- மாங்காய் - 10
- மிளகாய் - 150 கிராம்
- உப்பு
- வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 1 - 1 1/2 கப்
- கடுகு 2 டீ ஸ்பூன்
Method:
- மாங்காயை நன்கு அலம்பி, துடைத்து, கொட்டை எடுத்துட்டு , சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு வாணலி இல் துளி எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு பொடிக்கவும்.
- 'கர கர'ப்பாக அரைக்கவும்.
- துண்டங்களை ஒரு பேசினில் போட்டு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, வெந்தயப்பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு நன்றாகக் குலுக்கவும்.
- ஒவ்வொரு துண்டத்திலும் எல்லாம் 'கோட்' ஆகி இருக்கணும்.புன்னகை
- வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும் .
- அதை மாங்காய் துண்டங்கள் மேல் கொட்டவும்.
- கொட்டி னதை நன்கு கலக்கவும்.
- ஒரு 2 நாள் கழித்து நன்றாக ஊறின பின் சாப்பிடலாம்.
- ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
No comments:
Post a Comment