Ingredients:
- துவரம் பருப்பு - 1 கப்
- சின்ன வெங்காயம் - 1 கப்
- சோம்பு - 1 ஸ்பூன்
- மிளகாய் வற்றல் - 5 - 6
- எண்ணெய் - 2 - 4 டேபிள் ஸ்பூன்
- புளி பேஸ்ட் 2 - 3 டேபிள் ஸ்பூன்
- பூண்டு - 10 பல்
- தக்காளி - 2 ( தேவையானால் )
- உப்பு
- சாம்பார் பொடி 3 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
- வெந்தய பொடி வறுத்து அரைத்தது 1/2 ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- கடுகு 1 ஸ்பூன்
Method:
- துவரம் பருப்பு 1 மணி நேரம் ஊரை வைத்து பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் உப்பு, பூண்டு சோம்பு,மிளகாய் வற்றல்சேர்த்து வடைக்கு அரைக்கும் பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.
- சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவைகளை நறுக்கிக் கொள்ளவும்.
- துருவிய தேங்காயோடு, சோம்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- இப்போது அரைத்த பருப்போடு கொஞ்சம் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து (முருங்கை கீரையும் சேர்த்துக் கொண்டால் நல்லா இருக்கும்)பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து வேகவைக்கவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
- அடுத்து சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவைகளை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
- பிறகு புளிஜலம் அல்லது வெறும் தண்ணிரை விடவும்.
- அதில் புளி பேஸ்ட் போடவும்.
- நன்கு கலக்கிவிட்டு, மஞ்சள் பொடி, சாம்பார்பொடி, வெந்தயபொடி மற்றும் பெருங்காயப்பொடி போடவும்.
- மிளக்காய் பொடி வாசனை போகும்வரை கொதிக்கட்டும்.
- பிறகு வேகவைத்துள்ள பருப்பு உருண்டைகளை அதில் போடவும்.
- அடுப்படி சின்னதாக்கவும், அது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
- சுவையான மசாலா பருப்பு உருண்டை குழம்பு தயார்.
Ingredients:
- 50 gms எள்ளு
- 2 ஸ்பூன் புளி பேஸ்ட்
- 5 - 8 மிளகாய் வற்றல்
- 2 sp கடலை பருப்பு
- 1/2 cup தேங்காய் துருவல்
- 1/2 ஸ்பூன் கடுகு
- கறிவேப்பிலை
- உப்பு
- எண்ணை
Method:
- வெறும் வாணலி il எள் மற்றும் மிளகாய் யை வர்க்கவும்.
- தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
- வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்கவும்.
- பிறகு 1டம்ளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ளதை போடவும்.
- நன்கு கொதித்ததும் இறக்கவும்.
- வாசனையான எள்ளு குழம்பு ரெடி.
Ingredients:
- உளுந்து, கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு தலா 1 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 6 -8
- கடுகு 1/2 ஸ்பூன்
- வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை
- புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- எண்ணை
Method:
- தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும்.
- புளி பேஸ்ட் + தண்ணீர்விடவும்.
- நன்கு கொதித்ததும் இறக்கவும்.
- ரொம்ப டேஸ்டி யான குழம்பு இது
Ingredients:
- 1 கப் வெந்த துவரம் பருப்பு
- 10 - 12 மிளகாய் வற்றல்
- 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட் அல்லது 1 கப் புளி ஜலம்
- 1/2 டீ ஸ்பூன் பெருங்காயப்பொடி
- கடுகு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
- 1 டீ ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி
- 1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு
- தாளிக்க எண்ணெய்
Method:
- ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
- கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
- பிறகு கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
- 1 டம்பளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
- அல்லது புளி ஜலம் விடவும்.
- உப்பு போடவும்.
- மெந்தயபொடி மட்டும் பெருங்கயப்பொடி போடவும்.
- வெந்த பருப்பை நன்கு கரைத்து குழம்பில் விடவும்.
- நன்கு கிளறிவிடவும்.
- நன்கு கொதித்ததும் இறக்கவும்.
- ரொம்ப காரம் இல்லாமல் நல்லா இருக்கும்.
Images:
Ingredients:
- புளிப்பில்லாத தயிர் 2 கப்
- துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 4 -6
- சீரகம் 1 spoon
- கடுகு 1/2 ஸ்பூன்
- எண்ணை கொஞ்சம்
- உப்பு
Method:
- ஒரு வாணலி இல் ரொம்ப துளி எண்ணை விட்டு, துவரம் பருப்பு மிளகாய் வற்றல் இரண்டையும் வறுக்கவும்.
- நன்கு வறுபட்டதும் , அடுப்பை அனைத்து விட்டு சீரகம் போட்டு பிரட்டி எடுக்கவும்.
- தயிர் ஐ நன்கு குழப்பவும்.
- அரைத்தது, உப்பு போட்டு கலக்கவும்
- வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து இதில் கொட்டவும்.
- அவ்வளவுதான். மோர் சாறு தயார்.
- சுட பண்ணவே வேண்டாம். அடுப்பில் கொதிக்க விடவேண்டாம்
Ingredients:
- கடலை பருப்பு 2 spoon
- உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
- துவரம் பருப்பு 1 ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 2 -4
- மிளகு 1/2 ஸ்பூன்
- கடுகு 1 ஸ்பூன்
- வெந்தயம் 1/4 ஸ்பூன்
- பெரும்காயப்பொடி 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
- எண்ணை
- உப்பு
- குழப்பிய மோர் 2 குப்
Method:
- கடுகு, தேங்காய் தவிர எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும்.
- அரைக்கும்போது தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
- வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து, அரைத்தத்தை கொட்டவும்.
- மோரையும் சேக்கவும், உப்பு போட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.
- அவ்வளவுதான், மோர் குழம்பு ரெடி.
Ingredients:
- 'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
- கடலை பருப்பு 2 ஸ்பூன்
- தனியா 1 ஸ்பூன்
- அரிசி 1 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி 1 துண்டு
- சிவப்பு மெளகாய் 2 -3
- பச்சை மெளகாய் 2 - 3
- மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
- எண்ணெய் 2 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- கறிவேப்பிலை
Method:
- கடலை பருப்பை ஊற வைக்கவும்.
- கடுகு தவிர எல்லா சாமான் களையும் சேர்த்து அரைக்கவும்.
- ஒரு வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை , மஞ்சள்பொடி தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
- நன்கு கொதிக்கட்டும் .
- நடு நடு வில் கிளறவும்.
- மோர் குழம்பு ரெடி.
- சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
Notes:
- இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்தது , வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.
Ingredients:
- 'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
- துவரம் பருப்பு 2 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- பச்சை மெளகாய் 2 - 3
- மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
- எண்ணெய் 2 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- துருவின தேங்காய் 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை
Method:
- துவரம் பருப்பு, கடலை பருப்பை ஊற வைக்கவும்.
- கடுகு தவிர எல்லா சாமான் களையும் அரைக்கவும்.
- ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
- மஞ்சள் பொடி போடவும்.நன்கு கொதிக்கட்டும் .
- நடு நடு வில் கிளறவும்.கறிவேபலை போட்டு இற கவும்.
- மோர் குழம்பு ரெடி.
- சாதத்தில் போட்டு சாப்பிடலாம் .
Ingredients:
- புளிப்பான மாங்காய் 1 தோல் சீவி நறுக்கி வைக்கவும்
- துவரம் பருப்பு 1 கப்
- பச்சை மிளகாய் 2 - 4
- தாளிக்க கடுகு
- கறிவேப்பிலை
- எண்ணை தாளிக்க
- பெருங்காயம் 1/4 ஸ்பூன்
- சாம்பார் பொடி 2 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
- வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
Method:
- மாங்காய் மற்றும் துவரம் பருப்பை ஒன்றாக குக்கர் il வேக வைக்கவும்.
- உருளி இல் எண்ணை விட்டு தாளிக்கணும்.
- வெந்த மாங்காய் மற்றும் பருப்பை அதில் விடவும்.
- நன்கு கிளறவும்.
- சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி எல்லாம் போடணும்.
- நல்லா கொதிக்கட்டும் பிறகு இறக்குங்கள்.
- ரொம்ப நல்லா இருக்கும்.
Notes:
- புளிகெடுதல் என்று சொல்லிக்கொண்டே நாம் உபயோகிக்கிறோம், எனவே எப்போ எப்போ முடியுமோ அப்போதெல்லாம் புளியை தவிர்த்து எலுமிச்சை, தக்காளி, பைன் ஆப்பிள் மற்றும் மாங்காய் புளிப்பை உபயோகிப்பது உடலுக்கும் நல்லது , டேஸ்ட்க்கும் நல்லது
Ingredients:
- நாரத்தங்காய் - 1 (சாறு எடுக்கவும் )
- வெந்த துவரம் பருப்பு 1/2 கப்
- வெல்லம் - 1 சின்ன கட்டி
- பச்சை மிளகாய் - 4
- குழம்பு மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
- புளி பேஸ்ட் - 1/4 ஸ்பூன் (தேவயானால் )
- எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- வறுத்து அரைத்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
- பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு - தேவையான அளவு.
Method:
- வாணலி இல் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்பொடி , சேர்த்து வதக்கவும் .
- அதில் வெந்த பருப்பு, நார்தம்காய்ன் சாறு சேர்க்கவும்.
- வேண்டுமானால் புளிஜலம் அல்லது புளி பேஸ்ட் போடவும். ( ஆனால் வெறும் நாரத்தை சாரே இந்த குழபுக்கு போறும்)
- வெந்தய பொடி, பெருங்காய பொடி மற்றும் உப்பு போடவும்.
- நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு, வெல்லத்தை சேர்க்கவும்.
- எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- ரொம்ப நல்ல டேஸ்ட் ஆன குழம்பு இது.
- சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
Notes:
- ஒரு வாரம் 10 நாள் வைத்து சாப்பிடலாம். வயிறு சரி இல்லயானால் கூட இதை சாப்பிடலாம். நல்லது .
Ingredients:
- காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 10 -12
- மிளகு - 2 -4 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 10 -12
- தனியா 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- புளி ஜலம் - 2 கப் அல்லது 2 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
- உப்பு
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- மஞ்சள் பொடி - கொஞ்சம்
- தாளிக்க கொஞ்சம் கடுகு , கறிவேப்பிலை
Method:
- மாங்காய் துண்டங்களை கொஞ்சம் தண்ணிரில் ஊற வைக்கவும்.
- வாணலி இல் மிளகு,மிளகாய் வற்றல், தனியா மற்றும் கறிவேப்பிலையை கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுக்கவும்.
- மிக்சி இல் அரைக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
- புளி ஜலம் விடவும்.
- மட்டாக உப்பு போடவும்.
- ஊறவைத்த மாங்காய் துண்டங்களை போடவும்.
- பெருங்காயப்பொடி மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
- அரைத்து வைத்த மசாலாவையும் போடவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- மாங்காய் வெந்து குழம்பு இறுகும் வரை குழம்பு கொதிக்கட்டும்.
- பிறகு இறக்கவும்.
- ரொம்ப மணமான மிளகு குழம்பு தயார்.
- சுடு சாதத்தில் நிறைய நெய் விட்டு இதை சாப்பிடவும்.
- காச்சின அப்பளம் போறும் தொட்டுக்க
Notes:
- மிளகு குழம்பு உடலுக்கு ரொம்ப நல்லது. இதை மாங்காய் போட்டு அல்லது போடாமலும் செய்யலாம். குளிர் காலத்தில் சளி பிடித்திருக்கும் போது வாய்க்கு ரொம்ப ஆரோகியமாக இருக்கும்.
- மாங்காய் இல் உப்பு இருப்பதால் உப்பு போடும் போது நினைவாக குறைந்த அளவே போடவும்.
Ingredients:
- புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
- தனியா 2 டீ ஸ்பூன்
- மிளகு 2 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 10 -12
- கடலை பருப்பு 2 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 2 டீ ஸ்பூன்
- பெருங்காயம் 1 சின்ன துண்டு
- எண்ணெய் 2 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- மஞ்சள் பொடி
Method:
- வாணலி இல் எண்ணை விட்டு தனியா, பருப்புகள், மிளகு, மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு வறுக்கவும்.பிறகு கறிவேப்பிலையும் போட்டு வறுக்கவும்.
- புளி பேஸ்ட் போட்டு எல்லாவற்றையும் நன்கு அரைக்கவும்.தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும், நன்கு கரைக்கவும்.
- மீண்டும் வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கரைத்து வைத்திருப்பதை கொட்டவும்.
- மஞ்சள் பொடி போட்டு, நன்கு கொதித்ததும் இறக்கவும்.
Ingredients:
Method:
- இது ஒரு பெரிய விஷயமான்னு நினைபிர்கள் , ஆமாம். எதுக்கும் முறை நு ஒன்னு இருக்கே.
- சுடு சாதத்தில் 'பிரெஷ் ' ஆக உருக்கின ஆவின் நெய் விட்டு ( எனக்கு உத்துகுளி வெண்ணை பிடிக்காது. முதலில் நல்லா இருக்கும் பிறகு கொஞ்சம் புளிப்பு வாசனை வரும். உங்களுக்கு பிடிச்சா மாதிரி நெய் விடுக்கொங்கோ ) நல்லா குழைய வேகவைத்த பயத்தம் பருப்பை போட்டு 'மை 'யாக பிசையவும்.
- கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
- அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
- வழியககூடாது.
- அப்படியே 'லபக்'என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
- குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
- ஒரு 'குண்டான்' சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
- Try பண்ணி பாருங்கள்.
Ingredients:
- கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம் என் சொன்னேன் அல்லவா? அதை எப்படி போடுவது?
Method:
- அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
- தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
- அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும்.
- இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் பொது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும்.
- மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.
Notes:
- மேல் கூறிய வற்றல் களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.
Ingredients:
- பூசணி துருவல் – ஒரு கப்,
- உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
- மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
- உப்பு – தேவையான அளவு,
- பெருங்காயம – கால் டீஸ்பூன்
Method:
- உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
- பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
- வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.
Notes:
- பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.