- மைதா 200 கிராம்
- ரவா 50 கிராம்
- சர்க்கரை 300 கிராம்
- பால் 500 மில்லி
- ஏலக்காய் தூள் ½ sp
- குங்குமப்பூ 12 இழைகள்
- முந்திரி பேஸ்ட் + பாதாம் பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
- பொறிக்க எண்ணெய்
- உப்பு
Method:
- மைதா மற்றும் ராவா இரண்டையும் ஒரு பேசினில் போட்டு, தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- சப்பாத்தி மாவைவிட கெட்டியாக இருக்கட்டும்.
- இதை அப்படியே ஒரு மணி நேரத்திற்கு வைத்திருங்கள்.
- சிறிய சிறிய பூரிகளாக இடுங்கள்.
- அவற்றை ஒரு முள் கரண்டி உதவியுடன் துளைகளை போடுங்கள்.
- அதனால் பூரிகள், உப்பாமல், கரகரப்பாக பொறியும்.
- அவற்றை எண்ணெயில் நன்கு பொறிக்கவும்.
- ஒரு ஆழமான வாணலியில் பால் ஊற்றி அதில் முந்திரி பேஸ்ட் + பாதாம் பேஸ்ட் சேர்க்கவும்.
- அதை ஒரு கொதி வரட்டும்.
- ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
- நன்றாக கலந்து இப்போது அதில் நொறுக்கப்பட்ட பூரிகளை சேர்க்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
- ‘பூரி பாயசம்’, குழந்தைகள் பொதுவாக இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Notes:
- சப்பாத்தி அல்லது பூரி மீந்து விட்டால், அதை இப்படி செய்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment