Tuesday, October 6, 2020

முந்திரி ஹல்வா

Ingredients:
  • 4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
  • 1 / 2cup முந்திரி ( முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
  • 1 கப் சர்க்கரை
  • 1 டேபிள்ஸ்பூன் நெய்
  • சிறிதளவு ஏலப்பொடி
  • பால் சிறிதளவு
  • 2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது
  • மேலே தூவ:
  • ரோஜா இதழ்கள் கொஞ்சம்


Method:
  • ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்திரி விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
  • கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
  • நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
  • முந்திரி ஹல்வா தயார்.
  • சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
  • கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
  • ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.

No comments:

Blog Archive