- கோதுமை மாவு - 2 கப்,
- வேகவைத்து துருவிய உருளைக் கிழங்கு - 2 கப்
- பச்சை மிளகாய் 8 - 10
- கரம் மசாலா 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
- அதில் இப்பொழுது வேகவைத்து துருவிய உருளைக் கிழங்கு மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
- ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
- உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கவும்.
- பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
- பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
- பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
- கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
- இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
Notes:
- காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டாக்கு அடுத்தது இதுதான் ...மிகவும் அருமையாக இருக்கும்.
- எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
No comments:
Post a Comment