- பச்சைமிளகாய் 1 கிலோ
- கெட்டி யாக குழப்பின மோர் 1 கிலோ
- உப்பு
Method:
- பச்சை மிளகாய் களை நன்கு அலம்பவும்.
- காம்பு கிள்ள வேண்டாம், வால் பக்கத்தில் கீறவும் , அதாவது விதை சிதறாமல் மிளகாயை பிளக்கவும்.
- ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மோர் மொத்தத்தையும் விடவும்.
- உப்பு போட்டு கலக்கவும்.
- மிளகாய்களை அதில் போடவும்.
- மோர், மிளகாய்கள் மேலே இருக்கணும். ( தேவையானால் கொஞ்சம் ( ரொம்ப கொஞ்சம் ) தண்ணீர் விட்டுக்கொள்ளவும்)
- 2 நாள் அப்படியே ஊறட்டும்.
- ஆனால் தினமும் ஒரு முறை குலுக்கி விடனும்.
- முன்றாம் நாளில் இருந்து வெறும் மிளகாய்களை மட்டும் ( கலர் மாறி இருக்கும் ) எடுத்து , ஒரு முங்கில் தட்டில் போட்டு வெயிலில் காய வைக்கவும்.
- சாயங்காலம் ஆனதும், மீண்டும் மோரில் போட்டுவிடவும்.
- மறுநாள் மீண்டும் மிளகாய்களை காய வைக்கவும்.
- இப்படியே மொத்த மோரும் ஆகும் வரை செய்யணும்.
- அப்புறமும் மிளகாய்கள் நன்கு ( நொறுங்கும் பதம் ) காயும் வரை காய வைத்து சேமிக்கவும்.
- தேவையான போது எடுத்து வறுத்துக்கொள்ளவும்.
- வருஷத்துக்கும் நல்லா இருக்கும்.
- தயிர் சாதம் மற்றும் 'மோர் கூழ் ' செய்யும் போது உபயோகிக்கலாம்.
No comments:
Post a Comment