Tuesday, October 6, 2020

பாதாம் ஹல்வா - 3

Ingredients:
  • 250 கிராம் பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
  • 200 கிராம் சர்க்கரை
  • 250 கிராம் நெய்
  • 3 கப் பால்
  • சிறிதளவு ஏலப்பொடி
  • 150 கிராம் ரவை
  • 2 ஸ்பூன் பிஸ்தா தூளாக்கினது
  • இரண்டு ஷீட் 'சில்வர் ரேக் ' (தேவையானால் )


Method:
  • பாதாமை ஒரு இரண்டு மணிநேரம் ஊறவைத்து தோலை உரித்து ரவை போல மிக்சி இல் உடைத்துக்கொள்ளவும்.
  • ஒரு அடிகனமான பாத்திரத்தில், நெய்விட்டு ரவையை போட்டு வறுக்கவும்.
  • பிறகு பாதாம் ரவையை போட்டு வறுக்கவும்.
  • கொஞ்சம் சிவந்ததும், பால் சர்க்கரை போட்டு கிளறவும்.
  • அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
  • நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பிஸ்தா துண்டுகள் தூவவும்.
  • நெய் பிரிந்து வரும்போது இறக்கி நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
  • மேலே 'சில்வர் ரேக் ' ஒட்டவும்.
  • சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.

No comments:

Blog Archive