Showing posts with label சிறு தானிய பலகாரங்கள். Show all posts
Showing posts with label சிறு தானிய பலகாரங்கள். Show all posts

Thursday, October 8, 2020

சோள அடை

Ingredients:
  • பச்சை சோளம் - ஒரு டம்ளர்
  • அரிசி - ஒரு டம்ளர்
  • கடலைப்பருப்பு - அரை டம்ளர்
  • துவரம்பருப்பு - கால் டம்ளர்
  • உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறு துண்டு
  • மிளகாய் வற்றல் - 5
  • பெரிய வெங்காயம் - ஒன்று - தேவையானால்
  • கறிவேப்பிலை, உப்பு - சிறிது
  • நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப


Method:
  • வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • அரிசி, மற்றும் பருப்பு வகைகளை நன்கு களைந்து சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு, தண்ணீரை வடித்து மிக்ஸியில் சோளம்மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
  • அரைத்த மாவுடன் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.
  • இரண்டு புறமும் எண்ணெய் விட்டு , சற்று மொறுமொறுப்பாக எடுக்கவும்.
  • சுவையான சோள அடை ரெடி.
  • தோசைமிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.


Notes:
  • இதில் அரிசிக்கு பதிலாக குதிரை வாலி, தினை சேர்க்கலாம்.
  • வெங்காயத்திற்கு பதில் துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
  • பச்சை சோளம் கிடைக்காத நாட்களில், காய்ந்த சோளத்தையும் பருப்புகளுடன் ஊறவைத்து அரைத்து உபயோகிக்கலாம்.

குதிரைவாலி தக்காளி தோசை மற்றும் மசால் தோசை

Ingredients:
  • 4 கப் குதிரைவாலி அரிசி
  • 1 கப் உளுந்து
  • 1 டீஸ்பூன் வெந்தயம்


Method:
  • எல்லாவற்றையும் நன்கு களைந்து, ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு, அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து நான்கு முதல் ஆறு மணி நேரம் புளிக்க விடவும்.
  • 4 தக்காளி, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, விழுதாக அரைத்த மாவுடன் கலக்கவும்.
  • தேவையானால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
  • சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாகச் சுட்டு, கொத்தமல்லிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.


Notes:
  • குழந்தைகள் விருப்பப்படும் காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி, தோசை மாவில் கலந்தும் வார்த்து கொடுக்கலாம். அல்லது, மசாலா போல செய்து 'மசால் தோசை' யாகவும் செய்யலாம்.அருமையாக இருக்கும் .

கம்பு தேன்குழல்

Ingredients:
  • கம்புமாவு 2 கப்
  • பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
  • எள்ளு கொஞ்சம்
  • பெருங்காய பொடி
  • தேவையானால் மிளகாய் பொடி கொஞ்சம்
  • உப்பு
  • நெய் 1 ஸ்பூன்
  • பொறிக்க எண்ணெய்


Method:
  • இரண்டுமாவையும் பேசினில் போட்டு, உப்பு, நெய், பெருங்காய பொடி (மிளகாய் பொடி ) போட்டு நன்கு கலக்கவும்.
  • கொஞ்சமாக தண்ணீர் விட்டு , மாவை பிசையவும்.
  • தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெய் இல் பிழியவும்.
  • இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.
  • நல்ல கரகரப்பான 'கம்பு தேன்குழல்' தயார்.
  • என்ன, கொஞ்சம் எண்ணெய் குடிக்கும் ஆனால் நல்ல சுவையாக இருக்கும்.

கேழ்வரகு உளுந்து தோசை( ராகி, உளுந்து)

Ingredients:
  • கேழ்வரகு மாவு 1 டம்ளர்
  • உளுந்து சுமார் 50 கிராம் அல்லது ஒரு குழிக்கரண்டி.
  • உப்பு


Method:
  • கேழ்வரகு மாவை கடை இல் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது நீங்களே மிஷினில் நைசாக‌ அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • காலையில் உளுந்தம் பருப்பை அலசி , ஊறப்போடுங்கள்.
  • மத்தியானம் மிக்சியில் நன்கு அரைக்கவும்.
  • இதோடு ஒரு டம்ளர் கேழ்வரகு மாவைக் கட்டி தட்டாமல் கரைத்து உப்பு போட்டு வைக்கவும்.
  • ஆறு மணி நேரத்தில் நன்கு புளித்துவிடும்.
  • அவ்வளவுதான் ராத்திரிக்கு சுவையான‌ மொறுமொறுப்பான‌ ராகி தோசை ரெடி.
  • அருமையாக இருக்கும்.
  • என்ன ஒண்ணு , கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
  • எனவே ,தோசையைக் கருக விடாமல் கவனமாய் எடுக்கணும்.
  • அவ்வளவுதான், கலர் தான் குறைவே தவிர சுவை இல் குறைவு இல்லை!

Wednesday, October 7, 2020

வேர்க்கடலை கம்பு சிப்ஸ்

Ingredients:
  • கம்பு - 1 கப்
  • வேர்கடலை அரை கப்
  • மைதா அரை கப்
  • பொட்டுக்கடலை - கால் கப்
  • மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன் பொடித்தது
  • வெண்ணெய் - 2 டீஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய் - பொறிக்க


Method:
  • கம்பு, வேர்க்கடலையை தனித்தனியே வறுத்து மிக்சியில் மாவாக்கவும்.
  • பொட்டக்கடலையையும் மாவாக்கிக் கொள்வும்.
  • இத்துடன் மிளகு, சீரகம், மைதா, வெண்ணெய், உப்பு இவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • சிறிது மாவு எடுத்து சற்று கனமாக சப்பாத்தியாக இட்டு டைமண்ட் வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • சுவையான, 'கரகர'பான வேர்க்கடலை கம்பு சிப்ஸ் ரெடி.
  • தித்திப்பு வேண்டுமானால் மிளகு, சீரகம் போடாமல் சர்க்கரை பாகில் பிரட்டி செய்யலாம்.

கேழ்வரகு முள்ளு தேன்குழல்

Ingredients:
  • 2 கப் கேழ்வரகு மாவு
  • 1/2 கப் பொட்டுக்கடலை மாவு
  • 1 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1/4 டீ ஸ்பூன் பெருங்காய பொடி
  • உப்பு
  • 1 டீ ஸ்பூன் எள் அல்லது சீரகம்
  • 1 டீ ஸ்பூன் நெய்
  • பொறிக்க எண்ணெய்


Method:
  • எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு கலக்கவும்.
  • கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் விட்டு, முறுக்கு மாவுப் பதத்தில் பிசையவும்.
  • வாணலி இல் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அடுப்பை 'சிம்'மில் வைத்து, முறுக்கு அச்சில் முள்ளு தேன்குழல் தட்டை போட்டு, மாவைப் போட்டு, காயும் எண்ணெயில் பிழியவும்.
  • இரண்டு பக்கமும் திருப்பி போடவும்.
  • கேழ்வரகு மாவு கருப்பாக இருப்பதால், சரியான பதம் பார்த்து எடுக்கவும் இல்லாவிட்டால் ரொம்ப பொரிந்து கருகிவிடும் புன்னகை
  • அருமையான 'கர கர' பான கேழ்வரகு முள்ளு தேன்குழல் தயார்.
  • இது அவ்வளவாக எண்ணெய் குடிக்காது.


Notes:
  • பொட்டுகடலை மாவுக்கு பதிலாக அரசி மாவும் உபயோகிக்கலாம்.

கம்பு ஆலு ரொட்டி

Ingredients:
  • கம்பு அல்லது திணை மாவு-2 கப்
  • வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு-1கப்
  • நறுக்கிய கொத்தமல்லி-5 தேக்கரண்டி
  • நறுக்கிய வெங்காயம்-1/2கப்
  • நறுக்கிய பச்சை மிளகாய-2
  • எலுமிச்சை சாறு-1 தேக்கரண்டி
  • இஞ்சி விழுது-1தேக்கரண்டி
  • உப்பு-தேவைக்கேற்ப
  • நெய் - சப்பாத்தி செய்ய


Method:
  • சலித்து எடுத்து வைக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தேவைக்கு வைத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ரொட்டி செய்வதற்கு பிசைவது போல பிசைந்து கொள்ளவும். பின்னர் நான்ஸ்டிக் தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும்.
  • கொஞ்சம் கனமான ரொட்டியாக இடவும்.
  • இருபுறமும் நெய்விட்டு எடுக்கவும்.
  • சுவையான கம்பு ஆலு ரொட்டி ரெடி.
  • இதை பால் அல்லது தயிர் சேர்த்து சூடாக பரிமாறலாம் சுவையாக இருக்கும்.

பார்லி கோதுமை ரவா இட்லி

Ingredients:
  • பார்லி 2 கப்
  • கோதுமை ரவை 1 கப்
  • மிளகாய் வற்றல் 4 -5
  • உப்பு


Method:
  • பார்லியை நன்கு களைந்து ஒரு 4 மணிநேரம் ஊர வைக்கவும்.
  • கோதுமை ரவையை 1/2 மணி ஊர வைக்கவும்.
  • பிறகு இரண்டையும் மிளகா உப்பு போட்டு மைய அரைக்கவும்.
  • மீண்டும் ஒரு அரைமணி அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு இட்லி வார்க்கவும்.
  • ஹெல்தியான இட்லி இது


Notes:
  • வேணுமானால் தண்ணிருக்கு பதில் தயிர் உபயோகிக்கலாம். இதே மாவில் தோசையும் வார்க்கலாம் .

கேழ்வரகு சேமியா இட்லி

Ingredients:
  • கேழ்வரகு சேமியா - 1 கப்
  • வறுத்த ரவை - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு-தேவைக்கு


Method:
  • கேழ்வரகு சேமியாவைப் இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு, பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறவிடவும்.
  • ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
  • சேமியாவில் சுமாராக தண்ணீர் வடிந்தால்போதும்.
  • ஏனென்றால் சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்; அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
  • ஒரு பாத்திரத்தில் ஊறின சேமியா மற்றும் ரவையை போட்டு ஒரு 10 நிமிஷம் வைக்கவும்.
  • ரவை ஊறினதும், தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கொண்டுவரவும்.
  • பிறகு இட்லி தட்டுகளில் என்னை தடவி, இட்லி வார்க்கவும்.
  • வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
  • கரமான பூண்டு சட்னியும் ரொம்ப நல்லா இருக்கும்.

பாஜ்ரா ரொட்டி- கம்பு ரொட்டி

Ingredients:
  • கம்பு மாவு ஒரு கப்
  • உப்பு
  • நெய்


Method:
  • ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு மற்றும் உப்புபோட்டு நன்கு கலக்கவும்.
  • கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
  • அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
  • ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும்.
  • மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
  • நெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
  • சுவையான கம்பு ரொட்டி தயார்.


Notes:
  • இந்த மாவு கொஞ்சம் கூட 'பிசுக்கே' இல்லாமல் இருக்கும். விண்டு விண்டு வரும், எனவே சிறிய ரொட்டிகள் செய்வது நல்லது. நிறைய நெய் போடணும், ஏன் என்றால் இது ரொம்ப 'சூடு'. இது நாங்க ராஜஸ்தானில் சாப்பிட்ட பக்குவம். நம்மூரில் எப்படி செய்வார்கள் என்று யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ!
  • இது ரொம்ப நல்லா இருக்கும்.
  • சைடு டிஷ் : ஒரு கை நிறைய பச்சைமிளகாய் எடுத்துக்கொண்டு பொடியாக நறுக்கவும். வாணலி இல் எண்ணெய் கொஞ்சம் (1 டேபிள் ஸ்பூன் ) வைத்து கடுகு தாளிக்கவும். பச்சைமிளகாய் யை போடவும். மஞ்சள் பொடி போடவும். உப்பு கொஞ்சம் போட்டு வதக்கவும்.
  • நன்கு வதங்கினதும் ஒரு முடி எலுமிச்சம்பழம் அதிலே பிழியவும். அடுப்பை சின்னதாக்கவும். நன்கு கிளறி இறக்கவும். உப்பு, புளிப்பு நல்ல காரம் என்று இது இருக்கும். பாஜ்ரா மற்றும் எல்லா ரொட்டிகளுக்கும் சூப்பராக இருக்கும். முயன்று பார்க்கவும்.

Images:










தேங்காய்ப் பால் - தினை மாவு அப்பம்

Ingredients:
  • தேங்காய் - அரை மூடி
  • நெய் அப்பம் பொரிக்க
  • தினை - 200 கிராம்
  • பொடித்த வெல்லம் - ஒரு கப்
  • வாழைப்பழம் - 1
  • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.


Method:
  • தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • தினையை வறுத்து மாவாக அரைக்கவும்.
  • வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.
  • அப்பக்காரலில் நெய் விட்டு , ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.


Notes:
  • சமையல் குறிப்பு க்கு முன் தினை பற்றிய ஒரு சின்ன விளக்கம் புன்னகை ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். ஆங்கிலத்தில் மில்லட் என்பது சோளம், கம்பு கேப்பை (கேழ்வரகு) போன்ற தானிய வகையைக் குறிப்பதாகும்.

மல்டி கிரைன் கஞ்சி - பல தானிய கஞ்சி

Ingredients:
  • முன்பே நான் வேறு ஒரு கஞ்சி 'சத்துமாவு கஞ்சி'ஒன்று போட்டுள்ளேன், அது போல த்தான் இதுவும் ஆனால் இதில் பல சிறுதானியங்கள் சேர்த்துள்ளேன்.
  • கேழ்வரகு - கால் கிலோ
  • கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா இரண்டு டேபிள் ஸ்பூன்
  • பொட்டுக்கடலை, கம்பு - தலா நாலு டேபிள் ஸ்பூன்
  • முந்திரி, பாதாம் - தலா 10
  • ஏலக்காய் - 5
  • பார்லி - 4 டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை தேவைக்கு ஏற்ப


Method:
  • கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.
  • முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
  • வெறுமன வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு ஆனால் காந்தாமல் வறுக்கவும்.
  • முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
  • முளை விட்ட தானியங்கள் மற்றும் வறுத்து வைத்தவற்றையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
  • கஞ்சி போட:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • கட்டி இல்லாமல் இருக்கணும்.
  • பிறகு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
  • சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும்.
  • இதனுடன் சர்க்கரை மற்றும் பால் கலந்து கொடுக்கவும்.
  • நல்லா பசி தாங்கும் .


Notes:
  • 1 . அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கூட இதைக் கொடுக்கலாம்.
  • பெரியவர்களும் குடிக்கலாம்.
  • 2 . வேண்டுமானால் கஞ்சி போடாமல் உருண்டை செய்யலாம். இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம் புன்னகை
  • 3 . ஒருவேளை முளைவிட்ட தானியங்கள் நன்றாக காயவில்லை என்று நினைத்தீர்கள் என்றால் அவற்றையும் வறட்டு வாணலி இல் வறுத்துக்கொள்ளவும்.

சிறு தானிய பலகாரங்கள் - ஒரு அறிமுகம்

Ingredients:


    Method:


    Notes:
    • சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது .இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன்.

    Blog Archive