Showing posts with label பிரட் இல் பலவகை உணவுகள். Show all posts
Showing posts with label பிரட் இல் பலவகை உணவுகள். Show all posts

Tuesday, October 6, 2020

வெஜ் சாண்ட்விச்

Ingredients:
  • சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10
  • புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப்
  • துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப்
  • சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணெய் – தேவையான அளவு.


Method:
  • துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும்.
  • அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும்.
  • இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, டோஸ்ட்டர் அல்லது தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து , எடுத்துப் பரிமாறவும்.


Notes:
  • இல்லாவிட்டால் வெண்ணை போட்டு முதலில் டோஸ்ட் செய்து விட்டு, காய்கறி கலவையை வைத்தும் தரலாம்

பிரெட் இல் பலவகை

Ingredients:


    Method:
    • சாதாரணமாக, பிரட் என்றதும் பிரட் பட்டர் ஜாம் தான் நினைவுக்கு வரும்.
    • 1. பிரட் இல் வெண்ணை மற்றும் ஜாம் தடவி சாப்பிடவேண்டியது தான்.
    • அதுலயே பட்டர் ஜாம் கு பதிலாய் பல விதம் பார்ப்போம்.
    • 2. பிரட் ஐ தோசை கல் ளில் டோஸ்ட் செய்து ( துளி நெய் விட்டு பிரட் ஐ புரட்டி எடுக்கணும் ) அதில் ஜாம் தடவி சாப்பிட்ல்லாம்.
    • 3. மைக்ரோவவே இருந்தால், இரண்டு பிரட் துண்டங்களின் நடுவில் cheese let வைத்து ஒரு 30 செகண்ட் ஓவன் ல வைத்து சாப்பிடலாம்.
    • 4. இரண்டு பிரட் துண்டங்களின் நடுவே, வெள்ளரி தக்காளி வெங்காயம் போன்றவற்றை நறுக்கி வைத்து சாப்பிடலாம்.
    • 5. நல்ல கனிந்த வாழை பழத்தை "ஸ்லைஸ்" பண்ணி, பிரட் நடுவே வைத்து சாப்பிடலாம்.
    • 6. ஒரு பிரட் ஸ்லைஸ் , அதன் மேலே ஒரு சீஸ் ஸ்லைஸ், அதன் மேலே வெங்காயம். அதன் மேலே ஒரு தக்காளி அதன் மேலே வெள்ளரி அத்தேன் மேலே கேரட் அதன் மேலே மற்றும் ஒரு சீஸ் ஸ்லைஸ் அதென்மேலே ஒரு பிரட் ஸ்லைஸ் என் வைத்து, ஒரு "பல் குத்தும் குச்சி" யால் குத்தி ஒரு 45 செகண்ட் ஓவன் ல வைக்கவும் . சீஸ் கொஞ்சமாக உருகி நல்லா இருக்கும்.
    • 7. ஓவன் இல்லாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.
    • 8 வேண்டுமானால் உப்பு மிளகு பொடி தூவி ஓவன் இல் வாக்கலாம்.
    • 9. அல்லது தக்காளி சாஸ் விடலாம்.
    • 10. இல்லயா, ரெண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் ஃபிரிஜ் இல் இருக்கும் ஏதாவது ஒரு துவையல் அல்லது முதல் நாள் கறியமுதை வைத்து சாப்பிடலாம்.
    • 11. அதும் இல்ல யா ? புளி பேஸ்ட் ஐ தடவி சாப்பிடலாம்.

    பிரட் "left over curry” சாண்ட்விச்

    Ingredients:
    • பிரட்
    • ஏதாவது "left over curry" இல்லாவிடில் வெங்காயம்
    • தக்காளி
    • உருளை கிழங்கு
    • சீரகம்
    • கடுகு
    • கொஞ்சம் எண்ணை
    • பிரட் டொஸ்டர்.


    Method:
    • உருளை யை வேகவைக்கவும்.
    • ( குக்கர் இல் தண்ணீர் விட்டோ அல்லது ஓவன் லோ வைக்கவும், வெந்ததும் தோல் உரித்து மசிக்கவும் )
    • வாணலி இல் எண்ணைவிட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
    • அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி போடவும்.
    • வதக்கவும்.
    • வெந்த உருளைக்கிழங்கை போடவும்.
    • தண்ணீர் விடவும்.
    • உப்பு போடவும்.
    • நன்கு கிளறவும்.
    • காய் ரெடி.
    • இப்ப இரண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் காய் வைத்து அதன் மேல் துளி நெய் தடவி, டொஸ்டர் இல் வைக்கவும்.
    • காஸ் இன் மே தீ இல் இருபுறமும் சுடவும்.
    • திறந்தால் டோஸ்ட் ரெடி.
    • ஏற்கனவே ஏதாவது curry இருந்தால் அதை பிரட் நடுவில் வைத்து மேலே சொன்னது போல் செய்யவும். டொமாட்டோ சாஸ் சுடன் நன்றாக இருக்கும்.


    Notes:
    • எலக்ட்ரிக்கல் டொஸ்டர் இருந்தால் இன்னும் சுலபம்

    சக்கரை தூவின பிரட்

    Ingredients:
    • 4 பிரட் ஸ்லைஸ்
    • 3 ஸ்பூன் நெய்
    • 2 ஸ்பூன் சக்கரை


    Method:
    • பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் .
    • வாணலி இல் நெய் விட்டு பிரட் துண்டங்களை நல்ல 'மெத்' என சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
    • சக்கரையை தூவி இறக்கவும்.
    • அவ்வளவு தான். ருசியோ ருசி.

    பிரட் ரோல்ஸ்

    Ingredients:
    • சால்ட் பிரட் 10 ஸ்லைஸ்
    • வேக வைத்த உருளை கிழங்கு 3 (உதிர்த்து வைக்கவும் )
    • வெங்காயம் 1 (பொடியாக நறுக்கி வைக்கவும் )
    • பச்சை மிளகாய் 10
    • மிளகாய் பொடி 1 ஸ்பூன்
    • கடுகு 1 ஸ்பூன்
    • சீரகம் 1/2 ஸ்பூன் ( தேவையானால் )
    • உப்பு
    • எண்ணை


    Method:
    • முதலில் வாணலி இல் எண்ணை விட்டு கடுகு சீரகம் தாளிக்கணும்.
    • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கணும்
    • பிறகு வெங்காயத்தை போடணும்.
    • பிறகு உருளைக்கிழங்கை போடணும்.
    • எல்லாவற்றையும் நன்கு கிளறனும்.
    • உப்பு மிளகாய் பொடி போட்டு மறுபடி கிளர்னும்.
    • உப்பு உறைப்பு சரி பார்த்து இறக்கிடணும்
    • வேண்டுமானால் கொத்துமல்லி தூவலாம்.
    • அறினதும் சின்ன சின்ன உருண்டை களாக உருட்டி வைக்கவும்.
    • ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு சுடவைக்கணும்.
    • பிரட் இன் ஓரங்களை கட் செய்து விட்டு தயாராய் வைத்துக்கொள்ளவும்
    • ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக்கொண்டு தண்ணீரில் முக்கவும் , இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி தண்ணீரை பிழியவும்.
    • பிறகு அந்த பிரெட் நடுவே ஒரு உருளை கறி உருண்டையை வைத்து, பிரெட் ஆலேயே மூடணும்.
    • பிறகு நல்லா உருட்டி எண்ணை ல போடணும்.
    • நல்ல பொன்னிறமானதும் எடுத்துடனும்.
    • இவ்வாறு எல்லா பிரெட் ஐயும் செய்யனும்.
    • வெஜிடேபிள் போண்டா போலவே ரொம்ப நல்லா இருக்கும்.
    • மேலே பகுதி ரொம்ப கர கர ப்பாகவும் உள்ளே மெத் என்றும் இருக்கும்.
    • பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்.
    • டொமாட்டோ சாஸுடன் பரிமாறலாம்.


    Notes:
    • பிரட் இன் ஓரங்களை பிரெட் குர் குரே செய்ய உப்யோகப்படுத்தலாம்

    பிரட் இல் 'குர் குரே'

    Ingredients:
    • எந்த பிரட் ஆனாலும் சரி 10 ஸ்லைஸ்
    • கொஞ்சம் நெய்
    • உப்பு
    • மிளகு பொடி


    Method:
    • பிரட் ஐ சின்ன சின்ன துண்டங்களாக ( 1 சென்டி மீட்டர் அளவுக்கு சின்னதாக )
    • கட் செய்து வைக்கவும்.
    • அப்படியே விட்டால் 4 - 5 மணி நேரத்தில் அவை காய்ந்துவிடும் , இல்லாவிட்டால் மக்ரோவேவ் ஓவனிலோ, அடுப்பில் வாணலி வைத்தோ வறுக்கவும்.
    • காந்தாமல் வறுக்கணும்.
    • அவை நல்ல கர கர வென வரும் போது , நெய் விட்டு வறுக்கணும். ( இப்படி செய்வதால் நெய் குறைவாக செலவாகும் )
    • வறுத்து எடுத்ததும் ஒரு பேசினில் போட்டு உப்பு மிளகு பொடி போட்டு குலுக்கவும்.
    • அவ்வளவுதான் , பிரட் குர் குரே தயார்.
    • டிரைன் ல போகும் போது , மதிய வேளைகளில் 'போர் ' அடிக்கும்போது இது ரொம்ப நல்லா இருக்கும்.
    • மாலை வேளை களிலும் டீ உடன் நல்ல இருக்கும்.
    • செய்து பாருங்கள் அப்புறம் மீந்த பிரட் களில் இதயே தான் செய்வீர்கள்

    Images:


    பிரட் பஜ்ஜி - 3

    Ingredients:
    • சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
    • கடலை மாவு 2 கப்
    • சோள மாவு 1/4 cup
    • மிளகாய் பொடி 2 ஸ்பூன்
    • ஓமம் 1/2 ஸ்பூன் (தேவையானால் )
    • பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
    • 2 சிட்டிகை சோடா உப்பு
    • 2 சிட்டிகை கேசரி கலர்
    • உப்பு
    • பொறிக்க எண்ணை


    Method:
    • ஒரு பேசினில் கடலை மாவு, சோள மாவு,மிளகாய் பொடி, ஓமம், பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
    • கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
    • பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
    • ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
    • மெல்ல திருப்பி விடுங்கள்.
    • நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
    • வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
    • சோள மாவு சேர்ப்பதால் இது ரொம்ப 'கிறிஸ்ப் 'ஆக இருக்கும் அதாவது ரொம்ப மொரு மொருப்பாக இருக்கும்
    • நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
    • மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .


    Notes:
    • உங்களுக்கு இந்த பஜ்ஜிகள் இன்னும் காரமாக வேண்டுமானால் , பிரட் துண்டங்கள் மேல் துளி மிளகாய் பொடி உப்பு கலவையை தடவி பின் மாவில் முக்கி பஜ்ஜி போடுங்கள் . சரியா?

    பிரட் பஜ்ஜி - 2

    Ingredients:
    • சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
    • தோசை மாவு 2 கப்
    • மிளகாய் பொடி 2 ஸ்பூன்
    • டொமெட்டோ கெட்ச் அப் அல்லது சாஸ் 2 ஸ்பூன்
    • பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
    • 2 சிட்டிகை சோடா உப்பு
    • 2 சிட்டிகை கேசரி கலர்
    • உப்பு
    • பொறிக்க எண்ணை


    Method:
    • ஒரு பேசினில் தோசை மாவு, மிளகாய் பொடி, பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
    • தேவையானால் கொஞ்சமாக தண்ணீர் விடவும்
    • நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
    • பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
    • ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
    • மெல்ல திருப்பி விடுங்கள்.
    • நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
    • வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
    • பிரட் பஜ்ஜி தயார்
    • நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
    • மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .


    Notes:
    • மீந்து போகும் தோசைமாவில் இதை செயலாம். எண்ணை வேண்டாம் என நினைப்பவர்கள் தோசை கல்லில் போட்டு மட்டாக எண்ணை விட்டு பொறுமையாக , பஜ்ஜி நன்கு வெந்ததும் எடுக்கலாம் .

    பிரட் ஹல்வா - 2

    Ingredients:
    • மில்க் பிரட்10 ஸ்லைஸ்
    • மில்க் மெய்டு 1/2 டின்
    • நெய் 1 - 2 டேபிள் ஸ்பூன்
    • முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
    • திராக்ஷை 10 - 12


    Method:
    • முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
    • பிரட் ஐ மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
    • பூந்துருவலாக வரும்.
    • வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
    • அடுப்பை சின்னதாக்கி விட்டு பிரட் துருவலை போடவும்.
    • ஒரு கிளறு கிளறி மில்க் மெய்டு செக்கவும்.
    • நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
    • அவ்வளவு தான் சுவையான 'பிரட் ஹல்வா' நிமிடத்தில் தயார்.


    Notes:
    • மில்க் மெய்டு சேர்ப்பதால் சர்க்கரை மற்றும் பால் வேண்டாம்.

    Blog Archive