Tuesday, July 19, 2011

பிரெட் ஊத்தப்பம்

தேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 12
மோர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் 1 -2
தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் (அ) எண்ணெய்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை வெட்டி விடவும்.
அதை மோரில் நனைத்து உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும் .
(தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.)
தோசை கல் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வர்க்கவும்.
தீ சிறியதாக இருப்பது அவசியம்
அதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தழை, மிளகுத்தூள் எல்லாவற்றையும் கலந்து ஒரு டீஸ்பூன் தூவி விடவும். மறுபுறம் திருப்பிப்போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

No comments:

Blog Archive