Wednesday, October 7, 2020

பொரி மாவு உருண்டை - 2

Ingredients:
  • புழுங்கல் அரிசி 1 கப்
  • பொட்டு கடலை 1/2 கப்
  • வெல்லம் 1 கப்
  • தேங்காய் - பல்லு பல்லாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
  • ஏலப்பொடி 1 ஸ்பூன்
  • நெய் 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
  • கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
  • வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
  • அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
  • தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
  • நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
  • நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
  • தேங்காய் துண்டங்களை நல்ல சிவப்பாக வறுக்கவும்
  • பொட்டு கடலை யை சற்று சூடாக்கி பொடிக்கவும்.
  • வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
  • அரைத்த மாவுகள் , வறுத்த தேங்காய் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
  • குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
  • ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.


Notes:
  • வேண்டுமானால் , வறுத்த முந்திரி துண்டங்களும் சேர்க்கலாம் .நாள் பட வைத்திருந்து சாப்பிடலாம்

No comments:

Blog Archive