Ingredients:
- கீரை - 1 கட்டு
- வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
- மைதா - 1 டேபிள் ஸ்பூன்
- பால் - 1 ½ கப்
- உப்பு - ருசிக்கு
- மிளகு - தேவைக்கு
- பிரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
Method:
- கீரையை சுத்தம் செய்து, நறுக்கி, கொதிக்கும் நீரில் ஒரு நிமிடம் போட்டு, நீரை வடிகட்டி, அதில் குளிர்ந்த நீரை ஊற்றி, நன்கு அலசி, நீரை வடித்து விடவும்.
- மிக்சியில் கீரையை போட்டு, சிறிது நீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில், வெண்ணெய் போட்டு, உருகியதும், பூண்டு சேர்த்து லேசாக வதங்கியதும், மைதாவை சேர்க்கவும். நன்கு வதக்கி, இதில், அரைத்து வைத்துள்ள கீரை கலவையை சேர்க்கவும். லேசாக கொதி வந்ததும், உப்பு, மிளகு துாள் சேர்த்து, நன்கு கலக்கவும். சில நிமிடங்களில், பால் சேர்த்து வேக விடவும். கீரையின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வேக விடவும்.
- ஓரளவு கலவை கெட்டியானதும், கிண்ணத்தில் ஊற்றி, மேலே பிரஷ் கிரீம் போட்டு பரிமாறவும்.
Ingredients:
- புரோகோலி - 1
- உருளை கிழங்கு - 1
- வெங்காயம் - 1
- பூண்டு - 4 பல்
- பால் - 1 கப்
- வெங்காய தழை - சிறிது
- மிளகு துாள் - 1 டீ ஸ்பூன்
- உப்பு - ருசிக்கு
Method:
- புரோகோலியை துண்டுகளாக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை தோல் சீவி, நறுக்கவும். இத்துடன், நறுக்கிய வெங்காயம், பால், மிளகு துாள், உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காய தாளை சேர்த்து, மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி, குக்கரில், நான்கு விசில் வேக விடவும். அழுத்தம் வெளியேறியதும், கலவையை நன்கு ஆற விடவும். இதை, மிக்சியில் ஊற்றி, கூழாக அரைத்துக் கொள்ளவும்.
- இந்த கலவையை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, சில நிமிடங்கள் காய்ச்சவும். இதில், அரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், உப்பு, மிளகு துாவி பரிமாறவும்.
Ingredients:
- கேரட் - 4
- உருளைக் கிழங்கு - 4 சிறிய துண்டுகள்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பூண்டு - 2 பல்
- இஞ்சி - 1 துண்டு
- நறுக்கிய வெங்காயம் - 1 கை பிடி
- தண்ணீர் - 2 கப்
- உப்பு - ருசிக்கு
- பொடித்த மிளகு - ½ டீ ஸ்பூன்
- புதினா இலை - சிறிது
- பிரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
Method:
- குக்கரில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கு, கேரட் துண்டுகளை சேர்த்து வதக்கி, மிளகு, உப்பு சேர்த்து, புதினா இலைகளையும் போட்டு, தண்ணீர் ஊற்றி, நான்கு விசில் வைக்கவும். அழுத்தம் வெளியேறியதும், குக்கரை திறந்து, புதினா இலைகளை தனியே எடுத்து விடவும்.
- கலவை நன்கு ஆறியதும், மிக்சியில் அரைக்கவும். வாணலியில் கலவையை ஊற்றி, மிதமான சூட்டில், சூப் கெட்டியாகும் வரை கலக்கவும். சூப் கிண்ணத்தில் மாற்றி, மேலே பிரஷ் கிரீம் போடடு, விரும்பினால், உப்பு, மிளகு சேர்த்து குடிக்கவும்.