Tuesday, October 6, 2020

புதினா பொடி

Ingredients:
  • புதினா 2 கப் உருவியது
  • உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  • கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  • தனியா 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • குண்டு மிளக்காய் வற்றல் 12 -14
  • புளி சிறிய எலுமிச்சை அளவு
  • பெருங்காய பொடி 1/4 டீ ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணை
  • மிளகு 1 ஸ்பூன் (காரம் அதிகம் தேவைபடுபவர்கள் இதை சேர்க்கலாம் )


Method:
  • முதலில் புதினாவை ஆய்ந்து அலம்பி வடிய விடணும்.
  • வெறும் வாணலி இல் நன்கு வறுக்கணும்.
  • வறுத்ததை கை இல் நொறுக்கினால் நொறுங்கணும் அது தான் பதம்
  • அதை தட்டில் கொட்டி வைக்கவும்
  • புளியை சிறிது சிறிதாக பிச்சு போட்டு நன்கு வறுக்கணும்
  • அதையும் தனியே வைக்கக்ணும்.
  • பின் வாணலி இல் எண்ணை விட்டு மற்ற சாமான்களை வறுக்கணும்
  • பின்பு எல்லா வற்றை யும் மிசில பொடிக்கணும்.
  • கமகமக்கும் புதினா பொடி தயார்.
  • சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
  • நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
  • தொட்டுக்கொளா சுட்ட அப்பளம் அல்லது தயிர் போறும் .

No comments:

Blog Archive