- அவல் - 200 கிராம்
- கடலை மாவு - 100 கிராம்
- அரிசி மாவு - 50 கிராம்
- வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
- மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
- சோடா உப்பு - 1 சிட்டிகை
- எண்ணெய் - பொறிக்க
- உப்பு - தேவையான அளவு
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் நறுக்கியது - 2
- மிளகாய் பொடி தேவையான அளவு
Method:
- அவலை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
- வறுத்த வேர்க்கடலையையும் மிக்சி இல் ஒண்டிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
- பிறகு, அரிசிமாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் பொடி, , பெருங்காயம், சோடா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும், பிசைந்தமாவை கிள்ளிப்போட்டு, கரகரப்பாக பொரிந்ததும் எடுத்தால் அவல் வேர்க்கடலை பக்கோடா ரெடி.
- நல்ல 'கரகரப்பாக' இருக்கும்.
Notes:
- அவல் சீக்கிரம் ஊறிவிடும் , அதனால், நேரம் ஆக ஆக, பக்கோடா மாவு கெட்டியாகும். எனவே, அவ்வப்போது தண்ணீர் தெளித்து தளர்த்திக் கொள்ளவும்
Images:
No comments:
Post a Comment