Wednesday, October 7, 2020

மாங்காய் தொக்கு

Ingredients:
  • நல்ல புளிப்பு மாங்காய் 1 கிலோ தோல் சீவி துருவி வைக்கவும்.
  • மிளகாய் பொடி 200 கிராம்
  • உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
  • வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
  • கடுகு 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • மாங்காய்களை அலம்பி துடைத்து தோல் சீவி, துருவவும்.
  • ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அதில் துருவின மாங்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
  • நன்கு கிளறிவிடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
  • நன்கு கிளறி விடவும்.
  • கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
  • மீண்டும் நன்கு கிளறி விடவும்.
  • எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
  • வருஷத்துக்கும் கெடாது.


Notes:
  • மாங்காய் தொக்கு ! - என்னைப்பொருத்த வரை உலகத்திலேயே அருமையான தொக்கு இது என்பேன். 'மாதா ஊட்டாத சாதத்தை மாங்காய் ஊட்டும்" என்று என் தாத்தா சொல்வார்.
  • குறிப்பு : கொஞ்சம் புளிப்பு கம்மியாக இருக்கணும் தொக்கு என்று நினைப்பவர்கள் பெங்களுரா மாங்காய் இல் தொக்கு போடலாம். அல்லது ஊறுகாய் இல் வெல்லம் கொஞ்சம் போடலாம் புன்னகை எங்க அப்பாவுக்காக தனியாக நான் பங்களுராவில் தொக்கு போடுவேன்

Images:


No comments:

Blog Archive