- மைதா மாவு - 2 கப்
- நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
- சோடா உப்பு - அரை சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
- பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
- இதே போல எல்லா மாவையும் பெரிய பெரிய சப்பாத்திகளாக இட்டுக்கொள்ளவும்.
- முதலில் ஒன்றை மேடைமேல் வைத்து, அதன் மேல் நெய்யை தாராளமாக தடவவும்.
- அடுத்த சப்பாத்தியை அதன் மேல் போடவும்.
- இதேபோல குறைந்தது ஆறு சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.
- பிறகு அதை மெல்ல சுருட்டவும்.
- இப்புதுசு அதை குறுக்கு வாட்டில் ஆறு துண்டுகளாக 'கட்' செய்து கொள்ளவும்.
- இப்பொழுது அதை கனமான பரோட்டாவாக இடவும்.
- தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
- வரி வரியாக, ருசியாக இருக்கும் இந்த மைதா பரோட்டா.
No comments:
Post a Comment