Ingredients:
- அரு /அரை நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
- மிளகாய் பொடி 200 கிராம்
- உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
- வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
- கடுகு 1 டேபிள் ஸ்பூன்
Method:
- நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
- ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
- அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
- நன்கு கிளறிவிடவும்.
- மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
- நன்கு கிளறி விடவும்.
- கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
- மீண்டும் நன்கு கிளறி விடவும்.
- எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
- நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
- வருஷத்துக்கும் கெடாது
Notes:
- நெல்லிக்காய்கள் மிகவும் சிறியதாக, துருவ கஷ்டமாக இருந்தால், கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்
Ingredients:
- பெரிய நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
- மிளகாய் பொடி 200 கிராம்
- உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
- வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
- கடுகு 1 டேபிள் ஸ்பூன்
Method:
- நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
- ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
- அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
- நன்கு கிளறிவிடவும்.
- மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
- நன்கு கிளறி விடவும்.
- கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
- மீண்டும் நன்கு கிளறி விடவும்.
- எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
- நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
- வருஷத்துக்கும் கெடாது
Ingredients:
- இஞ்சி கால் கிலோ
- புளி எலுமிச்சை அளவு அல்லது 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
- பூண்டு 100 கிராம்
- மிளகாய் பொடி 4 ஸ்பூன்
- வறுத்து அரைத்த வெந்தய பொடி 1 ஸ்பூன்
- வெல்லம் கொஞ்சம்
- உப்பு
- எண்ணெய் கொஞ்சம்
- கடுகு 1 ஸ்பூன்
- பெருங்காய பொடி
- மஞ்சள் பொடி
Method:
- முதலில் இஞ்சியை நன்கு மண்போக அலம்பி , தோல் சீவி துண்டங்கள் போடவும்.
- பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
- புளி பேஸ்ட் இல்லை என்றால் , புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மிக்சி இல் பூண்டு, புளி பேஸ்ட் மற்றும் இஞ்சியை மையாக அரைத்துக் கொள்ளவும்.
- புளி பேஸ்ட் இல்லாவிட்டால், புளியை கெட்டியாக கரைத்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை இதில் கொட்டவும்.
- நன்கு கிளறவும்.
- பிறகு அதில், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி, மிளகாய் பொடி, வெந்தய பொடி என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும்.
- உப்பும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
- நன்கு கொதித்து லேகியப்பதம் வரும்போது , எண்ணெய் பிரியும்.
- அதுவரை, அவ்வப்போது கிளறியபடி இருக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் போட்டு நன்கு கிளறி, மீண்டும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விடவும்.
- நன்கு ஆறினதும் பாட்டில் களில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மிகவும் ருசியான 'இஞ்சி தொக்கு' தயார்.
- இது உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
- தயிர் சாதம், சப்பாத்தி , தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
- சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
- பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.
Notes:
- இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம். மேலும், தொக்கு செய்யும்போது வறுத்து பொடித்த மிளகாய் பொடியை யும் போட்டால் , தொக்கின் நிறமும் மணமும் மிகநன்றாக இருக்கும்.
Ingredients:
- புளிச்சகீரை – 1 கட்டு
- புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
- வெல்லம் – ஒரு சிறிய துண்டு
- உப்பு
- தாளிக்க:
- கடுகு – 1 டீஸ்பூன்,
- பூண்டு – 6 - 8 பல் (பொடியாக நறுக்கி வைக்கவும் )
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
- வறுத்துப் பொடிக்க:
- கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 15
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
Method:
- கீரையை இலைகளாகக் ஆய்ந்து அலம்பித் துடைத்து, ஒரு துணியில் பரப்பி, ஒரு மணி நேரம் வரை உலர விடுங்கள்.
- எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து, சற்று சிவந்ததும் அரித்து எடுங்கள்.
- மீந்துள்ள எண்ணெயில் கீரையை நறுக்கி போட்டு, நன்கு வதக்குங்கள்.
- கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள்.
- வதக்கிய கீரை, புளி, வறுத்த கடுகு, வெந்தயம், மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வதக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தொக்கில் சேர்த்துக் கலக்குங்கள்.
- அருமையான 'கோங்குரா தொக்கு' ரெடி...ஆந்திரர்கள் இதை 'கோங்குரா பச்சடி' என்றே சொல்வார்கள் புன்னகை
- சாதம் போட்டு சாப்பிடனும் என்றால் நிறைய நெய் விட்டுக்கொள்ளுங்கள் இது ரொம்ப சூடு.
Ingredients:
- பெங்களூர் தக்காளி 1 கிலோ
- பூண்டு உரித்தது 200 கிராம்
- மிளகாய் பொடி 200 - 250 கிராம்
- உப்பு அநேகமாய் 100 - 125 கிராம் போதுமானது
- வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 3 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 2 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
- கடுகு 1 டேபிள் ஸ்பூன்
Method:
- தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல், பூண்டையும் போட்டு மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
- ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
- அதில் அரைத்த தக்காளி விழுதை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
- நன்கு கிளறிவிடவும்.
- மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
- நன்கு கிளறி விடவும்.
- கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
- மீண்டும் நன்கு கிளறி விடவும்.
- எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
- நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
- இதுவும் வருஷத்துக்கும் கெடாது .
- சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.
Notes:
- குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.
- பூண்டு பொடி கூட இப்போது கடைகளில் கிடைக்கிறது , அப்படி வேண்டுபவர்கள் , மிளகாய் பொடி போடும் போது 4 - 5 டேபிள் ஸ்பூன் பூண்டு பொடி போட்டு கிளறி இறக்கவும்.
- வாயில் பூண்டு கடி படவேண்டும் என்று நினைத்தால், பூண்டை நறுக்கி எண்ணெய் இல் வதக்கி , பிறகு அரைத்த தக்காளியை சேர்க்கவும்.
- அவசரத்துக்கு ஓர் 2 - 3 தக்காளிகளை அரைத்து வதக்கி, இட்லி க்கு தோசைக்கு தொட்டுக்க வைத்துக்கொள்ளலாம். அந்த சமையங்களில் எண்ணெய் குறைவாக விட்டாலே போதுமானது.
Ingredients:
- பெங்களூர் தக்காளி 1 கிலோ
- மிளகாய் பொடி 150 - 200 கிராம்
- உப்பு அநேகமாய் 75 - 100 கிராம் போதுமானது
- வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
- கடுகு 1 டேபிள் ஸ்பூன்
Method:
- தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல் மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
- ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
- அதில் அறத்த தக்காளியை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
- நன்கு கிளறிவிடவும்.
- மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
- நன்கு கிளறி விடவும்.
- கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
- மீண்டும் நன்கு கிளறி விடவும்.
- எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
- நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
- இதுவும் வருஷத்துக்கும் கெடாது புன்னகை
- சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.
Notes:
- குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.
Ingredients:
- நல்ல புளிப்பு மாங்காய் 1 கிலோ தோல் சீவி துருவி வைக்கவும்.
- மிளகாய் பொடி 200 கிராம்
- உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
- வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
- கடுகு 1 டேபிள் ஸ்பூன்
Method:
- மாங்காய்களை அலம்பி துடைத்து தோல் சீவி, துருவவும்.
- ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
- அதில் துருவின மாங்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
- நன்கு கிளறிவிடவும்.
- மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
- நன்கு கிளறி விடவும்.
- கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
- மீண்டும் நன்கு கிளறி விடவும்.
- எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
- நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
- வருஷத்துக்கும் கெடாது.
Notes:
- மாங்காய் தொக்கு ! - என்னைப்பொருத்த வரை உலகத்திலேயே அருமையான தொக்கு இது என்பேன். 'மாதா ஊட்டாத சாதத்தை மாங்காய் ஊட்டும்" என்று என் தாத்தா சொல்வார்.
- குறிப்பு : கொஞ்சம் புளிப்பு கம்மியாக இருக்கணும் தொக்கு என்று நினைப்பவர்கள் பெங்களுரா மாங்காய் இல் தொக்கு போடலாம். அல்லது ஊறுகாய் இல் வெல்லம் கொஞ்சம் போடலாம் புன்னகை எங்க அப்பாவுக்காக தனியாக நான் பங்களுராவில் தொக்கு போடுவேன்
Images:
Ingredients:
- எலுமிச்சம் பழம் - 1/2 கிலோ
- உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
- கருப்பு உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
- மிளகாய் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப் பொடி - 1/4 டீ ஸ்பூன்
- ஓமம் - 3 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை - 1 cup
- கடுகு 1/4 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா பொடி 1 டேபிள் ஸ்பூன்
Method:
- எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, நான்காக பிளந்து வைக்கவும்.
- ஒரு பேசினில் மற்ற சாமான்களை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
- இந்த மசாலாவை எல்லா எலுமிச்சங்காய்களிலும் அடைக்கவும்.
- ஒரு ஈரம் இல்லாத ஜாடி இல் அடுக்கவும் .
- அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.ஆனால் இதை 1 மாதம் கழித்து தான் உபயோகப்படுத்த துவங்கலாம்புன்னகை
- அதுவரை தினமும்ஜாடி இன் வாயை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் வைக்கணும்.
- இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
- சப்பாத்தி , சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Ingredients:
- எலுமிச்சம் பழம் - 1 கிலோ
- உப்பு - 100 - 150 கிராம்
- பச்சை மிளகாய் - 200 கிராம்
- வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
- பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 50 கிராம்
- கடுகு - 1 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
- இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
Method:
- எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
- பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
- இஞ்சியை தோல் சிவி துருவவும்.
- எலுமிச்சம் துண்டங்களுடன் போடவும்.
- ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
- அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி, மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
- நன்கு குலுக்கவும்.
- அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
- ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
- ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
- இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
- சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
- இதை 'அம்ருத்' என்று சொல்வார்கள்
Images:
Ingredients:
- எலுமிச்சம் பழம் - 1 கிலோ
- உப்பு - 100 - 150 கிராம்
- மிளகாய்ப் பொடி - 200 கிராம்
- வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
- பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - கால் கிலோ ,
- கடுகு - 1 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
Method:
- எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
- அதன் மேல் உப்பைத் தூவவும்.
- பிறகு மிளகாய் பொடி தூவவும்.
- அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
- நன்கு குலுக்கவும்
- ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
- அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
- ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
- ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
- இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
- சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Ingredients:
- எலுமிச்சம் பழம் - 1 கிலோ
- உப்பு - 100 - 150 கிராம்
- மிளகாய்ப் பொடி - 200 கிராம்
- வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
- பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - கால் கிலோ ,
- கடுகு - 1 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
Method:
- எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- பின்பு வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், எலுமிசம்பழ துண்டுகளை போடவும்.
- நன்கு கிளறவும்.
- கொஞ்சம் அது வதங்கட்டும்.
- இப்போது உப்பு போடவும்; மீண்டும் நன்கு கிளறவும்.
- காய் பாதி வெந்ததும், வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போடவும்.
- நன்றாகக் கிளறவும்.
- எல்லாமாக நன்கு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, மிளகாய்ப் பொடி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
- ஆறினதும் பாட்டில்களில் சேமிக்கவும்.
- உடனே யே தொட்டுக்கலாம்.
- இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
- சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Ingredients:
- புளிப்பான மாங்காய் - 10
- மிளகாய்ப் பொடி - 200 கிராம்
- உப்பு
- வெந்தயம் - 100 கிராம்
- வெள்ளை கொத்து கடலை 1/2 கிலோ
- எண்ணெய் 1 கிலோ
Method:
- இந்த ஊறுகாய்க்கு எல்லாமே பச்சையாகத்தான் போடணும்.
- மாங்காயை நன்கு அலம்பி , துடைத்து, கொட்டையும் சேர்த்து, ஒரு காயை 16 துண்டுகளாக நறுக்க வேண்டும்.
- எல்லா துண்டுகளுமே ஓட்டுடன் இருந்தால் நல்லது.
- உள்ளிருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்றாகத் துணியால் துடைக்கவும்.
- சுத்தமாக உலர்ந்த ஜாடியில் அல்லது ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மாங்காய் துண்டங்களை போடவும்.
- அதன் மேலே உப்பு மற்றும் மிளகாய் பொடி போடவும்.
- நன்கு குலுக்கவும்.
- மாங்காய் துண்டங்களின் மேல் உப்பும் மிளகாய் பொடியும் நன்கு ஒட்டி இருக்கணும்.
- இப்போது வெந்தயம் மற்றும் கொத்து கடலையை போடணும்; நன்கு குலுக்கணும்.
- இப்போது எண்ணெய் விடணும், மாங்காய் இன் மேலே எண்ணெய் மிதக்கும்படி இருக்க வேண்டும். ஈரம், காற்று படக் கூடாது.
- நன்கு மூடி வைக்கணும்.
- தினமும் நன்கு 'அடி ஓட்ட' கிளறி விடணும்.
- ஒரு வாரம் கழித்து உபயோகிக்க துவங்கலாம்.
- அருமையான ஊறுகாய் இது.
- தயிர் சாதம் என்று இல்லை பருப்பு சாம்பார் சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம்; ஆவக்காய் சாதமே சாப்பிடலாம்
Ingredients:
- மாங்காய் - 10
- மிளகாய் - 150 கிராம்
- உப்பு
- வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 1 - 1 1/2 கப்
- கடுகு 2 டீ ஸ்பூன்
Method:
- மாங்காயை நன்கு அலம்பி, துடைத்து, கொட்டை எடுத்துட்டு , சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு வாணலி இல் துளி எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு பொடிக்கவும்.
- 'கர கர'ப்பாக அரைக்கவும்.
- துண்டங்களை ஒரு பேசினில் போட்டு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, வெந்தயப்பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு நன்றாகக் குலுக்கவும்.
- ஒவ்வொரு துண்டத்திலும் எல்லாம் 'கோட்' ஆகி இருக்கணும்.புன்னகை
- வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும் .
- அதை மாங்காய் துண்டங்கள் மேல் கொட்டவும்.
- கொட்டி னதை நன்கு கலக்கவும்.
- ஒரு 2 நாள் கழித்து நன்றாக ஊறின பின் சாப்பிடலாம்.
- ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
Ingredients:
- மாவடு - 1 படி
- கல் உப்பு - 1 கப்
- மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
- விளக்கெண்ணெய் எண்ணெய் 1/2 cup
- அரைக்க :
- மிளகாய் வற்றல் - 30 -35
- கடுகு - 2 டேபிள் ஸ்பூன்
- விரலி மஞ்சள் - 2 -3
Method:
- உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
- மிளகாய் வற்றல்,கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மிளகாய் பொடி மட்டும் மஞ்சள் பொடி கலவையை , கலந்து பிசிறிக் கொள்ளவும்.
- ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் கொஞ்சம் மாவடுவை போடவும்.
- பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே கொஞ்சம் மாவடு, அதன்மேலே ஒரு உப்பு மறுபடி மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
- மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
- அப்பவே உபயோகிக்கலாம் .
- ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
- மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
- துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்
Ingredients:
- மாவடு - 1 படி
- கல் உப்பு - 100 கிராம்
- மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
- விளக்கெண்ணெய் எண்ணெய் 4 டீஸ்பூன்.
Method:
- உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
- பெரிய ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் மாவடுவை போட்டு விளக்கெண்ணெய் எண்ணெய் விட்டு நன்றாகக் குலுக்க வும்.
- பிறகு உப்பு, மஞ்சள் பொடி போட்டு மறு முறை குலுக்கவும்.
- அப்படியே வைக்கவும்.
- மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
- ஒரு நாலு நாளில் ஊறிடும்.
- ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
- மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
- துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்.
Ingredients:
- காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 1 கப்
- மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன்
- தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் உப்பு
- வறுத்து பொடித்த வெந்தய பொடி 1/4 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/2 டீ ஸ்பூன்
- தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்
Method:
- மாங்காய் வற்றலை ஒரு 5 நிமிஷம் வென்னீரில் போடவும்.
- தண்ணிரை வடி கட்டவும்.
- வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மாங்காய் மேல் கொட்டவும்.
- அதிலேயே மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி மற்றும் உப்பு போட்டு குலுக்கவும்.
- சுவையான ஊறுகாய் தயார்.
Notes:
- இந்த ஊறுகாய் 'இன்ஸ்டன்ட் ஊறுகாய்' காய்ந்த மாங்காய் இருந்தால் போறும், சில நிமிடங்களில் தயாரிக்கலாம்.
- மாங்காய் வத்தல் - நல்ல புளிப்பு மாங்காய் களில் இதை போடலாம். நன்கு காய வைத்து வைத்துக்கொண்டால், மாங்காய் சீசன் இல்லாத போது, இந்த வத்தலை உபயோகித்து , குழம்பு மற்றும் ஊறுகாய் போடலாம். முதலில் மாங்காய் வத்தல் போடும் முறையை பார்ப்போம்.
- தேவையானவை:
- புளிப்பான மாங்காய் தேவையான அளவு.
- உப்பு
- செய்முறை:
- மாங்காயை நன்கு அலம்பி துடைக்கவும்,
- பிறகு அதை செதில் செதிலாக வெட்டவும்.
- உப்பு போட்டு குலுக்கி வைக்கவும்.
- 'சல சல' வென தண்ணிர் விட்டுக்கொள்ளும்.
- மாங்காய் துண்டங்களை மட்டும் தினமும் வெயிலில் வைக்கவும்.
- மாலை இல் மீண்டும் உப்பு நீரில் போடவும்.
- இப்படி யே உப்பு நீர் முழுவதும் வற்றும் வரை செய்யவும்.
- பிறகு மாங்காய் துண்டங்களை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து பத்திரப்படுத்தவும்.
Ingredients:
- பெங்களுரா மாங்காய் - 1 ( கிளிமூக்கு மாங்காய் )
- மிளகாய் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- வறுத்துப் பொடித்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
- பெருங்காய பொடி - 1 டீஸ்பூன்.
- தாளிக்க:
- நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டேபிள்ஸ்பூன்
Method:
- மாங்காயைக் அலம்பி துடைத்துப் பொடியாக நறுக்கவும்.
- அதை ஒரு பேசினில் போடவும் .
- அதன் மேல் சுற்றிலும் உப்பைத் தூவவும்.
- பிறகு மிளகாய் பொடி தூவவும்.
- அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
- ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே மாங்காயின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
- அவ்வளவுதான், இதை உடனே யே தொட்டுக்கொள்ளல்லாம்.
- கல்யாணம் மற்றும் சீமந்தங்களில் இப்படி செய்வார்கள் , அதனாலேயே இந்த பேர் வந்தது
Notes:
- இப்ப மாங்காய் சீசன் அல்லவா, அதனால் முதலில் மாங்காய். அதிலும் இது ரொம்ப சிம்பிளான ஊறுகாய் - 'கல்யாண மாங்காய்' இதை 1 வாரம் வைத்துக்கொள்ளலாம். பிரிட்ஜ் இல் வைத்தால் 1 மாதம் வைத்துக்கொள்ளலாம்.
Images: