- கோதுமை மாவு - 2 கப்,
- துருவிய பனீர் - 2 கப்
- மிளகு சீரகம் பொடித்தது 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- துருவிய பனீரை வாணலி இல் போட்டு, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகு சீரகப்பொடி போட்டு நன்கு கிளறவும்.
- அடுப்பை சின்னதாக வைத்துக் கொள்ளவும்.
- கிளறிக்கொண்டே இருக்கவேண்டும், ஓரிரு நிமிடங்களில், எல்லாமாக சேர்ந்து உருண்டை போல திரண்டு வரும்; அப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- தட்டில் கொட்டி பரத்திவிடவும்; அது நன்கு ஆறட்டும்.
- ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
- உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கவும்.
- பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல பனீர் கலவையை வைத்து ) முடிவிடவும்.
- பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
- பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
- கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
- இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
Notes:
- எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
No comments:
Post a Comment