Tuesday, October 6, 2020

ரவா மசாலா தோசை

Ingredients:
  • ரவா தோசை மாவு 2 கப்
  • வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
  • வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
  • பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
  • இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
  • பூண்டு 1 டீ ஸ்பூன் பொடியாக நறுக்கினது ( தேவையானால் )
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  • எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.


Method:
  • வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
  • நறுக்கிவைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
  • கொஞ்சம் வதங்கினதும், வெங்காயம் போடவும்.
  • பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
  • நன்கு கிளறவும்.
  • கொஞ்சம் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கிளறவும்.
  • மசாலா நன்கு சேர்ந்து வந்ததும், கொத்துமல்லி கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.
  • அடுப்பில் தோசைகல்லை போட்டு மெல்லியதாக ரவா தோசை வார்க்கவும்.
  • கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடவும்.
  • பிறகு அடுப்பை சின்னதாக்கி விட்டு , மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து தோசை இல் தடவவும்.
  • பிறகு அதை மடித்து பரிமாறவும்.
  • இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாமே நல்லா இருக்கும்.

No comments:

Blog Archive