Ingredients:
- வேகவைத்த அரிசி சாதம் - 1 கப்
- நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
- துருவிய சீஸ் - 1/4 கப்
- துருவிய கேரட் - 1 டேபிள் ஸபூன்
- நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய மல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்
- இடித்த மிளகாய் வற்றல் துாள் - 1 டீ ஸ்பூன்
- மிளகாய் துாள் - 1/2 டீ ஸ்பூன்
- உப்பு - ருசிக்கு
- மைதா - 1/2 கப்
- எண்ணெய் - தேவைக்கு
Method:
- மைதா மாவு தவிர, தேவையான பொருட்கள் அனைத்தையும், நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதன்பின், மைதா மாவை சேர்த்து பிசைய வேண்டும். சமைத்த சாதத்தில், நீர்ச் சத்து இருக்கும் என்பதால், தனியாக, தண்ணீர் சேர்க்க வேண்டாம். அனைத்தும் நன்கு கலந்த பின், சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே வைக்கவும்.
- வாணலியில், தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும், உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் தொட்டு, சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Ingredients:
- வேகவைத்த உருளைக் கிழங்கு - 3
- கடலை மாவு - 1 கப்
- அரிசி மாவு - 1/2 கப்
- பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
- மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்
- நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீ ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் - 1 கப்
- சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
- எண்ணெய் - தேவைக்கு
- நறுக்கிய மல்லி தழை - சிறிது
Method:
- அகலமான பாதிரத்தில், வேக வைத்து, தோல் உரித்த, உருளைக் கிழங்கை, பிசைந்து கொள்ளவும். இதில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, உப்பு, மிளகாய் துாள், சீரகம், பச்சை மிளகாய், மல்லித் தழை, வெங்காயம் சேர்த்து, கலந்து கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
- வாணலியில், எண்ணெய் ஊற்றி, சூடானதும், மிதமான தீயில், சிவக்க பொரித்து, எடுக்கவும். சூவையான உருளைக் கிழங்கு பங்கோட ரெடி.
Ingredients:
- 2 கப் அரிசி மாவு
- 1 / 2 கப் பொட்டுக்கடலை மாவு
- 10 மிளகாய்வற்றல்
- 4 - 5 பூண்டு பற்கள்
- அரை மூடி தேங்காய்
- 2 -3 ஸ்பூன் நெய்
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- பூண்டு , மிளகாய் வற்றல் மற்றும் தேங்காய் யை விழுதாக அரைக்கவும்.
- ஒரு பெரிய பேசினில் மாவுகள் மற்றும் அரைத்த விழுது, உப்பு போடவும்.
- கைகளால் நன்கு கலக்கவும்.
- தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
- தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
- நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
- சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
- மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
- 'ரிப்பன் பகோடா' தயார்.
Ingredients:
- 2 கப் அரிசி மாவு
- 1 / 2 கப் பொட்டுக்கடலை மாவு
- 1sp மிளகாய்பொடி
- சோடா உப்பு ஒரு சிட்டிகை
- 2 -3 sp நெய்
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- ஒரு பெரிய பேசினில் மாவுகள் ,மிளகாய்பொடி,சோடா உப்பு, உப்பு மற்றும் நெய் யை போடவும்.
- கைகளால் நன்கு கலக்கவும்.
- தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
- தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
- நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
- சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
- மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
- 'ரிப்பன் பகோடா' தயார்.
Ingredients:
- 1 கப் அரிசி மாவு
- 4 கப் கடலை மாவு
- 1 / 2 கப் தேங்காய் பால்
- 10 - 12 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் துருவின இஞ்சி
- உப்பு
- பெருங்காயம் கால் ஸ்பூன்
- சோடா உப்பு ஒரு சிட்டிகை
- பொரிக்க எண்ணெய்
Method:
- பச்சை மிளகாய் + இஞ்சியை அரைக்கவும்.
- அரிசி மாவு , கடலை மாவு, பெருங்காயம் மற்றும் அரைத்த பச்சை மிளகாய் , இஞ்சி, சோடா உப்பு எல்லாம் ஒன்றாக போட்டு நன்கு கலக்கவும்.
- உப்பு மற்றும் தேங்காய் பால் விட்டு மாவு பிசையவும்.
- தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
- முறுக்கு அச்சில் 'ரிப்பன் பகோடா' தட்டு போட்டு மாவை ரொப்பி சூடான எண்ணெய் இல் பிழியவும் .
- இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
- கலப்பு மாவில் செய்வதை விட அரைத்து செய்யும் இது ரொம்ப ருசியாக இருக்கும்.
Ingredients:
- 2 கப் அரிசி
- 1 கப் கடலை பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
- 10 - 12 மிளகாய் வற்றல்
- உப்பு
- 2 டீ ஸ்பூன் நெய் அல்லது வெண்ணை
- சோடா உப்பு ஒரு சிட்டிகை
- பொரிக்க எண்ணெய்
Method:
- அரிசி , கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் எல்லாம் ஒன்றாக போட்டு மிஷினில் கொடுத்து அரைக்கவும்.
- ஒரு பேசினில் சோடா உப்பு மற்றும் வெண்ணை போட்டு நன்கு நுரைக்க தேய்க்கவும்.
- பிறகு உப்பு மற்றும் அரைத்த மாவை போட்டு கலக்கவும்.
- கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
- முறுக்கு அச்சில் 'ரிப்பன் பகோடா' தட்டு போட்டு மாவை ரொப்பி சூடான எண்ணெய் இல் பிழியவும் .
- இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
- கலப்பு மாவில் செய்வதை விட அரைத்து செய்யும் இது ரொம்ப ருசியாக இருக்கும்.
Ingredients:
Method:
- ஒரு பெரிய பேசினில் ,ஓமபொடி, காரா பூந்தி ,கனமான அவல் (வறுத்து), பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ), முந்தரி பருப்பு (வறுத்து உடைத்து), கோதுமை சிப்ஸ் ',உருளை சிப்ஸ், காரா சேவை அல்லது முள்ளு தேன்குழல்' என் எல்லாவற்றிலும் ஒவ்வொரு கப் எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையும் பொறிதுப்போட்டு குலுக்கவும்.
- பிறகு உப்பு, மிளகாய்பொடி , மற்றும் பெருங்காயபொடி போட்டு குலுக்கவும்.
- சுவையான 'மிக்ஸ்ர்' ரெடி
Ingredients:
- 2 cup அரிசி மாவு
- 1cup கடலை மாவு
- 2 -3 sp பட்டர் - வெண்ணை
- 1 /2sp பெருங்காய பொடி
- 2 -3 sp எள்
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- ஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
- கைகளால் நன்கு கலக்கவும்.
- தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
- தேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
- நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
- சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
- மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
- கரகரப்பாக நன்றாக இருக்கும்.
Images:




Ingredients:
- 200gms கனமான அவல்
- 100gms பொட்டுகடலை
- 100gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )
- 50gms முந்தரி பருப்பு (உடைத்து)
- 50gms உலர் திராக்ஷை
- 50gms எள்
- 25gms சோம்பு
- கறிவேப்பிலை கொஞ்சம்
- பெருங்காய பொடி - ஒரு சிட்டிகை
- மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
- உப்பு தேவையான அளவு
- 2 - 3 சிகப்பு மிளகாய்
- 1sp கடுகு
- 1sp - 2sp எண்ணெய்
- 1sp சர்க்கரை (பொடித்தது)
Method:
- ஒரு கடாயை சூடுபடுத்தவும்.
- அதில் கனமான அவல்/கெட்டி அவலை போட்டு நன்கு வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- இப்போது எண்ணெய் விட்டு, கடுகு, உடைத்த சிவப்பு மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும்.
- பிறகு சோம்பு, எள், பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ),முந்தரி பருப்பு (உடைத்து), உலர் திராக்ஷை,கறிவேப்பிலை பெருங்காய பொடி,மஞ்சள் பொடி போட்டு நன்கு வறுக்கவும்.
- அடுப்பை சிறிய தணலில் வைக்கவும்.
- உப்பு, சர்க்கரை (பொடித்தது) சேர்க்கவும்.
- நன்கு கலக்கவும்.
- இப்போது தனியே வறுத்து வைத்த அவலை போட்டு நன்கு கலக்கவும்.
- அடுப்பை அணைக்கவும்.
- சுவையான 'அவல் மிக்ஸ்ர்' ரெடி.
Ingredients:
- 500 gms கார்ன் ப்ளகேஸ் (cornflakes ) plain
- 150 gms முந்தரி பருப்பு
- 150gms பாதாம்
- 100gms உலர் திராக்ஷை
- 1sp சர்க்கரை
- 1sp மிளகாய் பொடி
- 1 /2sp உப்பு
- கறிவேப்பிலை கொஞ்சம்
- 1 தேக்கரண்டி எண்ணை
Method:
- பாதாமை தண்ணிரில் 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
- முந்திரியை சரிபாதியாக உடைதுவைத்துக்கொள்ளவும்.
- ஊரிய பாதாமை தோல் உரித்து, சரிபாதியாக உடைதுவைத்துக்கொள்ளவும்
- கறிவேப்பிலை, உலர் திராக்ஷை யை அலம்பி துடைக்கவும்.
- அடுப்பை பற்றவைக்கவும் .
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, முந்தரி பருப்பு, பாதாம், கறிவேப்பிலை, உலர் திராக்ஷை எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரிக்கவும்.
- தீயை குறைத்து கார்ன் ப்ளகேஸ் (cornflakes ) போடவும். நன்கு வறுக்கவும்.
- அடுப்பை அணைக்கவும்.
- இப்பொழுது உப்பு, சர்க்கரை,மிளகாய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
- 'ராயல் மிக்ஸ்ர்' ரெடி.