- பயத்தம் பருப்பு - 1 கப்,
- புளிப்பில்லாத தயிர் - 2 கப்,
- கேரட் துருவல் - 1 டீஸ்பூன்,
- தித்திப்பு சட்னி,
- பச்சை சட்னி யாவும் தேவைக்கு,
- உப்பு, எண்ணெய் - பொரிப்பதற்கு
- பச்சை மிளகாய் - 2,
- சீரகம் - 1 டீஸ்பூன்.
Method:
- பயத்தம் பருப்பை,களைந்து, ½ மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து, கரகரப்பாக, மட்டாக தண்ணீர்விட்டு அரைக்கவும்.
- பின் சீரகம், உப்பு சேர்த்து கலந்து எண்ணெயை காய வைத்து சிறு சிறு பக்கோடா மாதிரி கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
- 1 கப் தயிருடன், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து பொரித்து வைத்திருக்கும் வடையின் மீது ஊற்றி சிறிது ஊற விடவும்.
- பரிமாறும்போது மீண்டும் மீதி உள்ள தயிரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து வடைகளின் மேல் விடவும்.
- அதன் மேல் தித்திப்பு + புளிப்பு சட்னி, பச்சை சட்னி ஊற்றி துருவிய கேரட் தூவி அலங்கரித்து தரலாம்.
- அல்லது fridge இல் வைத்தும் தரலாம், அருமையாக இருக்கும்.
Notes:
- பச்சை சட்னி - கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை, இஞ்சி சேர்த்து அரைக்கவும். தித்திப்பு + புளிப்பு சட்னிக்கு - புளி விழுது, பேரீச்சை வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
No comments:
Post a Comment