Showing posts with label
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள்.
Show all posts
Showing posts with label
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள்.
Show all posts
Ingredients:
- பச்சை பயறு ஒரு கப்
- உளுத்தம் பருப்பு அரை கப்
- பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன் (தேவையானால் )
Method:
- பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
- அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
- அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
- பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
- சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
- சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
- வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
- எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம்.
Ingredients:
- வறுத்த வேர்க்கடலை 1 /2 கப் ....ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
- முளைவிட்ட பச்சை பயிறு 1/ 2 கப்
- வெங்காயம் 1 - பொடியாக நறுக்கவும்
- தக்காளி 1 - விதை நீக்கி பொடியாக நறுக்கவும்
- பச்சை மிளகாய் - 1 - பொடியாக நறுக்கவும்
- துருவிய இஞ்சி - 1/2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
- உப்பு
Method:
- மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பேசினில் போட்டு கலக்கவும்.
- ஒரு ஸ்பூன் போட்டு, சாப்பிடத் தரவும்.
- சுவையான சாலட் இது.
- நடு நடுவில் வேர்க்கடலை 'கடுக் முடுக் ' என்று இருக்கும், அது பிடிக்காதவர்கள் பச்சை வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.
Notes:
- வேண்டுமானால் இதில் சில மாற்றங்கள் செய்து சாப்பிடலாம்....அதாவது, சோளம் உரித்தது அல்லது வேகவைத்தது, பயறு கொஞ்சமாய் வேகவைத்தது, பச்சை வேர்க்கடலை, துருவிய வெள்ளரிக்காய் என்று தேவையானதை சேர்க்கலாம். வடக்கே 'பச்சையாக கொத்துக்கடலை' செடியுடன் கிடைக்கும், அது கிடைத்தாலும் இதில் சேர்க்கலாம்.
Ingredients:
- எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு 1 கப்
- பயத்தம் பருப்பு – 1 கப்
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப்
- பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்துமல்லித் தழை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
- மிளகு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
- உப்பு
- எண்ணெய் – தேவையான அளவு.
Method:
- பயத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைக்கவும்.
- அரைத்த மாவுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.
- அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.தோசைக்கல்லைக் அடுப்பில் வைத்து, சிறிய அடைகளாக வார்த்து, எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
- அடைக்குத் தொட்டுக்கொள்ள காரமான சட்னி அருமையாக இருக்கும்.
Ingredients:
- 4 கப் கேழ்வரகு மாவு
- 1 கப் உளுந்து
- 2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
- ( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
Method:
- அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
- பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- தண்ணீர் மட்டா விடவும்.
- ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
- அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
- அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
- அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
- ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன். சூப்பர்.
Ingredients:
- கேழ்வரகு மாவு ( களைந்து உலர்த்தி அரைத்தது ) 2 கப்
- உளுத்தம் பருப்பு 1/2 கப்
- ஒரு சிட்டிகை சோடா உப்பு
- உப்பு
Method:
- கேழ்வரகு மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
- உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
- பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கேழ்வரகு மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- உப்பு மற்றும் சோடா உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
- நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
- கலர் தான் கருப்பா இருக்கும் ஆனால் உடம்புக்கு தெம்பு , ரொம்ப நல்லது.
- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் , பூண்டு துவையல் அல்லது காரமான வெங்காய சட்னி யுடன் ரொம்ப நல்லா இருக்கும்.
Ingredients:
- ஓட்ஸ் 1 கப்
- ரவா 1 கப்
- தயிர் 1 1/2 கப்
- தேவையான காய்கறிகள் 1 கப் ( துருவவும்) - தேவையானால் சேர்த்துக்கொள்ளுங்கள்
- இஞ்சி 1 ஸ்பூன் துருவியது
- பச்சை மிளகாய் 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
- பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- எண்ணை 2 - 3 ஸ்பூன்
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
Method:
- வாணலி இல் முதலில் ஓட்ஸ் மற்றும் ரவையை தனித்தனியாக எண்ணை இல்லாமல் வறுத்து தனித்தனியே வைக்கவும்.
- வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுந்து தாளிக்கவும்.
- பிறகு, இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
- பெருங்காயப்பொடி சேர்க்கவும்.
- இப்போது வறுத்து வைத்துள்ள ஓட்ஸ் மற்றும் ரவையை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வறுக்கவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில், தயிர் போட்டு நன்கு 'சிலுப்பவும்' ( கலக்கவும்)
- உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- வறுத்த சாமான்களை அதில் கோட்டவும்.
- ஒரு 1/2 மணி ஊரவிடவும்.
- தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
- உப்பு சரிபார்த்து, எண்ணை தடவிய தட்டில் விட்டு இட்லி வர்க்கவும்.
- இந்த இட்லி க்கு தொட்டுக்கொள்ள எது வுமே வேண்டாம், 'வெறுமனே' வே நல்லா இருக்கும்.
Notes:
- காய்கறிகள் சேர்ப்பதானால், இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் போட்டு வதக்கினதும் , நறுக்கி அல்லது துருவி வைத்துள்ள காய்கறிகளை போட்டு துளி உப்பு போட்டு வதக்கவும். காய் நன்கு வதங்கினதும் ஓட்ஸ் மற்றும் ரவை போடவும். சரியா?
- குழந்தைகளுக்கு செய்வதானால் , துருவின காரட், உருளை, பச்சைப்பட்டாணி, காலி பிளவர் ,தக்காளி எல்லாம் போடலாம். ரொம்ப கலர் ஃபுல் ஆக இருக்கும். டேஸ்ட் ம அபாரமாக இருக்கும்.
Ingredients:
- ஓட்ஸ் 1கப்
- உளுத்தம் மாவு அரைத்தது 2 கரண்டி
- உப்பு தேவையானவை
Method:
- ஒட்ஸை மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
- இட்லி மாவில் ஓட்ஸ் மாவுடன் கலந்து , மிக்கிசி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
- உப்பு சேர்த்து கலக்கவும்.
- ஒரு 10 நிமிஷம் கழித்து, மாவு சற்று கெட்டியானனதும், தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு தளர்த்தி கிக்கொண்டு, எண்ணை தடவிய தட்டில் இட்லி வார்க்கவும்.
- சூடாக சாப்பிடவும், விருப்பமான எந்த சட்னி யுடனும் நல்லா இருக்கும்.
Notes:
- உடனடியாக இட்லி வார்க்க வேண்டும் என்றால்; இப்படி செய்லாம்.
Ingredients:
- ஓட்ஸ் 2 கப்
- உளுத்தம் மாவு அரைத்தது 1/2 கப்
- உப்பு தேவையானவை
Method:
- இட்லி மாவில் ஒட்ஸை கலந்து , மிக்கிசி இல் ஒரு சுற்று சுற்றி எடுங்கள் .
- உப்பு சேர்த்து கலக்கவும்.
- ஒரு 6 மணி நேரம் புளிக்கட்டும்.
- பிறகு எண்ணை தடவிய தட்டில் இட்லி வார்க்கவும்.
- சூடாக சாப்பிடவும், வெங்காய சட்னி நல்லா இருக்கும்.
Notes:
- இதை பல முறைகளில் செய்லாம் , ஒவ்வொன்றாக பார்ப்போம்.
- தேவையானால், மிளகு சீரகம் அல்லது, இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வார்க்கலாம். சுவை கூடும்.
Ingredients:
Method:
- சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல நாமும் நாம் குழந்தைகளும் சாப்பிடலாம். பத்திய சாப்பாடு என்ற நினைப்பே வராது. 'வெரைட்டியாக', 'வித்தியாஸ்மாக' இருக்கும் அவ்வளவ்தான் . என்ஜாய்!