Showing posts with label பாட்டி கைவைத்தியம். Show all posts
Showing posts with label பாட்டி கைவைத்தியம். Show all posts

Monday, June 22, 2015

குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க !

குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க!

1. ரொம்ப சுலபமான மருந்து இது. வேற ஒண்ணும் இல்லை, ஒரு முழு ஆப்பிள்  , ஆவியில் வேக வைக்கணும்..................கொஞ்சம் ஆறினதும் தோல் விடைகள் நீக்கி, மசித்து அப்படியே சாப்பிடனும். அவ்வளவு தான் பேதி நின்றுவிடும்.
பெரியவர்கள் ஒரு முழு ஆப்பிள் ம் சாப்பிடலாம், குழந்தைகளின் வயதை  பொறுத்து குறைத்து தரணும் 

2. பெரியவர்களுக்கு பேதி ஆக
இருந்தால்டீ டிகாஷனில் அரை மூடி
எலுமிச்சம் பழச்சாறினைக் கலந்து சர்க்கரை 
சேர்க்காமல்குடிக்க வேண்டும்...
-
உடனே பலன் தெரியும்...

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

நிறைய தண்ணீர் குடிக்கணும். எவ்வளவு சூடு குடிக்க முடியுமோ அவ்வளவு சூடா குடிக்கலாம்.

முழு ஏலக்காய் 3 எடுத்துக்கொண்டு , இலுப்ப கரண்டி இல் போட்டு மெல்லிய தீ இல் வறுக்கணும் . அது நல்லா உப்பிக்கொண்டு , brown colour இல் மாறும் போது, அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடணும். நல்லா ஆறினதும் அதை உரித்து, பொடி பண்ணி தேனுடன் கலந்து சாப்பிடணும்.

இது 1 வேளைக்கான மருந்து அனேகமாய் இதிலே யே சரியாகி விடும். இல்லா விட்டால், மறு முறை செய்து சாப்பிடவும். பெரும்பாலும் இந்த நெஞ்சு எரிச்சல் இரவு நேரங்களில் அதிகம் சாப்பிட்டு விட்டு போதிய தண்ணீர் குடிக்காமல் படுப்பதால் ஏற்படும். எனவே மேல் சொன்ன பொடியை செய்து சாப்பிட்டு விட்டு நிறைய தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் காலை சரியாகி விடும்.

சின்ன குழந்தை முதல் பெரியவர் வரை இதை சாப்பிடலாம். பெரியவர்களுக்கு இது ஒரு வேளை மருந்து. குழந்தைகளுக்கு 1 சிட்டிகை முதல் 1 ஏலக்கா இன் பொடி அளவு வரை கொடுக்கலாம் புன்னகை

Wednesday, August 31, 2011

பூண்டு ரசம்

மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செயலாம் அல்லது இப்படி தனியாகவே பூண்டு உரித்து போட்டும் செயலாம். எப்படி செய்தாலும் சாப்பிட்டதும், கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஜலம் வரணும், அது தான் கணக்கு , சரியா?

தேவையானவை :

கண்டத்திப்பிலி 2 ஸ்பூன் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும – மைலாபூர் “டப்பா செட்டி கடை” ல கிடைக்கும் )
குண்டு மிளகாய் 2 -4
மிளகு 2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1 ஸ்பூன்
தனியா 1 – 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 -1 1/2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
வேகவத்த துவரம் பருப்பு 1/2 கப்
அல்லது துவரம் பருப்பு வேகவைத்த ஜலம் 1 கப்
உரித்த பூண்டு 1 கை நிறைய

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு, கண்டத்திப்பிலி, மிளகாய் ,மிளகு, துவரம் பருப்பு, தனியா எல்லாம் போட்டு வறுக்கவும்.
அதே வாணலி இல் மீதி நெய் யை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து , பூண்டை நன்றாக வதக்கவும்
அதிலிருந்து ஒரு 10 பல் பூண்டு எடுத்து , வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் போட்டு , ஆறினதும் நல்ல விழுதாக தண்ணீர் விட்டு அரைக்கவும்
பூண்டு வதக்கிய வாணலி இல் 1 டம்ப்லர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
நன்கு கலக்கவும் , நன்கு கொதிக்க விடவும்.
பூண்டு நன்கு வெந்ததும், அரைத்துவைத்துள்ளதை கொட்டவும்
மீண்டும் கொதிக்க விடவும்.
பருப்பை கரைத்துவிடவும அல்லது பருப்பு ஜலம் விடவு.
மீண்டும் நன்கு கொதித்ததும் இறக்கவும்
ரொம்ப வாசனையாக சூப்பராக இருக்கும்.
நல்ல சூடு சத்தத்தில் நெய் விட்டு இந்த பூண்டு ரசமும் விட்டு சாப்பிடணும்.
நல்ல தளர பிசையுங்கோ.
வேண்டுமானால் 1 கப் ரசம் குடியுங்கோ ரொம்ப நல்லது.

குறிப்பு: இதற்க்கு பருப்பு துவையல் செய்தால் தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும் . மிளகு அதிகமாய் மிளகாய் குறைவாய் இருக்கணும். சில பேர் பருப்புடன் பூண்டையும் வேக வெச்சுடுவா, அப்படி செய்தால் பூண்டு ரொம்ப குழியந்துவிடும் . இப்படி வதக்கி போட்டால் நல்லா கண்ணுக்கு தெரியும், கரண்டியால அரித்து போட்டுக்கலாம்


மிளகு குழம்பு

மிளகு குழம்பு – உடலுக்கு ஆரோகியமான ஒரு குழம்பு. பத்திய குழம்பு என்று கூட சொல்லலாம்.

தேவையானவை:

10 குண்டு மிளகாய்
2spoon தனியா
2 – 4 ஸ்பூன் மிளகு
பெருங்காயம்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
கறிவேப்பிலை – கொஞ்சம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

முதலில் சொன்னவைகளை எண்ணெயில் வறுத்து, புளி பேஸ்ட் உடன் நன்கு அரைக்கவும்.
இரண்டு டம்பளர் தண்ணிரில் கரைக்கவும்.
ஒரு ஆழமான வாணலில் தாரளமாக எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்ததை கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் போட்டு, மிளகு குழம்பு விட்டு சாப்பிடவும்.
‘பருப்பு துவைய’ லுடன் நன்றாக இருக்கும்.

குறிப்பு: இந்த குழம்பில் காய்ந்த மாங்காய் துண்டங்கள் போட்டும் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புளி மற்றும் உப்பை குறைக்கவும்.

சளி , ஜுரத்துக்கு மிளகு ரசம்

முதலில் சளி , ஜுரத்துக்கு என்ன சாப்பிடலாம் என்ன கூடாது என பார்போம். சாதாரணமாக எல்லோருக்கும் சளி பிடிக்கும் , அது உடம்பு சூட்டாலா அல்லது குளுமையாலா என முதலில் தெரிந்து கொள்ளனும்.

குளுமையால சளி என்றால் தலை கனக்கும், கழுத்து , அள்ளை பக்கம் வலிக்கும். மூக்கில் சளி வரும். அப்ப என்ன சாப்பிடணும் என்றால், மிளகு சீரக ரசம், பூண்டு ரசம், மிளகு குழம்பு, மிளகு டீ என மிளகு அதிகம் சேர்த்துகனும்.

இதுக்கு ரூல் என்ன வென்றால், “சளி பிடித்தால் வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு நல்ல தூங்கணும். ஜுரம் வந்தால் “லங்கனம் பரம ஔஷதம் ” அதாவது சாப்பிடாமல் பட்டினி போடணும்” என்பா என் பாட்டி .

நல்லா விக்க்ஸ் வேடு பிடிக்கலாம், உடல் சூடுதரும் பண்டங்களை சாப்பிடலாம். அதாவது அத்திபழம் – இதை சூடு நீரில் ஊறவைத்து சாப்பிடலாம். பப்பாளி சாப்பிடலாம். கேழ்வரகால் ஆன பண்டங்களை சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை: குளுமையான கறிகாய்கள், அதாவது பூசணி, சௌ சௌ,
சுரைக்காய், வெந்தய கீரை போன்றவை. மற்றும் சோம்பு, பனம் கல்கண்டு , பனை வெல்லம். (சாதாரண வெல்லம் சூடு , ஆனா பனை வெல்லம் குளுமை புன்னகை )

இப்ப மிளகு ரசம் வைப்பதை பார்போம்.

தேவையானவை:

ரசப்பொடி 1 – 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 – 1 1/2 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து
1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்த்து
நெய் 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலியில் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்
நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்
உப்பு போடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் துவரம் பருப்பை போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது மிளகு ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.

குறிப்பு: ரசம் நாங்க ஈய பாத்திரத்தில் தான் செய்வோம். அது எல்லோரிடமும் இருக்காது என்று தான் நான் வாணலி என்று சொன்னேன். ஈய சோம்பு இருந்தால் அதில் வைக்கும் [b]சர்ற்றமுது (நாங்க ரசத்தை அப்படித்தான் சொல்வோம் புன்னகை ) கு ஈடு இணை இல்ல. ஆனால் ஈய சொம்பை அப்படியே அடுப்பில் வைக்க கூடாது. உருகிவிடும். புளி தண்ணி விட்டு தான் வைக்கணும். வேற வாணலி இல் தாளித்தம் செய்து அதில் கொட்டனும். மேலும் ஈய சொம்பில் எவ்வளவு திரவம் இருக்கோ அது வரை தான் தீ இருக்கணும் இல்லாட்டா உருகிடும். ஜாக்கிரதையாக கையாளனும் அந்த சொம்பை.


Monday, July 25, 2011

மிளகு டீ

மிளகு டீ – இது ரொம்ப சுலபம்.

தேவையானவை :

1 டீ ஸ்பூன் டீ
1/2 ஸ்பூன் உடைத்த மிளகு
சர்க்கரை
பால்

செய்முறை:

ஒரு வால் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் .
அது கொதிக்கும் போது டீ யை போடவும்.
2 நிமிடம் கழித்து மிளகை போடவும்.
மீண்டும் நன்கு கொதித்ததும் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் தம்ளரில் டீ வடிகட்டியால் , வடிகட்டவும்.
சர்க்கரை சேர்க்கவும் .
இதை குடித்ததுமே உங்கள் “தலைகனம்” இறங்குவதை உணரலாம்.
முக்கடைப்பும் குறையும்.
அற்புதமாக இருக்கும்.
மழை காலங்களில் சாதாரணமாக கூட இதை குடிக்கலாம்.

குறிப்பு: சிலர் பாலில் டீ போடுவார்கள், இதில் மிளகு போடுவதால் சில சமயம் திரிய வாய்ப்புண்டு அதனால் கடைசி இல் விட்டால் போதுமானது.


சூட்டில் சளி

முதலில் எப்படி கண்டுபிடிப்பது ? கண்ணு எரியும், தொண்டை கர கரக்கும், தலை இல் எண்ணை வைத்து அழுந்த தேத்தால சூடு பறக்கும், வறட்டு இருமல் இருக்கும்,
சில சமையம் அடி வயிறு வலிக்கும், ‘ஒன்றுக்கு’ போனால் எரியும் அல்லது கொஞ்சமாக நீர் கடுப்புபோல் அளவு குறைவாக போகும்

அப்படி இருந்தால், செய்ய வேண்டியவை, நல்ல எண்ணை தேய்த்து குளிக்கணும், நிறைய மோர் குடிக்கணும், தயிர் சாதம் நரத்தங்கை தொட்டுண்டு சாப்பிடணும், இஞ்சி டீ குடிக்கலாம், சோம்பு ஜலம் குடிக்கலாம், பனங்கல்கண்டு ஜலம் குடிக்கலாம்,
பனம் வெல்லத்தில் ஏதாவது பண்ணி சாப்பிடலாம். ஆக மொத்தத்தில் குளுமைக்கு சாப்பிடணும்.

எல்லாத்தைவிட ரொம்ப ரொம்ப சிறந்த து, வாழைப்பழ மில்க் ஷேக் அது குடித்தால் ஒரே வேளை இல் சரியாகிவிடும்.

சேர்க்க வேண்டிய காய்கறிகள், பூசணி, சௌ சௌ , பரங்கி, சூறை போன்ற நீர் காய்கறிகள், வெந்தயம் , வெந்தய கீரை, பசும்பால் போன்றவை .

குளுமையால சளி என்றால்….

முதலில் சளி , ஜுரத்துக்கு என்ன சாப்பிடலாம் என்ன கூடாது என பார்போம். சாதாரணமாக எல்லோருக்கும் சளி பிடிக்கும் , அது உடம்பு சூட்டாலா அல்லது குளுமையாலா என முதலில் தெரிந்து கொள்ளனும்.

குளுமையால சளி என்றால் தலை கனக்கும், கழுத்து , அள்ளை பக்கம் வலிக்கும். மூக்கில் சளி வரும். அப்ப என்ன சாப்பிடணும் என்றால், மிளகு சீரக ரசம், பூண்டு ரசம், மிளகு குழம்பு, மிளகு டீ என மிளகு அதிகம் சேர்த்துகனும்.

இதுக்கு ரூல் என்ன வென்றால், “சளி பிடித்தால் வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு நல்ல தூங்கணும். ஜுரம் வந்தால் “லங்கனம் பரம ஔஷதம் “ அதாவது சாப்பிடாமல் பட்டினி போடணும்” என்பா என் பாட்டி .

நல்லா விக்க்ஸ் வேடு பிடிக்கலாம், உடல் சூடுதரும் பண்டங்களை சாப்பிடலாம். அதாவது அத்திபழம் – இதை சூடு நீரில் ஊறவைத்து சாப்பிடலாம். பப்பாளி சாப்பிடலாம். கேழ்வரகால் ஆன பண்டங்களை சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை: குளுமையான கறிகாய்கள், அதாவது பூசணி, சௌ சௌ,
சுரைக்காய், வெந்தய கீரை போன்றவை. மற்றும் சோம்பு, பனம் கல்கண்டு , பனை வெல்லம். (சாதாரண வெல்லம் சூடு , ஆனா பனை வெல்லம் குளுமை புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> )

Friday, July 22, 2011

இஞ்சி டீ

இஞ்சி டீ - இது ரொம்ப சுலபம் :)

தேவையானவை :

1 டீ ஸ்பூன் டீ
1/2 ஸ்பூன் துருவின இஞ்சி
சர்க்கரை
பால்

செய்முறை:

ஒரு வால் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் .
அது கொதிக்கும் போது டீ யை போடவும்.
2 நிமிடம் கழித்து துருவின இஞ்சி போடவும்.
மீண்டும் நன்கு கொதித்ததும் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் தம்ளரில் டீ வடிகட்டியால் , வடிகட்டவும்.
சர்க்கரை சேர்க்கவும் .
அற்புதமாக இருக்கும்.
மழை காலங்களில் சாதாரணமாக கூட இதை குடிக்கலாம்.

குறிப்பு: சிலர் பாலில் டீ போடுவார்கள், இதில் துருவின இஞ்சி போடுவதால் சில சமயம் கசக்க வாய்ப்புண்டு அதனால் கடைசி இல் விட்டால் போதுமானது.

பனங்கல்கண்டு ஜலம்

சோம்பு பிடிக்காத வா இதை குடிக்கலாம் :)

தேவையானவை:

நெய் 2 ஸ்பூன்
4 டம்ளர் தண்ணீர்
பனம் கல்கண்டு 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் 4 டம்ளர் தண்ணீரை விடவும்
பனம் கல்கண்டை போடவும்
அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் .
அடுப்பை அணைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி , மீதி நெய் சேர்த்து பருகவும்.

குறிப்பு: நெய் ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அளவுக்காவது சூடு இருக்கணும்.

சோம்பு ஜலம்

தேவையானவை:

சோம்பு 2 டேபிள் ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
4 டம்ளர் தண்ணீர்
பனம் கல்கண்டு 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் சோமபை சுத்தம் செய்து போடவும்.
1 ஸ்பூன் நெய் விட்டு பொன் வறுவலாக வறுக்கவும் .
நல்ல மணம் வரும், அப்ப 4 டம்ளர் தண்ணீரையும் விடவும்
அடுப்பை நிதானமாக எரியாவிடவும்
அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் பனம் கல்கண்டை போடவும்.
மீண்டும் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி , மீதி நெய் சேர்த்து பருகவும்.

குறிப்பு: நெய் சோம்பு ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அள்வுக்காவது சூடு இருக்கணும்.

வாழைப்பழ மில்க் ஷேக்

தேவையானவை:

நல்ல கனிந்த வாழைப்பழம் 2 (பொதுவாக கற்பூர வாழை ரொம்ப குளுமை அது கிடைத்தால் ரொம்ப நல்லது )
பால் 1 கப்
சக்கரை தேவையான அளவு
தேவைப்பட்டால் ஏலப்பொடி அல்லது எசன்ஸ்

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்ஸில போட்டு அடிக்கவேண்டியது தான்.
உடனே குடிக்க வேண்டியது தான் ;) ;) ;)

Blog Archive