Tuesday, July 19, 2011

பிரட் குலோப் ஜாமூன்

தேவையானவை:

ஸ்வீட் பிரட்10 ஸ்லைஸ்
சர்க்கரை 1 கப்
பொறிக்க எண்ணை
ரோஸ் எசன்ஸ் சில துளிகள்

செய்முறை:
முதலில் பிரட் ஐ விரல் நீளத்துக்கு கட் பண்ணி வைக்கவும்
ஒரு வாணலி இல் 1 1/2 கப் தண்ணி விட்டு சர்க்கரையை போட்டு அடுப்பை சின்னதாக வைக்கவும்.
அது நன்கு கொதித்து ஒரு கம்பி பாகு வரும் போது இறக்கி துளி ரோஸ் எசன்ஸ் விட்டு வைக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் வாணலி வைத்து எண்ணை விட்டு கட் பண்ணி வைத்துள்ள பிரட் துண்டங்களை பொரிக்கவும்.
அவை 'கோல்டன் ' கலரில் பொரிந்ததும் பாகில் போடவும்.
அடுத்த ஈடு பொரியும் வரை அது பாகில் இருக்கட்டும்.
அடுத்த ஈடு பிரட் பொரிந்து பாகில் போடும் முன் , முன்பே போட்டு பாகில் ஊறிய பிரட் துண்டங்களை அதாவது 'பிரட் குலோப் ஜாமூன் களை' எடுத்து தனியாக வைக்கவும்.
இப்போது பொறித்த பிரட் துண்டங்களை மீதி பாகில் போடவும்.
இவ்வாறு அனைத்து பிரட் துண்டங்களையும் பொறித்து பாகில் போட்டு எடுத்து வைக்கவும்.
ரொம்ப சுவையான 'பிரட் குலோப் ஜாமூன்' தயார்.

குறிப்பு: நாம் தீபாவளி சமயம் குலோப் ஜாமூன் செய்த பின் அந்த பாகு மீந்து விடும் ; அந்த நேரத்தில் இந்த 'பிரட் குலோப் ஜாமூன்' தயார் செயல்லாம் . இந்த பொரிந்த பிரட் துண்டங்கள் எல்லா பாகையும் உறிந்துகொண்டு சுவையாக இருக்கும் . நமக்கு பாகும் வீணாகாது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

No comments:

Blog Archive