- பச்சை சோளம் - ஒரு டம்ளர்
- அரிசி - ஒரு டம்ளர்
- கடலைப்பருப்பு - அரை டம்ளர்
- துவரம்பருப்பு - கால் டம்ளர்
- உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயம் - சிறு துண்டு
- மிளகாய் வற்றல் - 5
- பெரிய வெங்காயம் - ஒன்று - தேவையானால்
- கறிவேப்பிலை, உப்பு - சிறிது
- நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
Method:
- வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- அரிசி, மற்றும் பருப்பு வகைகளை நன்கு களைந்து சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு, தண்ணீரை வடித்து மிக்ஸியில் சோளம்மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
- அரைத்த மாவுடன் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.
- இரண்டு புறமும் எண்ணெய் விட்டு , சற்று மொறுமொறுப்பாக எடுக்கவும்.
- சுவையான சோள அடை ரெடி.
- தோசைமிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
Notes:
- இதில் அரிசிக்கு பதிலாக குதிரை வாலி, தினை சேர்க்கலாம்.
- வெங்காயத்திற்கு பதில் துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
- பச்சை சோளம் கிடைக்காத நாட்களில், காய்ந்த சோளத்தையும் பருப்புகளுடன் ஊறவைத்து அரைத்து உபயோகிக்கலாம்.
No comments:
Post a Comment