Showing posts with label இனிப்பு சிற்றுண்டிகள். Show all posts
Showing posts with label இனிப்பு சிற்றுண்டிகள். Show all posts

Wednesday, October 7, 2020

பயத்தம்பருப்பு சுகியன்

Ingredients:
  • முழு பச்சைப்பயிறு அல்லது உடைத்த பயத்தம் பருப்பு – 1 கப்
  • மைதா – 1 கப்
  • வெல்லம் – 1 கப்
  • தேங்காய்த்துருவல் – 1/2 கப்
  • ஏலப்பொடி – சிறிதளவு
  • அரிசி மாவு – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

Method:
  • பச்சைப்பயிரை 10 நிமிடங்கள் ஊறவைத்து மூழ்கும் அளவிற்குத் தண்ணீரை ஊற்றி இரண்டு விசில் வந்ததும் கேஸை அணைக்கவும்.
  • பயத்தம் பருப்பானால் களைந்து அப்படியே வேகவைக்கலாம்.
  • வெந்த பாசிப்பயிரை நன்றாக மசிக்கவும்.
  • வெல்லத்தை உடைத்து, வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் வெல்லம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, அது கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும்.
  • மீண்டும் வெல்லத் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில், வேக வைத்த பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து நன்றாகத் திரண்டு வரும் வரை கிளறவும்.
  • பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும், தேவையானால் இன்னும் சிறிது நெய் விட்டுக்கொள்ளவும்.
  • நன்கு கிளறவும், எல்லாமாக நன்கு சேர்ந்து கொண்டாடும், ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
  • அது நன்கு ஆறியபின் சிறுசிறு உருண்டைகளாக ஒரே அளவில் உருட்டிக் கொள்ளவும்.
  • இது தான் பூரணம்.
  • அடுத்து , மேல் மாவிற்கு, மைதாவுடன் சிறிது உப்பு, அரிசி மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும் .
  • எண்ணெயை சூடாக்கி பருப்பு உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
  • இப்போது சுவையான 'பயத்தம்பருப்பு சுகியன்' தயார்.

Notes:
  • சிலர் மேல் மாவிற்க்காக அரிசி உளுந்து அரைத்து செய்வார்கள். அப்படியும் செய்யலாம்

மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரி

Ingredients:
  • மசித்த வாழைப்பழம் - 1/2 கப்
  • சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
  • தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
  • பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
  • மைதா - 2 கப் எள் - 1 டீஸ்பூன்
  • ஓமம் - 1/2 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பூரி பொரிக்க

Method:
  • முதலில் ஒரு பௌலில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, அத்துடன் எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக பூரி மாவு போன்று பிசைந்து கொள்ள வேண்டும்.
  • அதை அப்படியே ஒரு 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
  • எண்ணெய் சூடாவதற்குள், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, அதனை பூரிகளாக இட்டு வைக்கணும்.
  • எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரி ரெடி!!!
  • இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

Notes:
  • மாலையில் நல்ல சுவையான அதே சமயம் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், கர்நாடகத்தில் உள்ள மங்களூரில் மிகவும் பிரபலமான மங்களூர் பன் என்று அழைக்கப்படும் வாழைப்பழ பூரியை செய்யலாம்.
  • இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

பாதாம் பூரி

Ingredients:
  • கோதுமை மாவு
  • துளி உப்பு
  • 1 கப் பாதாம்
  • 1 /12 கப் சர்க்கரை
  • 1 1/4 கப் கொழுப்பு நிரம்பிய பால் (full cream milk)
  • 10 இழை குங்குமப் பூ

Method:
  • பாதாமை அலம்பி, வெந்நீரில் ஒரு 1/2 ஊறவைக்கவும்.
  • தோலி நீக்கி கொஞ்சம் பால் விட்டு 'வழு வழு' வென அரைக்கணும்.
  • ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூ வை துளி பால் விட்டு கரைத்து வைக்கவும்.
  • மீதி பாலை சர்க்கரை போட்டு கொதிக்கவிடவும்.
  • அது கொதிக்கும்போது சின்னதாக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதை அதில் போட்டு கிளறவும்.
  • அடி பிடிக்காமல் கிளறவும்.
  • அடுப்பை அணைத்துவிடவும்.
  • இதில் குங்குமப்பூவை கரைத்துவிடவும்.
  • கோதுமை மாவை எப்போதும் போல் பூரி செய்து, இதில் ஊறவைத்து பரிமாறவும்.
  • வேண்டுமானால் பரிமாறும்போது, பாதாம் பிஸ்தா துருவல்களை தூவி பரிமாறவும்.
  • 'சில்' என்று கூட பரிமாறலாம்.
  • சுவையான பாதாம் பூரி தயார்.

கோதுமை மாவு கேசரி

Ingredients:
  • 1 cup கோதுமை மாவு
  • 11/2 cup ஸ்பூன் நெய்
  • 1 1/2 cup சர்க்கரை
  • 10 முந்திரி - உடைத்து வைக்கவும்
  • 1/4 டீ ஸ்பூன் பாதாம் எசன்ஸ்

Method:
  • வாணலி இல் நெய்யை விடாமல் கோதுமை மாவை கருகாமல் வறுக்கவும்.
  • இப்போ நெய் விட்டு கோதுமை மாவை வறுக்கவும்.
  • நிறைய நெய் என்பதால் அது தண்ணீர் போல ஆகிவிடும், என்றாலும் அடுப்பை சிம் இல் வைத்து கோதுமை மாவை கிளறவும்.
  • நல்லா கோல்டன் பிரவுன் வரும்வரை வறுக்கணும்.
  • உடனே தண்ணீர் விடணும், ஒரே நிமிடத்தில் அது வெந்துவிடும்.
  • இப்போ சர்க்கரை போட்டு கிளறவும்.
  • வெந்ததும் பொடித்த முந்திரி தூவி இறக்கவும்.
  • சுவையான கோதுமை மாவு கேசரி தயார்.
  • இதை எங்கள் வீட்டில் 'magic sweet ' என்று சொல்வோம்
  • நிமிடத்தில் செய்யக் கூடியது, ரொம்ப taste ஆக இருக்கும்.
  • எங்க கிருஷ்ணாவின் பேவரெட் இது அவனே சூப்பராக செய்வான்

கோதுமை மாவு வெல்ல கேசரி

Ingredients:
  • 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
  • 2 1/2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 3/4 டேபிள் ஸ்பூன் வெல்லம் பொடித்தது
  • 1/4 டீ ஸ்பூன் ஏலப்பொடி
  • 2 டீ ஸ்பூன் பாதாம் பொடித்தது

Method:
  • வாணலி இல் நெய்யை விட்டு கோதுமை மாவை கருகாமல் வறுக்கவும்.
  • ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
  • வாணலி இல் தண்ணீர் விட்டு வெல்லத்தை கரைக்கவும், வடிகட்டவும்.
  • மீண்டும் வாணலில் விடவும், அடுப்பை சிம் இல் வைத்து வறுத்துள்ள கோதுமை மாவை தூவி கிளறவும்.
  • நெய் பிரியும் வரை கிளறவும்.
  • பொடித்த பாதாம் தூவி இறக்கவும்.
  • சுவையான கோதுமை மாவு வெல்ல கேசரி தயார்.

சொஜ்ஜி அப்பம்

Ingredients:
  • சன்ன ரவை 1 கப்
  • வெள்ளம் 3/4 கப்
  • ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
  • மைதா 2 கப்
  • நெய் 2 ஸ்பூன்
  • எண்ணை பொறிக்க

Method:
  • மைதாவை நன்கு சலிக்கவும்.
  • ஒரு சிட்டிகை உப்பு போட்டு, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கலந்து வைக்கவும்.
  • வெல்லத்தில் தண்ணீர் விட்டு வைக்கவும்.
  • கரைந்ததும், வடிகட்டி வைக்கவும்.
  • ஒரு உருளி இல் ரவையை போட்டு நெய்விட்டு நல்லா வறுக்கவும்.
  • வெல்ல தண்ணீரை விடவும்.
  • நன்கு கிளறவும்.
  • ஏலப்பொடி போடவும்.
  • வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.
  • பிறகு எலும்பிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • இப்ப மைதாவை எடுத்து சிறிய பூரி போல இட்டு, அதில் இந்த பூரண உருண்டை யை வைத்து, மூடி, கையால் மெல்லிய வடை போல் பரத்தவும்.
  • அதை அப்படியே எண்ணை இல் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவு தான், ' சொஜ்ஜி அப்பம்' ரெடி
  • குறைந்த தித்தீப்புடன் நல்லா இருக்கும்.

Notes:
  • மைதாவை எப்ப எடுத்தாலும் ஒரு முறை சலிக்கணும் . ஏன்னால், அதில் எப்பவும் புழு சீக்கிரம் வந்துவிடும் .சரியா?

பொருள்விளங்கா உருண்டை

Ingredients:
  • பச்சரிசி 1/2 கப்
  • புழுங்கல் அரிசி 1/2 கப்
  • பயத்தம் பருப்பு 1/2 கப்
  • கடலை பருப்பு 1/2 கப்
  • கோதுமை 1/2 கப்
  • வெல்லம் 2 1/2 கப்
  • தேங்காய் 1/4 கப் பல்லு பல்லாக நறுக்கியது
  • சுக்கு பொடி 1/4 ஸ்பூன்
  • ஏலப்பொடி 1/4 ஸ்பூன்
  • நெய் கொஞ்சம்

Method:
  • பச்சரிசி , புழுங்கல் அரிசி ,பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, கோதுமை இவைகளை ஒவ்வொன்றாக வரட்டு வாணலி இல் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தம்பலத்தில் கொட்டவும்.
  • கொஞ்சம் ஆறினதும், மிக்சி அல்லது மிஷின் இல் கொடுத்து மாவாக பொடிக்கவும்.
  • தேங்காய் யை துளி நெய் விட்டு நல்ல பொன்னிறமாக வறுக்கவும்.
  • வெல்லத்தை பொடித்து , ஒரு ஆழமான உருளி இல் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விடவும்.
  • அது கரைந்ததும், வடிகட்டவும், மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
  • நன்கு கொதிக்கும் போது, சுக்கு பொடி மற்றும் ஏலப்பொடி போடவும்.
  • கம்பி பதம் வந்ததும், அடுப்பை சின்ன தாகி விட்டு, தேங்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
  • இறக்கி வைத்து உருண்டை பிடிக்கவும் . சூட்டுடன் பிடிக்கணும்
  • கை சுடாமல் இருக்க நெய் தடவிக்கொண்டு அல்லது அரிசி மாவு தடவிக்கொண்டு பிடிக்கலாம்.
  • நெய் யை விட அரிசி மாவு சிறந்தது .
  • உருட்டிய உருண்டைகளை , ஒரு முறம் அல்லது தாம்பாளத்தில் போட்டு பக்கத்தில் இருப்பவர்களை, அவர்கள் சிறுவார்களானாலும் சரி , உருட்டிக்கொண்டே இருக்க சொல்லுங்கள்.
  • அப்படி செய்வதால், உருண்டைகள் இறுகும்.
  • நீங்கள் உருட்டுவதற்க்குல் , மாவு உருளி இல் ஒட்டிக்கொண்டு எடுக்க வராவிட்டால், கவலை வேண்டாம்; மீண்டும் அடுப்பை மூட்டி கொஞ்சம் சுட பண்ணுங்கோ, போறும், மறுபடி மாவு நெகிழ்ந்து கொடுக்கும்.
  • அப்புறம் மீண்டும் உருட்டலாம்.
  • இப்படியாக எல்லா மாவையும் உருட்டவும்.
  • சுவையான 'பொருள்விளங்கா உருண்டைகள்'தயார்.
  • நிறைய நாள் வைத்து சாப்பிடலாம்.

போளி போண்டா

Ingredients:
  • பூரணத்துக்கு தேவையானவை:
  • கடலை பருப்பு 1 கப்
  • தேங்காய் துருவல் 1/2 கப்
  • வெல்லம் 1 1/4 கப்
  • ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
  • அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
  • நெய் 1/2 ஸ்பூன்
  • மேல் மாவு செய்ய:
  • மைதா 1 கப்
  • corn flour 1/2 cup
  • சிட்டிகை உப்பு
  • மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  • துளி சோடா உப்பு
  • பொறிக்க எண்ணை

Method:
  • கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
  • ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி வெல்லம் எல்லாம் போட்டு அரைக்கவும்.
  • தண்ணீர் விட வேண்டாம்
  • அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
  • நன்கு கிளறவும்.
  • நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
  • ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
  • ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
  • பிறகு உருண்டை பிடிக்கவும்.
  • இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
  • தனியே வைக்கவும்.
  • ஒரு பேசின் இல் மைதா மாவு மற்றும் corn flour போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்
  • வாணலி இல் எண்ணை விட்டு சுட்டதும், பூரண உருண்டையை எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி, எண்ணை இல் போட்டு பொறிக்கவும்.
  • எல்லா உருண்டைகளையும் இப்படி பொறிக்கவும்.
  • பரிமாறும் போது, உருண்டையை விரலால் அழுத்தி குழி போல் செய்து, நெய் விட்டு தரவும்.

Notes:
  • இது ஆந்திரா டிபன். எனக்கு பேர் தெரியாது , ஆனால் சுவையாக இருக்கும். மேல் மாவு கரைக்காமல் அரைத்தும் செயலாம். தோசை மாவு போல அரைக்கணும்.

வெல்ல தோசை - 2

Ingredients:
  • Fresh தோசை மாவு 1 கப்
  • வெல்லம் 1 கப்
  • ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் 1/2 கப்
  • நெய் தோசை வார்க்க

Method:
  • ஒரு பாத்திரத்தில் தோசை மாவு மற்றும் வெல்லம், ஏலப்பொடி,தேங்காய் துருவல் எல்லாத்தையும் போட்டு கரைக்கவும்.
  • வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கவும்.
  • ஒரு 10 நிமிஷம் கழித்து தோசை வர்க்கவும்.
  • நெய்விட்டு இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
  • சாப்பிட கொடுக்கும் போதும் நெய் விட்டு தரவும்.
  • அருமையாக இருக்கும்.

பால் போளி - 2

Ingredients:
  • மைதா 2 கப்
  • சிட்டிகை உப்பு
  • மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  • துளி சோடா உப்பு
  • பொறிக்க எண்ணை
  • Full cream milk 2 கப்
  • பாதாம் 1/2 கப்
  • முந்திரி 1/2 கப்
  • பிஸ்தா 1/2 கப்
  • கோவா 1/2 கப்
  • சக்கரை 2 கப்
  • ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
  • குங்குமப்பூ 12 -15 இழைகள்

Method:
  • மைதாமாவை சப்பாத்திக்கு பிசைவது போல், உப்பு மஞ்சள் பொடி, சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
  • பருப்புகளை சன்னமாக உடைக்கவும்.
  • ஏலப்பொடி, கோவா போட்டு கலந்து வைக்கவும்.
  • இது தான் பூரணம்.
  • பாலை அடுப்பில் ஏற்றி ,சக்கரை ஏலப்பொடி ,குங்குமப்பூ போட்டு கலக்கவும்
  • பால் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
  • பிசைந்து வைத்துள்ள மாவை பூரிகளாக இடவும்.
  • ஒவ்வொரு பூரி இன் உள்ளும், பூரணத்தை வைத்து மூடவும்.
  • போளி போல பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை இல் வைத்து தடவும் .
  • எண்ணை இல் பொரித்து எடுக்கவும்.
  • ஒரு பேசினில், கொதித்த பாலை விட்டு அதில் இந்த பூரிகளை போடவும்.
  • ஊரினதும் பரிமாறவும்.
  • ரொம்ப நல்லா இருக்கும்.

Notes:
  • இதை சூடாவும், ஃபிரிஜ் இல் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
  • பரிமாறும் போது, மேலே பாதாம் பிஸ்தா தூவி பரிமாறலாம்.

பொரி மாவு உருண்டை - 2

Ingredients:
  • புழுங்கல் அரிசி 1 கப்
  • பொட்டு கடலை 1/2 கப்
  • வெல்லம் 1 கப்
  • தேங்காய் - பல்லு பல்லாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
  • ஏலப்பொடி 1 ஸ்பூன்
  • நெய் 1 டேபிள் ஸ்பூன்

Method:
  • வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
  • கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
  • வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
  • அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
  • தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
  • நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
  • நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
  • தேங்காய் துண்டங்களை நல்ல சிவப்பாக வறுக்கவும்
  • பொட்டு கடலை யை சற்று சூடாக்கி பொடிக்கவும்.
  • வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
  • அரைத்த மாவுகள் , வறுத்த தேங்காய் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
  • குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
  • ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.

Notes:
  • வேண்டுமானால் , வறுத்த முந்திரி துண்டங்களும் சேர்க்கலாம் .நாள் பட வைத்திருந்து சாப்பிடலாம்

Tuesday, August 30, 2011

நெய் இல்லாத போளி

எனக்கு இவ்வளவு நெய் வேண்டாம் என்று சொல்பவர்கள் நெய் இல்லாமலே போளி
செயலாம். அதர்க்கான குறிப்பு இங்கே புன்னகை

தேவையானவை:

கடலை மாவு 1 கப்
பொடித்த சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
2 டேபிள் ஸ்பூன் எண்ணை

செய்முறை:

கடலை மாவை துளி நெய் விட்டு சிவக்க வறுக்கவும். (கொஞ்சம் தான் புன்னகை )
ஆறினதும், சர்க்கரை பொடி ஏலப்பொடி போட்டு கலந்து வைக்கவும்.
இது தான் பூரணம்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு2 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, சப்பாத்தி போல் இடவும்.
அதன் மேல் பூரண கலவையை 1 -2 ஸ்பூன் போடவும்.
மெதுவாக மூடவும்.
மெல்ல ரொம்ப அழுத்தாமல் 'சப்பாத்தி போல் இடவும்'
கஷ்டமானால் அரைவட்டமாக மடித்து கொஞ்சமாய் இடவும். இது கொஞ்சம் சுலபம் புன்னகை
அது போல் எல்லாவற்றையும் செய்யவும்.பிறகு அடுப்பில் தோசை கல்லை போடவும்
இட்டு வைத்துள்ள போளியை எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
தேவையானால் நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான நெய் இல்லாத போளி தயார்.
இதை 1 வாரம் வரை கூட வைத்து இருக்கலாம், சாப்பிடும்போது, நெய் விட்டு தரலாம்.
வேண்டாம் என்றால் அப்படியே சாப்பிடலாம்.

தேங்காய் கோவா போளி

பூரணத்துக்கு தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
கோவா 1 கப் ( சக்கரை போட்டது )
சக்கரை 4 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

வாணலி இல் தேங்காய் துருவலை போடவும்.
சக்கரை ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும், கோவாவை உதிர்த்து போட்டு கிளறி இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
தனியே வைக்கவும்.
இது தான் பூரணம்
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி களை , ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?

பருப்பு சக்கரை போளி

சிலருக்கு வெல்லம் பிடிக்காது அல்லது ஒத்துக்கொள்ளது, அவர்கள் வெல்லத்துக்கு பதில் சக்கரை போட்டு செயலாம். ஆனால் அளவு மாறுபடும் .

பூரணத்துக்கு தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
சக்கரை 2 1/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி சக்கரை எல்லாம் போட்டு அரைக்கவும்.
தண்ணீர் விட வேண்டாம்
அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
நன்கு கிளறவும்; ஏன் என்றால் சக்கரை போட்டு அரைத்ததும் ரொம்ப தண்ணியாக இருக்கும் .
எனவே கொஞ்சம் நெய் விட்டு நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

பால் போளி 2

தேவையானவை:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
பொறிக்க எண்ணை
Full cream milk 2 கப்
பாதாம் 1/2 கப்
முந்திரி 1/2 கப்
பிஸ்தா 1/2 கப்
கோவா 1/2 கப்
சக்கரை 2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
குங்குமப்பூ 12 -15 இழைகள்

செய்முறை:

மைதாமாவை சப்பாத்திக்கு பிசைவது போல், உப்பு மஞ்சள் பொடி, சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
பருப்புகளை சன்னமாக உடைக்கவும்.
ஏலப்பொடி, கோவா போட்டு கலந்து வைக்கவும்.
இது தான் பூரணம்.
பாலை அடுப்பில் ஏற்றி ,சக்கரை ஏலப்பொடி ,குங்குமப்பூ போட்டு கலக்கவும்
பால் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை பூரிகளாக இடவும்.
ஒவ்வொரு பூரி இன் உள்ளும், பூரணத்தை வைத்து மூடவும்.
போளி போல பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை இல் வைத்து தடவும் .
எண்ணை இல் பொரித்து எடுக்கவும்.
ஒரு பேசினில், கொதித்த பாலை விட்டு அதில் இந்த பூரிகளை போடவும்.
ஊரினதும் பரிமாறவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: இதை சூடாவும், ஃபிரிஜ் இல் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
பரிமாறும் போது, மேலே பாதாம் பிஸ்தா தூவி பரிமாறலாம். புன்னகை

பால் போளி

இதை பல முறைகளில் செயலாம். சுவை கூடும், ரிச் ஆகவும் இருக்கும். சில முறைகளை பார்க்கலாம்.

தேவையானவை:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
பொறிக்க எண்ணை
Full cream milk 2 கப்
பாதாம் 1 கப்
முந்திரி 1/2 கப்
சக்கரை 2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
குங்குமப்பூ 10 -12 இழைகள்

செய்முறை:

மைதாமாவை சப்பாத்திக்கு பிசைவது போல், உப்பு மஞ்சள் பொடி, சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
15 நிமிஷம் ஊரவைக்கவும்.
பாதாமை வெந்நீரில் போட்டு தோல் உரிக்கவும்
முந்திரியை யும் வெந்நீரில் போட்டு வைக்கவும் .
இரண்டையும் துளி பால் விட்டு மசிய அரைக்கவும் .
பாலை அடுப்பில் ஏற்றி ,சக்கரை ஏலப்பொடி, குங்குமப்பூ போட்டு கலக்கவும்
பால் ஒரு கொதி வந்ததும், அறைத்துவைத்துள்ள விழுதை போட்டு கலக்கவும்.
மீண்டும் ஒரு கொதி வந்த தும் இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை பூரிகளாக இடவும்.
எண்ணை இல் பொரித்து எடுக்கவும்.
ஒரு பேசினில், கொதித்த பாலை விட்டு அதில் இந்த பூரிகளை போடவும்.
ஊரினதும் பரிமாறவும்.
ரொம்ப நல்ல இருக்கும்.

குறிப்பு: பாதாம் முந்தி ரி இல்லாமலும், வெறுமன கொதிக்கும் பாலில் பூரிகளை போட்டு சாப்பிடலாம் அதுவும் நல்லா தான் இருக்கும்.

பருப்பு போளி

பூரணத்துக்கு தேவையானவை:

கடலை பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வெல்லம் 1 1/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி வெல்லம் எல்லாம் போட்டு அரைக்கவும்.
தண்ணீர் விட வேண்டாம்
அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?

தேங்காய் போளி

போளி இல் நிறைய வகைகள் இருக்கு என்றாலும், சாதாரணமாய் , ஆண்டாண்டு காலமாய் நாம் செய்து வருவது தேங்காய் போளி மற்றும் கடலை பருப்பு போளிகள் தான். போகி, வரலக்ஷ்மி விரதம் , மாவிளக்கு போடும்போது, ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் இதை தான் செய்வது வழக்கம் புன்னகை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பூரணத்துக்கு தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் 3/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

வாணலி இல் கொஞ்சமாக (1/4 கப் ஐ விட குறைவாக ) தண்ணீர் விட்டு, வெல்லத்தை போட்டு கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் , வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து ஏலப்பொடி, நெய் போட்டு ஒரு கொதி வந்ததும்,
தேங்காய் துருவலை போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?

'கமர் கட்'

இந்த கால குழந்தைகளுக்கு இந்த 'கமர் கட்' பற்றி தெரியுமா என்பதே சந்தேகம் தான். கட்பெர்ரி இஸ் இல்லாத காலத்தில் ரொம்ப 'மவுசுடன்' இருந்த இனிப்பு புன்னகை சாக்கலேட் என்று கூட சொல்லலாம். இனி அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பாகு வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 4 - 5 ஸ்பூன்

செய்முறை :

ஒரு தாம்பாளத்தில் அரிசி மாவை பரவலாக தூவி வைக்கவும்.
வெல்லத்தை நறுக்கி - தூளாக்கி தண்ணீரில் போட்டு கரைய விடவும்.
வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்
அது கெட்டியாகும் பொது, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகிலிருந்து கொஞ்சம் கரண்டியால் எடுத்து அந்த தண்ணீரில் விடவும்.
கையால் உருட்டி பார்த்தால் உருட்ட வரணும்.
அதை ஒரு பாத்திரத்தில் ஓங்கி அடித்து பார்த்தால், நல்ல 'வெண்கல சத்தம்' வரணும்.
'டங்கு' என்று சத்தம் வரணும்.
அப்படி வந்து விட்டால் சரியான படம் என்று அர்த்தம்.
உடனே அடுப்பை நல்ல சின்ன தாக்கி விட்டு, தேங்காய் துருவல் மர்ற்றும் ஏலப்பொடி போட்டு நல்லா கிளறி இறக்கிடனும்.
பாகை கரண்டி கரண்டியா க எடுத்து ,தாம்பாளத்தில் உள்ள அரிசி மாவின் மேல் விடணும்.
உடனே சூட்டுடன் உருட்டனும்.
உருண்டையாகவோ, நீள் உருண்டையாகவோ விரும்பியவாறு உருட்டலாம் புன்னகை
அரிசி மாவு அதன் மேல் நல்லா ஒட்டிக்கொண்டு விட்டால் இந்த 'கமர் கட்' ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
வேண்டுமானால், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.
அல்லது அலுமினிய ஃபாய்ல் களில் சுற்றி வைக்கலாம்.
நிச்சயம் குழந்தைகள் என் உங்களுக்கும் பிடிக்கும்.
செய்து பாருங்கள்.புன்னகை

பொரி மாவு உருண்டை 2

தேவையானவை:

புழுங்கல் அரிசி 1 கப்
பொட்டு கடலை 1/2 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் - பல்லு பல்லாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
தேங்காய் துண்டங்களை நல்ல சிவப்பாக வறுக்கவும்
பொட்டு கடலை யை சற்று சூடாக்கி பொடிக்கவும்.
வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
அரைத்த மாவுகள் , வறுத்த தேங்காய் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால் , வறுத்த முந்திரி துண்டங்களும் சேர்க்கலாம் .நாள் பட வைத்திருந்து சாப்பிடலாம் புன்னகை

Blog Archive