Tuesday, October 6, 2020

அவல் மிக்ஸ்ர் - 2

Ingredients:
  • 200gms கனமான அவல்
  • 100gms பொட்டுகடலை
  • 100gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )
  • 50gms முந்தரி பருப்பு (உடைத்து)
  • 50gms உலர் திராக்ஷை
  • 50gms எள்
  • 25gms சோம்பு
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • பெருங்காய பொடி - ஒரு சிட்டிகை
  • மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
  • உப்பு தேவையான அளவு
  • 2 - 3 சிகப்பு மிளகாய்
  • 1sp கடுகு
  • 1sp - 2sp எண்ணெய்
  • 1sp சர்க்கரை (பொடித்தது)


Method:
  • ஒரு கடாயை சூடுபடுத்தவும்.
  • அதில் கனமான அவல்/கெட்டி அவலை போட்டு நன்கு வறுக்கவும்.
  • தனியே வைக்கவும்.
  • இப்போது எண்ணெய் விட்டு, கடுகு, உடைத்த சிவப்பு மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும்.
  • பிறகு சோம்பு, எள், பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ),முந்தரி பருப்பு (உடைத்து), உலர் திராக்ஷை,கறிவேப்பிலை பெருங்காய பொடி,மஞ்சள் பொடி போட்டு நன்கு வறுக்கவும்.
  • அடுப்பை சிறிய தணலில் வைக்கவும்.
  • உப்பு, சர்க்கரை (பொடித்தது) சேர்க்கவும்.
  • நன்கு கலக்கவும்.
  • இப்போது தனியே வறுத்து வைத்த அவலை போட்டு நன்கு கலக்கவும்.
  • அடுப்பை அணைக்கவும்.
  • சுவையான 'அவல் மிக்ஸ்ர்' ரெடி.

No comments:

Blog Archive