Tuesday, July 19, 2011

பிரட் கபாப்

தேவயானவை :

பிரட் 10 ஸ்லைஸ்
பூண்டு 4 பல்
மிளகாய் பொடி 1 spoon
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
தயிர் 4 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணை
கொத்துமல்லி - கொஞ்சம்

செய்முறை :

பிரட் துண்டாங்களை தண்ணீரில் முக்கி பிழிய யும்.
ஒரு பேசினில், பிழிந்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு , கரம் மசாலா, மிளகாய் பொடி, உப்பு, தயிர் , எலுமிச்சை சாறு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்
நீள் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு தோசைகல்லை அடுப்பில் வைத்து ( நிதானமான தீ இருக்கவேண்டும் )துளி எண்ணை விட்டு இந்த "கபாப்" களை (4 - 5 ) வைக்கவும்.
கொஞ்சம் பொரிந்ததும் மெல்ல திருப்பிவிடவும்.
மீண்டும் எண்ணை விடவும்.
நன்கு பொன்னிறமானதும் , எடுத்து வடிய விடவும்.
எல்லாவர்ற்றையும் இவ்வாறு செய்யவும்.
டொமாட்டோ கெசப்புடன் பரிமாறவும்.

No comments:

Blog Archive