Showing posts with label பிரெட் இல் பலவகை. Show all posts
Showing posts with label பிரெட் இல் பலவகை. Show all posts

Monday, July 25, 2011

பிரட் ஹல்வா 2

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
மில்க் மெய்டு 1/2 டின்
நெய் 1 – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 – 12

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பிரட் ஐ மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
பூந்துருவலாக வரும்.
வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
அடுப்பை சின்னதாக்கி விட்டு பிரட் துருவலை போடவும்.
ஒரு கிளறு கிளறி மில்க் மெய்டு செக்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான ‘பிரட் ஹல்வா’ நிமிடத்தில் தயார்.

குறிப்பு: மில்க் மெய்டு சேர்ப்பதால் சர்க்கரை மற்றும் பால் வேண்டாம்

பிரட் சக்கரை தூவினது

தேவயானவை:

4 பிரட் ஸ்லைஸ்
3 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பிரட் துண்டங்களை நல்ல ‘மெத்’ என சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
சக்கரையை தூவி இறக்கவும்.
அவ்வளவு தான். ருசியோ ருசி.

Wednesday, July 20, 2011

பிரட் சாண்ட்விச்

தேவயானவை:

பிரட், ஏதாவது "left over curry" இல்லாவிடில்
வெங்காயம், தக்காளி , உருளை கிழங்கு , சீரகம் கடுகு, கொஞ்சம் எண்ணை, பிரட் டொஸ்டர்.

செய்முறை:

உருளை யை வேகவைக்கவும்.
( குக்கர் இல் தண்ணீர் விட்டோ அல்லது ஓவன் லோ வைக்கவும், வெந்ததும் தோல் உரித்து மசிக்கவும் )
வாணலி இல் எண்ணைவிட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி போடவும்.
வதக்கவும்.
வெந்த உருளைக்கிழங்கை போடவும்.
தண்ணீர் விடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறவும்.
காய் ரெடி.
இப்ப இரண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் காய் வைத்து அதன் மேல் துளி நெய் தடவி, டொஸ்டர் இல் வைக்கவும்.
காஸ் இன் மே தீ இல் இருபுறமும் சுடவும்.
திறந்தால் டோஸ்ட் ரெடி.

ஏற்க்கனவே ஏதாவது curry இருந்தால் அதை பிரட் நடுவில் வைத்து மேலே சொன்னது போல் செய்யவும். டொமாட்டோ சாஸ் சுடன் நன்றாக இருக்கும்.

குறிப்பு: எலக்ட்ரிக்கல் டொஸ்டர் இருந்தால் இன்னும் சுலபம் :)

பிரெட் வித் கறிகாய்

தேவயானவை:

4 பிரட் ஸ்லைஸ்
1 கப் mixed vegetables (அதாவது, கேரட் , வெங்காயம், பட்டாணி,தக்காளி,உருளை என் உங்களுக்கு பிடித்தமான காய்களை நறுக்கி கொள்ளவும்.)
3 ஸ்பூன் நெய்
1/2 ஸ்பூன் சீரகம்
1/2 ஸ்பூன் கடுகு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் . (கத்தரிக்கோலால் சதுரமாக வெட்டவும். சமயல் அறைக்கென தனி யாக ஒன்று வைத்துக்கொள்ளவும். கண் எரியாமல் பொடியாக பச்சை மிளகாய் வெட்டலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> )
வாணலி இல் நெய் 1 ஸ்பூன் விட்டு பிரட் துண்டங்களை நல்ல பொன்னிறமாக சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மறுபடி வாணலி யை அடுப்பில் வைத்து நெய் விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
நறுக்கி வைத்துள்ள காய்களை போடவும்.
நான்கு வதக்கவும். துளி தண்ணி தெளித்து மூடவும்.
2 நிமிடத்த்தில் வெந்துவிடும். பிறகு நன்கு கிளறி வறுத்து வைத்துவைதுள்ள பிரட் துண்டங்களை போடவும்.
கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவயான bread mixed veg. தயார் .
நல்ல 'filling' ஆக இருக்கும்.
சுலபமாக தயாரிக்கலாம்.

சக்கரை தூவின பிரட்

தேவயானவை:

4 பிரட் ஸ்லைஸ்
3 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பிரட் துண்டங்களை நல்ல 'மெத்' என சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
சக்கரையை தூவி இறக்கவும்.
அவ்வளவு தான். ருசியோ ருசி.

பிரட் உப்புமா

தேவயானவை:
6 பிரட் ஸ்லைஸ்
1 கப் துருவின கேரட் & வெங்காயம்
2 ஸ்பூன் எண்ணை
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் கடலை பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:
பிரட் ஐ மிக்சி ல போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பூ போல் மிருதுவாக வந்துடும்.
தனியே வைக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
துருவிய காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
உப்பு போடவும்.
தனியே எடுத்து வைத்துள்ள பிரட் ஐ போடவும். நன்கு கிளறி உடனே இறக்கவும்.
இது ரொம்ப சுலபம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> அப்படியே சாப்பிடலாம்.

Tuesday, July 19, 2011

கலர்ஃபுல் பிரெட் சாட்

தேவையானவை:

கோதுமை பிரெட் துண்டுகள் - 4
தயிர் - 2 கப்
தித்திப்பு சட்னி - 1 டேபிள்ஸ்பூன்
கார சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
ஓமப்பொடி, காராபூந்தி - தலா அரை கப்
வெங்காயம், தக்காளி
மல்லித்தழை - தலா அரை கப்
வறுத்த முந்திரி - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய் + நெய் கலந்து வைத்துக்கொள்ளவும்
வறுத்துப்போடித்த சீரகம் 1 ஸ்பூன்

செய்முறை:

தயிரைக் கடைந்து தனியே வைக்கவும்.
பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு முக்கோண மாக வெட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித் தெடுக்கவும்.
அதை பரிமாறும் தட்டில் வரிசையாக அடுக்கி அதன் மேல் ஒரு கரண்டி தேன் கடைந்த தயிரை பரவலாக ஊற்றி, வெங்காயம், தக்காளி, மல்லித்தழையைப் பரத்தவும்.
தித்திப்பு சட்னி மற்றும் கார சட்னி ஊற்றி ஒரு சிட்டிகை சீரக பொடி தூவி
பிறகு காராபூந்தி, ஓமப்பொடி, மிளகாய்த்தூள், வறுத்த முந்திரி என வரிசையாக தூவி பரிமாறவும்.

பிரெட் வெஜ் ஆம்லெட்

தேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 6 முதல் 8
கடலை மாவு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை:
பிரட் ஐ சிறிய வட்டமாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்
கடலை மாவில் வெங்காயம், காரட், குடமிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
தோசை கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு பிரெட் துண்டை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலைமாவை பரவலாக ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து மெதுவாக மறுபுறம் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக எடுக்கவும்.

பிரெட் ஊத்தப்பம்

தேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 12
மோர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் 1 -2
தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் (அ) எண்ணெய்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை வெட்டி விடவும்.
அதை மோரில் நனைத்து உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும் .
(தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.)
தோசை கல் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வர்க்கவும்.
தீ சிறியதாக இருப்பது அவசியம்
அதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தழை, மிளகுத்தூள் எல்லாவற்றையும் கலந்து ஒரு டீஸ்பூன் தூவி விடவும். மறுபுறம் திருப்பிப்போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

பிரெட் கோஃப்தா

தேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 10
பால் - கொஞ்சம்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2(இரண்டையும் பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோலுரிக்கவும்)
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி - 2 (தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்கவும்)அல்லது டொம்டோ பியூரி உபயோகிக்கவும்.
மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் கொஞ்சம்

செய்முறை:

பாலில் பிரெட்டை நனைத்து வேக வைத்த உருளைகிழங்கு உப்புடன் பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வாணலி இல் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளி ப்யூரியை (தக்காளி சாறு) ஊற்றி, மிளகாய் பொடி , கரம்மசாலா பொடி , போட்டு கொதிக்கவிடவும்.
நான்கு கொதித்து வாசனை போனதும் இறக்கிவிடவும்.
வேண்டுமானால் கொத்தமல்லி தழை போடலாம்.
பரிமாறுவதற்கு முன் பொரித்தெடுத்த பிரெட் கோஃப்தாக்களை அதில் போட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

பிரட் ஹல்வா 2

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
மில்க் மெய்டு 1/2 டின்
நெய் 1 - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 - 12

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பிரட் ஐ மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
பூந்துருவலாக வரும்.
வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
அடுப்பை சின்னதாக்கி விட்டு பிரட் துருவலை போடவும்.
ஒரு கிளறு கிளறி மில்க் மெய்டு செக்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான 'பிரட் ஹல்வா' நிமிடத்தில் தயார்.

குறிப்பு: மில்க் மெய்டு சேர்ப்பதால் சர்க்கரை மற்றும் பால் வேண்டாம்

பிரட் ஹல்வா

பிரட் ஹல்வா - இது சமிப காலமாக பிரபலமாகும் சுலபமான இனிப்பு.செய்வதும் சுலபம். பெரியவர்கள் முதல் குழந்திகள் வரை விரும்பி உண்பார்கள்.

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
பால் 1 கப்
சர்க்கரை 1 கப்
நெய் 1 - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 - 12

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பாலில் நனைத்து வையுங்கள். அல்லது மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
பிறகு அரைத்து வைத்ததை கொட்டி கிளறவும்.
1 நிமிடத்துக்கு பிறகு சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான 'பிரட் ஹல்வா' நிமிடத்தில் தயார்.

குறிப்பு: நீங்கள் இந்த ஹல்வா செய்ய ஃப்ரூட் பிரட் ம உபயோகிக்கலாம் . அப்பொழுது மிக்சி இல் அரைக்கவேண்டாம் . பாலில் ஒரு 10 நிமிஷம் நனைத்து வைத்து பின் ஹல்வா செய்யவும். இப்படி செய்வதால் அதில் உள்ள உயர் பழங்கள் உடயாமல் இருக்கும் மேலும் முந்திரி திராக்ஷை தேவை இல்லை . எனவே நெய்யும் குறைவாக உபயோகமாகும்.

பிரட் குலோப் ஜாமூன்

தேவையானவை:

ஸ்வீட் பிரட்10 ஸ்லைஸ்
சர்க்கரை 1 கப்
பொறிக்க எண்ணை
ரோஸ் எசன்ஸ் சில துளிகள்

செய்முறை:
முதலில் பிரட் ஐ விரல் நீளத்துக்கு கட் பண்ணி வைக்கவும்
ஒரு வாணலி இல் 1 1/2 கப் தண்ணி விட்டு சர்க்கரையை போட்டு அடுப்பை சின்னதாக வைக்கவும்.
அது நன்கு கொதித்து ஒரு கம்பி பாகு வரும் போது இறக்கி துளி ரோஸ் எசன்ஸ் விட்டு வைக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் வாணலி வைத்து எண்ணை விட்டு கட் பண்ணி வைத்துள்ள பிரட் துண்டங்களை பொரிக்கவும்.
அவை 'கோல்டன் ' கலரில் பொரிந்ததும் பாகில் போடவும்.
அடுத்த ஈடு பொரியும் வரை அது பாகில் இருக்கட்டும்.
அடுத்த ஈடு பிரட் பொரிந்து பாகில் போடும் முன் , முன்பே போட்டு பாகில் ஊறிய பிரட் துண்டங்களை அதாவது 'பிரட் குலோப் ஜாமூன் களை' எடுத்து தனியாக வைக்கவும்.
இப்போது பொறித்த பிரட் துண்டங்களை மீதி பாகில் போடவும்.
இவ்வாறு அனைத்து பிரட் துண்டங்களையும் பொறித்து பாகில் போட்டு எடுத்து வைக்கவும்.
ரொம்ப சுவையான 'பிரட் குலோப் ஜாமூன்' தயார்.

குறிப்பு: நாம் தீபாவளி சமயம் குலோப் ஜாமூன் செய்த பின் அந்த பாகு மீந்து விடும் ; அந்த நேரத்தில் இந்த 'பிரட் குலோப் ஜாமூன்' தயார் செயல்லாம் . இந்த பொரிந்த பிரட் துண்டங்கள் எல்லா பாகையும் உறிந்துகொண்டு சுவையாக இருக்கும் . நமக்கு பாகும் வீணாகாது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

பிரட் பஜ்ஜி

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
கடலை மாவு 1/4 கிலோ
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஓமம் 1/2 ஸ்பூன்
பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
2 சிட்டிகை சோடா உப்பு
2 சிட்டிகை கேசரி கலர்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

ஒரு பேசினில் கடலை மாவு,மிளகாய் பொடி, ஓமம், பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
1/2 மணி அந்த மாவை ஊற விடுங்கள்.
பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
மெல்ல திருப்பி விடுங்கள்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

பிரட் பஜ்ஜி 2

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
தோசை மாவு 2 கப்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
டொமெட்டோ கெட்ச் அப் அல்லது சாஸ் 2 ஸ்பூன்
பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
2 சிட்டிகை சோடா உப்பு
2 சிட்டிகை கேசரி கலர்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

ஒரு பேசினில் தோசை மாவு, மிளகாய் பொடி, பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
தேவையானால் கொஞ்சமாக தண்ணீர் விடவும்
நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
மெல்ல திருப்பி விடுங்கள்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
பிரட் பஜ்ஜி தயார் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .

குறிப்பு: மீந்து போகும் தோசைமாவில் இதை செயலாம். எண்ணை வேண்டாம் என நினைப்பவர்கள் தோசை கல்லில் போட்டு மட்டாக எண்ணை விட்டு பொறுமையாக , பஜ்ஜி நன்கு வெந்ததும் எடுக்கலாம் .

பிரட் பஜ்ஜி 3

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
கடலை மாவு 2 கப்
சோள மாவு 1/4 cup
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஓமம் 1/2 ஸ்பூன் (தேவையானால் )
பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
2 சிட்டிகை சோடா உப்பு
2 சிட்டிகை கேசரி கலர்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

ஒரு பேசினில் கடலை மாவு, சோள மாவு,மிளகாய் பொடி, ஓமம், பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
மெல்ல திருப்பி விடுங்கள்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
சோள மாவு சேர்ப்பதால் இது ரொம்ப 'கிறிஸ்ப் 'ஆக இருக்கும் அதாவது ரொம்ப மொரு மொருப்பாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .

குறிப்பு: உங்களுக்கு இந்த பஜ்ஜிகள் இன்னும் காரமாக வேண்டுமானால் , பிரட் துண்டங்கள் மேல் துளி மிளகாய் பொடி உப்பு கலவையை தடவி பின் மாவில் முக்கி பஜ்ஜி போடுங்கள் . சரியா?

பிரட் குர் குரே

தேவையானவை:

எந்த பிரட் ஆனாலும் சரி 10 ஸ்லைஸ்
கொஞ்சம் நெய்
உப்பு
மிளகு பொடி

செய்முறை:

பிரட் ஐ சின்ன சின்ன துண்டங்களாக ( 1 சென்டி மீட்டர் அளவுக்கு சின்னதாக )
கட் செய்து வைக்கவும்.
அப்படியே விட்டால் 4 - 5 மணி நேரத்தில் அவை காய்ந்துவிடும் , இல்லாவிட்டால் மக்ரோவேவ் ஓவனிலோ, அடுப்பில் வாணலி வைத்தோ வறுக்கவும்.
காந்தாமல் வறுக்கணும்.
அவை நல்ல கர கர வென வரும் போது , நெய் விட்டு வறுக்கணும். ( இப்படி செய்வதால் நெய் குறைவாக செலவாகும் கண்ணடி" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/182891.gif" alt="கண்ணடி" longdesc="43"> )
வறுத்து எடுத்ததும் ஒரு பேசினில் போட்டு உப்பு மிளகு பொடி போட்டு குலுக்கவும்.
அவ்வளவுதான் , பிரட் குர் குரே தயார்.
டிரைன் ல போகும் போது , மதிய வேளைகளில் 'போர் ' அடிக்கும்போது இது ரொம்ப நல்லா இருக்கும்.
மாலை வேளை களிலும் டீ உடன் நல்ல இருக்கும்.
செய்து பாருங்கள் அப்புறம் மீந்த பிரட் களில் இதயே தான் செய்வீர்கள் ஜாலி" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="ஜாலி" longdesc="17">

பிரட் குர் குரே - இனிப்பு

தேவையானவை:

எந்த பிரட் ஆனாலும் சரி 10 ஸ்லைஸ்
கொஞ்சம் நெய்
பொடித்த சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சின்ன சின்ன துண்டங்களாக ( 1 சென்டி மீட்டர் அளவுக்கு சின்னதாக )
கட் செய்து வைக்கவும்.
அப்படியே விட்டால் 4 - 5 மணி நேரத்தில் அவை காய்ந்துவிடும் , இல்லாவிட்டால் மக்ரோவேவ் ஓவனிலோ, அடுப்பில் வாணலி வைத்தோ வறுக்கவும்.
காந்தாமல் வறுக்கணும்.
அவை நல்ல கர கர வென வரும் போது , நெய் விட்டு வறுக்கணும். ( இப்படி செய்வதால் நெய் குறைவாக செலவாகும் கண்ணடி )
வறுத்து எடுத்ததும் ஒரு பேசினில் போட்டு பொடித்த சக்கரை போட்டு குலுக்கவும்.
அவ்வளவுதான் , பிரட் குர் குரே தயார்.
ரொம்ப நல்லா இருக்கும்.
மாலை வேளை களில் குழந்தைகளுக்கு தரலாம்

பிரட் கபாப்

தேவயானவை :

பிரட் 10 ஸ்லைஸ்
பூண்டு 4 பல்
மிளகாய் பொடி 1 spoon
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
தயிர் 4 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணை
கொத்துமல்லி - கொஞ்சம்

செய்முறை :

பிரட் துண்டாங்களை தண்ணீரில் முக்கி பிழிய யும்.
ஒரு பேசினில், பிழிந்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு , கரம் மசாலா, மிளகாய் பொடி, உப்பு, தயிர் , எலுமிச்சை சாறு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்
நீள் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு தோசைகல்லை அடுப்பில் வைத்து ( நிதானமான தீ இருக்கவேண்டும் )துளி எண்ணை விட்டு இந்த "கபாப்" களை (4 - 5 ) வைக்கவும்.
கொஞ்சம் பொரிந்ததும் மெல்ல திருப்பிவிடவும்.
மீண்டும் எண்ணை விடவும்.
நன்கு பொன்னிறமானதும் , எடுத்து வடிய விடவும்.
எல்லாவர்ற்றையும் இவ்வாறு செய்யவும்.
டொமாட்டோ கெசப்புடன் பரிமாறவும்.

ப்ரெட் கட்லெட்

தேவயானவை :

பிரட் 10 ஸ்லைஸ்
பூண்டு 4 பல்
வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
வேகவைத்த உருளை கிழங்கு 2
மிளகாய் பொடி 1 spoon
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை
கொத்துமல்லி - கொஞ்சம்

செய்முறை :

பிரட் துண்டாங்களை தண்ணீரில் முக்கி பிழிய யும்.
ஒரு பேசினில், பிழிந்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு + வெங்காயம், வேகவைத்து உதிர்த்த உருளை கிழங்கு , கரம் மசாலா, மிளகாய் பொடி, உப்பு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்
தேவையான வடிவத்தில் 'கட்லெட் ' செய்து வைக்கவும்
ஒரு தோசைகல்லை அடுப்பில் வைத்து ( நிதானமான தீ இருக்கவேண்டும் )துளி எண்ணை விட்டு இந்த 'கட்லெட் ' களை (4 - 5 ) வைக்கவும்.
கொஞ்சம் பொரிந்ததும் மெல்ல திருப்பிவிடவும்.
மீண்டும் எண்ணை விடவும்.
நன்கு பொன்னிறமானதும் , எடுத்து வடிய விடவும்.
எல்லாவர்ற்றையும் இவ்வாறு செய்யவும்.
டொமாட்டோ கெசப்புடன் பரிமாறவும்.

குறிப்பு: பிசையும் மாவு நன்கு கெட்டியாக இருக்கணும், ஒருவேளை அவ்வாறு இல்லாவிட்டால் , கலக்கும் மாவில் கொஞ்சம் சோள மாவு கலந்து கொள்ளலாம் அல்லது அவல் சேக்கலாம். அவ்வாறு சேர்க்கும் போது, மாவை சற்று நேரம் ஊரவைக்க னும் .

Blog Archive