்சடியில் உண்டு. இதை செய்வது மிகவும் சுபலம்.
  • என் வீட்டில் அனைவரும் இந்த பச்சடியை விரும்பி சாப்பிடுவதால் நான் மாங்காய் சீசனில்
  • நிறைய செய்வது வழக்கம். அப்பொழுது வேப்பம் பூ சேர்க்காமல், வெறும் மாங்காய் பச்சடி செய்வேன். குக்கரில் மாங்காயை செதுக்கி போட்டு, வேக வைக்கணும்.
  • பிறகு மிக்ஸியில் போட்டு ஓரு சுற்று ஓட்டணும். பிறகு வழக்கம் போல் பச்சடி செய்ய வேண்டியது தான்.
  • அந்த சுவைக்கு "சொத்தையே எழுதி வைக்லாம் போங்கள்".

டாங்கர்

Ingredients:
  • சிவக்க வறுத்து அரைத்த உளுத்தம் பொடி 1/2 கப்
  • திக்கான மோர் - ஒரு கப்
  • மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது எதானாலும் பரவாஇல்லை 4- 6
  • உப்பு - தேவையான அளவு.


Method:
  • மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
  • வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
  • அவ்வளவுதான் 'டாங்கர் பச்சடி' தயார்
  • எல்லா காரமான துவயல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
  • நாங்க இதில் சாதம் போட்டுக் கூட சாப்பிட்டுவிடுவோம்.
  • ரொம்ப அருமையாக இருக்கும் .


Notes:
  • இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி.

வெள்ளரிக்காய் பச்சடி

Ingredients:
  • 4 வெள்ளரிக்காய்
  • உப்பு
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கப் தயிர்
  • பொடியாக நறுக்கிய மல்லி இலை


Method:
  • நன்கு விளைந்த பெரிய வெள்ளரிக்காயை தோல் சீவி, துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஒரு கப் துருவிய தேங்காய், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து, மிக்சியில் அரைத்து, உப்பில் ஊறிய வெள்ளரிக்காயை நன்கு பிழிந்து தனியே எடுத்து, தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். புளிக்காத கெட்டித் தயிர், ஒரு கப் எடுத்து, கடைந்து, இத்துடன் சேர்த்து, பொடியாக நறுக்கிய மல்லி இலைகளை சேர்த்துக் கலந்தால், வெள்ளரிக்காய் பச்சடி தயார்

பீட்ரூட் பச்சடி 2

Ingredients:
  • 2 பீட்ரூட்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • தயிர்
  • நறுக்கிய மல்லி இலை
  • உப்பு


Method:
  • இரண்டு பெரிய அளவு பீட்ரூட்டை தோல் சீவி துண்டுகளாக்கி, வேக வைத்து துருவிக் கொள்ளவும். வெள்ளரிக்காய் பச்சடியில் கலந்தது போலவே, தேங்காய் கலவை, தயிர், கொஞ்சம் உப்பு, நறுக்கிய மல்லி இலை சேர்த்தால், பீட்ரூட் பச்சடி தயார்.

Blog Archive