Showing posts with label இட்லி வகைகள். Show all posts
Showing posts with label இட்லி வகைகள். Show all posts

Thursday, October 8, 2020

பச்சை பயறு இட்லி

Ingredients:
  • பச்சை பயறு ஒரு கப்
  • உளுத்தம் பருப்பு அரை கப்
  • பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன் (தேவையானால் )


Method:
  • பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
  • அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
  • அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
  • பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
  • சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
  • சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
  • வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
  • எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம்.

அவல் இட்லி 2

Ingredients:
  • அவல் ஒரு கப்
  • இட்லி ரவை ஒன்றரை கப்
  • தயிர் ஒரு கப்
  • தண்ணீர் ஒரு கப்
  • பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன்


Method:
  • அவலை சுத்தம் செய்து கொண்டு, மிக்சி இல் பொடித்துக் கொள்ளவும்.
  • ரவை போல இருந்தாலும் சரி தான்.
  • பிறகு அவல் பொடித்தது, இட்லி ரவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • பிறகு அதில் தயிர், உப்பு மற்றும் தண்ணீர் விட்டு கலக்கவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • நன்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
  • தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதை அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் வைத்துவிடுங்கள்.
  • பிறகு எடுத்துக் பார்த்தால் அவல் ஊறிக்கொண்டு கெட்டியாகி இருக்கும்.
  • எனவே, மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு தளர்த்திக் கொள்ளுங்கள்.
  • இந்த மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
  • இப்போது, மாவில் ENO கலந்து உடனடியாக இட்லி தட்டில் விட்டு , இட்லி வார்க்கவும்.
  • எப்பொழுதும் போல வேகவைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான், கொஞ்சம் கூட உளுந்து இல்லாத, மிகவும் மெத் என்கிற வெள்ளை வெளேர் இட்லி பத்தே நிமிடங்களில் தயார்.....
  • எந்த சட்னியுடனும் அல்லது சாம்பார் அல்லது தோசைமிளகாய் பொடியுடனும் நன்றாக இருக்கும்.

'புஸு புஸு' MTR 'ரவா இட்லி'

Ingredients:
  • கெட்டித்தயிர் - அரை லிட்டர் ( மட்டாக தண்ணீர் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும் )
  • பாம்பே ரவை -2 1 /2 கப்
  • பன்சிரவை - சீரொட்டி ரவை என்றும் சொல்வார்கள் 2 1 /2 கப்
  • பொடியாக நறுக்கிய கொத்துமல்லி ஒரு கப் நிறைய
  • பொடித்த சர்க்கரை ஒரு டீ ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • முழு முந்திரி ஒரு கைப்பிடியளவு - இரண்டாக பிளந்து வைத்துக் கொள்ளவும்
  • எண்ணெய் கால் கப்
  • ENO FRUIT SALT PLAIN 1 1 /2 டேபிள் ஸ்பூன்
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன்
  • பொடியாக துருவிய இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன்


Method:
  • ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு ரவைகளை போட்டு நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய் வைத்து முதலில் முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு, தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, கலந்து வைத்துள்ள ரவை கலவை மீது இதைக் கொட்டவும்.
  • நன்கு கலக்கவும்.
  • உப்பு மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
  • இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தயிர் மற்றும் தண்ணீர் விட்டு கலக்கவும்.
  • ஒவ்வொரு முறை விடும்போதும், இட்லி மாவை நன்கு கலக்க வேண்டும்.
  • தேவையானால் மீண்டும் கொஞ்சம் தயிர் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் என்று விட்டு கலக்கவும்.
  • இப்போது பொடியாக நறுக்கிய கொத்துமல்லி யை போட்டு நன்கு கலக்கவும்.
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • இந்த ஸ்டெப் தான் மிக முக்கியம்....
  • ENO FRUIT SALT ஐ கொடுத்துள்ள அளவின் படி, மாவில் போட்டு நன்கு கலக்கவும்.
  • இதை செய்ததும், உடனடியாக இட்லி தட்டுகளில் மாவை விட்டு விடவேண்டும். ஊற வைக்க வேண்டாம்.
  • பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் முதலில் ஒரு முந்திரி யை நடுவில் வைக்கவும்.
  • அதன்மேல் மாவை விட்டு இட்லி பானை இல் வைக்கவும்.
  • பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.
  • இட்லி பானையை திறந்து, இட்லி தட்டுகளை எடுத்து ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  • நாம் வைத்த மாவைவிட இரண்டு மடங்காக இருக்கும் இந்த இட்லி.
  • பார்க்கவே 'புஸு புஸு ' என்று மிக அழகாக இருக்கும்.
  • நன்கு ஆறினதும், இட்லிகளை மெதுவாக ஸ்பூன் மூலம் எடுக்கவும்.
  • மெத் மெத் என்கிற , MTR போலவே சுவையான 'ரவா இட்லி' தயார் .
  • தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், ஆனால் உங்களுக்கு தேவையானால் , தோசை மிளகாய் பொடி அல்லது எந்த சட்னியுடனும் பரிமாறலாம் .

சான்ட்விச் இட்லி

Ingredients:
  • இட்லி மாவு
  • காரட் துருவல் கொஞ்சம் 
  • பச்சை மிளகாய் தேவையானால்


Method:
  • இட்லி வார்க்கும் போது எண்ணெய் தடவிய தட்டில் முதலில் அரை கரண்டி மாவை இட்லி தட்டில் விடுங்கோ.
  • பிறகு துருவி வைத்துள்ள காரட்டை அதில் வைக்கவும்.
  • அதன் மேல் மீண்டும் இட்லி மாவை விடவும் .
  • இதே போல மற்ற தட்டுகளிலும் விடவும்.
  • இட்லி வெந்ததும் கட் செய்து பார்த்தல் இட்லி நடுவிலே சிகப்பாக காரட் தெரியும்.
  • குழந்தைகளுக்கு பார்க்கவே பிடிக்கும் இந்த சான்ட்விச் இட்லி, சாப்பிடவும் பிடிக்கும்.
  • கறிகாயும் சேரும் உடலுக்கும் நல்லது. 
  • சாஸுடன் பரிமாறலாம்.


Notes:
  • இது போல உங்களுக்கு பிடித்தமான காயை உள்ளே வைத்து இந்த சான்ட்விச் இட்லி தயாரிக்கலாம் .

முருங்கைக் கீரை இட்லி

Ingredients:
  • இட்லி மாவு - 2 கப்
  • இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
  • பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான். 
  • கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம் அவ்வளவுதான் .

இட்லி மசாலா பிரை

Ingredients:
  • 10 இட்லி
  • 2 - 3 பெரிய வெங்காயம்
  • 2 - 3 தக்காளி
  • பச்சை மிளகாய் - தேவையான அளவு
  • உப்பு
  • எண்ணெய் - வதக்க
  • மஞ்சள் பொடி
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்


Method:
  • இட்லிகளை வெட்டி வைத்துகொள்ளவும். 
  • வெங்காயம் தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
  • பச்சை மிளகாய் போடவும்.
  • நன்கு வதக்கவும் .
  • பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
  • உப்பு போடவும்.
  • மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டங்களை நன்கு பொரிக்கவும். (deep fry )
  • வெங்காயம் தக்காளி கலவையில் போடவும்.
  • கிளறி உடனே இறக்கவும்.
  • சுவையான மாலை டிபன் ரெடி.

இட்லி பிரை (Idly fry)

Ingredients:
  • 10 இட்லி 
  • உப்பு
  • எண்ணெய் - வதக்க
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 2 - 4 ஸ்பூன் தோச மிளகாய் பொடி அல்லது சாதா மிளகாய் பொடி


Method:
  • இட்லிகளை வெட்டி வைத்துகொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டங்களை நன்கு பொரிக்கவும். (deep fry )
  • ஒரு பேசினில் போடவும்.
  • வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
  • வறுத்த இட்லி துண்டுகளின் மீது கொட்டவும்.
  • உப்பு மிளகாய் பொடி போட்டு நன்கு குலுக்கவும்.
  • சுவையான மாலை டிபன் ரெடி.


Notes:
  • இதில் மேலும் மசாலா வேண்டுபவர்கள், பூண்டு போடலாம்.
  • மேலும் காய்கறி வேண்டுவோர் , பீன்ஸ் , காரட், உருளை, குடை மிளகாய் போன்ற காய்களை மெலிதாக அரிந்து, வதக்கி சேர்க்கலாம்.

சோள ரவை இட்லி - பன்சி ரவை இட்லி

Ingredients:
  • மோர் - 1 கப் 
  • 'பன்சி' ரவை – சோள ரவை -1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு
  • தாளிக்க எண்ணெய்
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
  • இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால்


Method:
  • ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் சோள ரவையை போடவும்.
  • ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
  • வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊர வைத்த ரவையுடன் போடவும்.
  • உப்பு மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
  • சுவையான சோள ரவை இட்லி தயார் .
  • இதை எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.

ரவை இட்லி ரவா இட்லி

Ingredients:
  • மோர் - 1 கப் 
  • பாம்பே ரவை -1 கப் 
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • காரட் துருவினது தேவையானால் 
  • உப்பு, தாளிக்க எண்ணெய்
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
  • இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால் 
  • மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்


Method:
  • வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
  • உப்பு, காரட் மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
  • ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
  • சுவையான ரவை இட்லி தயார். 
  • தோசை மிளகாய் பொடி அல்லது எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.

ஓட்ஸ் - கோதுமை ரவை இட்லி

Ingredients:
  • மோர் - அரை கப் 
  • ஓட்ஸ் - 1 கப் 
  • கோதுமை ரவை - டாலியா -1/2 கப் 
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு
  • தாளிக்க எண்ணெய்
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
  • பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
  • இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்


Method:
  • வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் கோதுமை ரவையும் போட்டு வறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
  • பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும். 
  • உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
  • பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
  • சுவையான ஓட்ஸ் - கோதுமை ரவை இட்லி தயார் .


Notes:
  • கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் கொழ கொழப்பாக இருக்கும்.

கோதுமை ரவை இட்லி

Ingredients:
  • மோர் - 1 கப் 
  • கோதுமை ரவை - டாலியா -1 கப் 
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு ,தாளிக்க எண்ணெய்
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
  • இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால்


Method:
  • ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் கோதுமை ரவையை போடவும்.
  • ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
  • வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊர வைத்த ரவையுடன் போடவும். 
  • உப்பு மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
  • சுவையான கோதுமை ரவை இட்லி தயார் . 
  • சர்க்கரை நோயாளுகளுக்கான நல்ல உணவு இது நாமும் சாப்பிடலாம், வித்தியாசமாக இருக்கும், எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.

ஓட்ஸ் இட்லி

Ingredients:
  • மோர் - அரை கப் 
  • ஓட்ஸ் - 1 கப் 
  • பாம்பே ரவை - 1/2 கப் 
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு
  • தாளிக்க எண்ணெய்
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
  • பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
  • இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்


Method:
  • வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
  • பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும். 
  • உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
  • பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
  • சுவையான ஓட்ஸ் இட்லி தயார்.


Notes:
  • கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் கொழ கொழப்பாக இருக்கும்.

கொள்ளு இட்லி

Ingredients:
  • கொள்ளு - 1 கப் 
  • அரிசி - 3 கப் 
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • முதலில் கொள்ளு மற்றும் அரிசியை தனித்தனியாக அலசி ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 
  • அப்புறம் அதனை கிரைண்டரில் அல்லது மிக்சி இல் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
  • அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து , குறைந்தது 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். 
  • பிறகு அதனை இட்லிகளாக வார்க்கவேண்டியது தான்.
  • ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெடி.
  • இதனை வெங்காயம் தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப சூப்பராக இருக்கும்.


Notes:
  • கேழ்வரகு இட்லி போலவே இந்த கொள்ளிலும் இட்லி செய்யலாம். இதோ அதன் ரெசிபி.

கேழ்வரகு உளுந்து அவல் இட்லி

Ingredients:
  • கேழ்வரகு மாவு - 4 கப்
  • உளுந்து - 1 கப்
  • மெல்லிசு அவல் - 2 - 2 1/2 கப்
  • ( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)


Method:
  • அவல் மற்றும் உளுத்தம்  பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
  • பிறகு  கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும். 
  • தண்ணீர் மட்டா  விடவும்.
  • ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும். 
  • அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். 
  • ஒரு 8 மணி நேரம் கழித்து இட்லி வார்க்கலாம்.
  • அருமையான கேழ்வரகு இட்லி தயார்.

அவல் இட்லி

Ingredients:
  • கெட்டி அவல் 2 கப்
  • மோர் அல்லது தண்ணீர் கொஞ்சம் 
  • கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன் 
  • கறிவேப்பிலை கொஞ்சம் 
  • உப்பு
  • தாளிக்க எண்ணெய்
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன் 
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன் 
  • பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
  • இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்


Method:
  • அவலை 2 -3 முறை நன்கு களைந்து பிழிந்து மோரில் ஊற வைக்கவும். 
  • வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊறிய அவல் மீது கொட்டவும்.
  • உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • அவ்வளவு தான் எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
  • சுவையான அவல் இட்லி ரெடி.

வெந்தய இட்லி

Ingredients:
  • இட்லி அரிசி -- 3 ஆழாக்கு (நான் இன்று பச்சரிசி  இல் தான் செய்தேன் )
  • வெந்தயம் -- - 3 டேபிள் ஸ்பூன்  (1 Table spoon = 15 grams)


Method:
  • வெந்தயத்தை  தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். 
  • இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போறும். 
  • முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.
  • 3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவையாக இருக்கும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக  தண்ணீர் சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும். 
  • உளுந்தை போல பார்ப்பதற்கு நுரைத்து வரும்; நம்ப முடியாத அளவிற்கு புஸு புஸு என்று வரும்.
  • அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். 
  • பிறகு அரிசியை   கொஞ்சம் நற நற வென அரைக்கவும். 
  • இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். 
  • மறு நாள் காலை நன்கு  பொங்கி வந்திருக்கும். 
  • எப்போதும்போல் இட்லி தட்டில் நனைத்த துணி அல்லது எண்ணை தடவி மாவை விட்டு, குக்கரில் ஆவியில் 7/10 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும். 
  • ஆறிய பிறகும் மெத்தென்றுதான் இருக்கும்.
  • அரைக்கும் பக்குவம் மிகவும் முக்கியம்.
  • மறு நாள்காலை தண்ணீர் ஊற்றக்கூடாது; முதல் நாளே பக்குவமாக கரைத்து வைக்க வேண்டும்.
  • அவ்வளவுதான் சூப்பர் வெந்தய இட்லி ரெடி. 
  • இந்த இட்லி ரொம்ப வெள்ளையாக இருக்காது, கொஞ்சம் கிரீம் கலரில் இருக்கும்.
  • வெந்தயம் என்பதால் அப்படி இருக்கும்.
  • இன்று காலை நான் செய்தேன், இரவு வரை மெத் என்று இருந்தது.


Notes:
  • உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த இட்லி மெத்தென்றும் இருக்கும்.
  • வெந்தயம் சேர்த்ததே தெரியாத அளவிற்கு இருக்கும்.
  • மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.
  • வாரம் ஒரு முறை வெந்தய இட்லி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

பார்லி கோதுமை ரவை இட்லி

Ingredients:
  • பார்லி 2 கப்
  • கோதுமை ரவை 1 கப்
  • மிளகாய் வற்றல் 4 -5 
  • உப்பு


Method:
  • பார்லியை நன்கு களைந்து ஒரு 4 மணிநேரம் ஊர வைக்கவும்.
  • கோதுமை ரவையை 1/2 மணி ஊர வைக்கவும்.
  • பிறகு இரண்டையும் மிளகா உப்பு போட்டு மைய அரைக்கவும்.
  • மீண்டும் ஒரு அரைமணி அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு இட்லி வார்க்கவும்.
  • ஹெல்தியான இட்லி இது.


Notes:
  • வேணுமானால் தண்ணிருக்கு பதில் தயிர் உபயோகிக்கலாம். இந்த மாவில் தோசையும் வார்க்கலாம்.

கோதுமை இட்லி

Ingredients:
  • கோதுமை மாவு 2 கப்
  • உளுத்தம் பருப்பு 3/4 கப்
  • உப்பு


Method:
  • கோதுமை மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
  • உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கோதுமை மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
  • மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
  • நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
  • சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் , பூண்டு துவையல் அல்லது காரமான வெங்காய சட்னி யுடன் ரொம்ப நல்லா இருக்கும்.

கேழ்வரகு இட்லி - 2

Ingredients:
  • கேழ்வரகு மாவு - 2 கப் - கடை இல் வாங்கிய மாவு
  • உளுத்தம் பருப்பு - 3/4 கப் 
  • உப்பு - 1 தே.கரண்டி


Method:
  • உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். 
  • ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும். 
  • கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக, கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
  • கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.
  • ( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். 
  • இந்த மாவு புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.
  • புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் விட்டு, அரிசி இட்லியை போலவே ஆவி இல் வேகவைக்கவும்.
  • இப்போது சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.


Notes:
  • கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber), புரோட்டின்(Protein) காணப்படுகின்றது.
  • டயபெட்டிக், வயதனாவர்களுக்கு ஏற்ற உணவு.

காஞ்சிபுரம்  இட்லி

Ingredients:
  • அரிசி 1 கப்
  • உளுத்தம் பருப்பு 3/4 கப் ( சமயத்தில் அரிசிக்கு சமமாகவும் உளுந்து போடுவோம் )
  • மிளகு 1 டீ ஸ்பூன்  உடைக்கவும் 
  • சீரகம் 1 டீ ஸ்பூன்  உடைக்கவும் 
  • சுக்கு பொடி 1/2 டீ ஸ்பூன் 
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன் 
  • நெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை


Method:
  • அரிசி  உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
  • ஒரு  மணி ஊறினால் போறும்.
  • கொஞ்சம் கர கர பாக அரைக்கணும் .
  • இந்த இட்லிக்கு அரைப்பது தான் ரொம்ப முக்கியம்.
  • உப்பு போட்ட கரைத்து அப்படியே ஒரு 12 மணிநேரம் வைக்கணும். 
  • மறுநாள் காலை, நெய்யை உருக்கி மாவில் விட்டு நன்கு கலக்கவும்.
  • மேலும் அதில் உடைத்த மிளகு, சீரகம், சுக்கு பொடி, பெருங்காயப்பொடி மட்டும் கறிவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும்.
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
  • சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார் . 
  • தொட்டுக்கொள்ள ஏதும் வேண்டாம் வெறுமனவே சாப்பிடலாம் நல்லா இருக்கும்.
  • வேண்டுமானால் தோசைமிளகாய் பொடி நல்லா இருக்கும்.
  • இட்லி மேல நல்லெண்ணெய் விட்டு கொண்டும் சாப்பிடலாம்.


Notes:
  • அதாவது  குடலை  இட்லி  - இது காஞ்சிபுரம் கோவிலில் செய்வது; ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை முயன்று பாருங்கள்.
  • சாதாரணமாக இந்த குடலை இட்லி என்பதை இலைகளில் தான் செய்வா நாங்கள்  வீடுகளில் செய்யும் போது சின்ன சின்ன கிண்ணிகள் அல்லது தம்ளர்களில்
  • செய்வோம்.
  • இப்போவெல்லாம்   இட்லி தட்டிலே செய்கிறோம். ஏன் என்றால், அப்படி வைக்கும் போது வேக ரொம்ப நாழி ஆகிறது  நீங்க வேண்டுமானால் குட்டி குட்டி
  • கிண்ணிகளில்  எண்ணெய் தடவிவிட்டு மாவை விட்டு இட்லி பண்ணலாம்.

Blog Archive