Ingredients:
- 1 கப் கோதுமை மாவு
- 1 டீஸ்பூன் எள் (வெள்ளை அல்லது கருப்பு)
- 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் அல்லது சோம்பு போடலாம்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு
Method:
- அனைத்து பொருட்களையும் எண்ணெயுடன் கலக்கவும்.
- தண்ணீரை தெளித்தது, சப்பாத்திமாவு போல கலக்கவும்.
- இந்த மாவில் சப்பாத்திகளை இட்டு, இரண்டு பக்கமும் தோசை கல்லில் போட்டு நன்கு சூடாக்கவும்.
- பிறகு அதை மைக்ரோவேவ் ஓவனில் (ஒவ்வொரு பக்கமும் ஒரு நிமிடம்) வைத்து நல்ல கரகரப்பாக வரும்வரை காய்ச்சி எடுக்கவும்.
- காற்று இறுக்கமான டப்பாக்களில் சேமிக்கவும்.
- உங்கள் மாலை தேநீருடன் ஒரு சிற்றுண்டியாக இதை சாப்பிடுங்கள்!
- நல்ல மசாலா வாசனையுடன் கரகரப்பான புதுவித சிற்றுண்டி இது.
- ஒருமுறை செய்து பாருங்கள் , உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
- பிரயாணங்களை ஏற்றது.
Notes:
- அங்கு ( சௌதி) கடை இல் இது போல் கிடைக்கும், மிக அருமையாக இருக்கும். வாங்கி வைத்துக் கொள்வோம். மாலை டீ அல்லது காபியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும்
Ingredients:
- மைதா மாவு - 2 கப்
- நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
- சோடா உப்பு - அரை சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
- பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
- இதே போல எல்லா மாவையும் பெரிய பெரிய சப்பாத்திகளாக இட்டுக்கொள்ளவும்.
- முதலில் ஒன்றை மேடைமேல் வைத்து, அதன் மேல் நெய்யை தாராளமாக தடவவும்.
- அடுத்த சப்பாத்தியை அதன் மேல் போடவும்.
- இதேபோல குறைந்தது ஆறு சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.
- பிறகு அதை மெல்ல சுருட்டவும்.
- இப்புதுசு அதை குறுக்கு வாட்டில் ஆறு துண்டுகளாக 'கட்' செய்து கொள்ளவும்.
- இப்பொழுது அதை கனமான பரோட்டாவாக இடவும்.
- தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
- வரி வரியாக, ருசியாக இருக்கும் இந்த மைதா பரோட்டா.
Ingredients:
- மைதா மாவு - 2 கப்
- நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
- சோடா உப்பு - அரை சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
- பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
- அதைப் புடவை கொசுவம் போல மடித்துக் கொள்ளவும்.
- இதுவும் பழக்கத்தில் தான் வரும்.
- மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக இடவும்.
- இதேபோல மொத்த மாவையும் செய்து கொள்ளவும்.
- தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
- ருசியாக இருக்கும் இந்த மைதா பரோட்டா.
Ingredients:
- கோதுமை மாவு - 2 கப்
- நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
- சோடா உப்பு - அரை சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- எண்னெய் - நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
- பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
- அதைப் புடவை கொசுவம் போல மடித்துக் கொள்ளவும்.
- இதுவும் பழக்கத்தில் தான் வரும்.
- மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக இடவும்.
- இதேபோல மொத்த மாவையும் செய்து கொள்ளவும்.
- தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
- ருசியாக இருக்கும் இந்த கோதுமை பரோட்டா.
Notes:
- நாம் மைதாவில் பரோட்டா செய்வோம் வடக்கே கோதுமை பரோட்டாவும் செய்வார்கள். பிரி பிரியாக நன்றாக இருக்கும் அது. அதை எப்படிச்செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
Ingredients:
- கோதுமை மாவு - 2 கப்,
- சோயா சங் / உருண்டைகள் 20 / 30 அல்லது சோயா க்ரானுல்ஸ் - 1 /2 கப்
- பச்சை மிளகாய் 8 - 10
- கரம் மசாலா 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
- சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, பச்சை தண்ணீரில் இரு முறை நன்கு அலசவும்.
- நன்கு பிழிந்து, மிக்ஸியில் அடித்து உதிர்த்துக் கொள்ளவும்.
- கரம் மசாலா போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
- தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
- அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
- ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
- மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
- பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
- சுவையான, அருமையான சோயா சங் பரோட்டா தயார்.
- இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.
Notes:
- சோயா சங் இல்லாமல் தூளாக கிடைத்தால், அதை அப்படியே தண்ணீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து நன்கு பிழிந்து உபயோகிக்கவும்.
- ஒருவேளை பச்சை வாசனை வருமே என்று நீங்கள் நினைத்தால், வாணலி இல் ஒருமுறை புரட்டி எடுத்து பின் உபயோகிக்கவும்.
- இந்த சங்கை தனியே பொடித்து வைத்துக் கொண்டு, கரம் மசாலா கலந்து, சப்பாத்திக்குள் பூரணம் போல் வைத்து ஸ்டஃப்டு பரோட்டாவாகவும் செய்யாலாம் .
- எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
Ingredients:
- கோதுமை மாவு - 2 கப்,
- வேகவைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப்
- சர்க்கரை அல்லது வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன்
- ஏலப்பொடி அரை ஸ்பூன்
- உப்பு - ஒரே ஒரு சிட்டிகை
- எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- ஒரு பாத்திரத்தில் உப்பு வேகவைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு , ஏலப்பொடி போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
- இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
- தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
- அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
- ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
- மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
- அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
- பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
- சுவையான, அருமையான, இனிப்பான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா தயார்.
- இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் தேன் விட்டுக்கொள்ளலாம் அல்லது நெய் விட்டுக்கலாம்.
Notes:
- 1 ) இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தனியே மசித்து வைத்துக் கொண்டு, சப்பாத்திக்குள் பூரணம் போல் வைத்து ஸ்டஃப்டு பரோட்டாவாகவும் செய்யாலாம் .
- 2 ) எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
Ingredients:
- கோதுமை மாவு - 2 கப்
- நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
- பூரணத்துக்கு:
- முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
- மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- தனியா பொடி - அரை டீஸ்பூன்
- கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
Method:
- பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
- ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
- அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- (தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
- ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
- உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கவும்.
- பிறகு, ஒரு சப்பாத்தியை இட்டு, அதன் மேல் பூரணத்தை பரவலாக வைத்து , அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிடவும்.
- ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
- கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
- இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
Ingredients:
- கோதுமை மாவு - 2 கப்
- நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
- பூரணத்துக்கு:
- முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
- மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- தனியா பொடி - அரை டீஸ்பூன்
- கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
Method:
- பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
- ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
- ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
- உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கவும்.
- தண்ணீரை ஒட்டப்பிழிந்து விட்டு, அதை கோதுமைமாவுடன் போட்டு நன்கு பிசையவும்.
- தண்ணீர் வேண்டி இருக்காது.
- ஒருவேளை தேவையானால், பிழிந்து வைத்துள்ள தண்ணீரை உபயோகித்துக் கொள்ளவும்.
- சப்பாத்திகளாக இட்டு, எண்ணெய் - நெய் கலவை இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
- நிறைய முள்ளங்கி கிடைக்கும்போது இப்படி செய்து சாப்பிடலாம்.
- வித்தியாசமான ருசியுடன் நன்றாக இருக்கும்.
Ingredients:
- கோதுமை மாவு - 2 கப்,
- கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
- மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்,
- வெந்தயக் கீரை - 2 கட்டு ( நன்கு வளர்ந்த வெந்தயக் கீரைதான் இதற்கு வேண்டும் )
- வறட்டு மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன், (தேவையானால் )
- பச்சை மிளகாய் 8 - 10
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- வெந்தயக் கீரையை இலைகளாக ஆய்ந்து கொண்டு, தண்ணீரில் அலசி, வடியவிடுங்கள்.
- தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
- மற்றும் ஒரு பேசினில், ஒரு டீஸ்பூன் நெய் + ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி எல்லாம் சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
- இப்பொழுது ஆய்ந்த கீரையைப் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
- உப்பு மிளகாய் கலவையையும் சேர்த்து நன்கு பிசையவும்.
- தேவையானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
- மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
- அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
- பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் பவுன் நிறமாக எடுங்கள்.
- சுவையான மேத்தி பரோட்டா தயார்.
- இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டித்தயிர் மற்றும் ஏதாவது ஊறுகாய் போதும்.
Notes:
- எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும் .
Ingredients:
- கோதுமை மாவு - 2 கப்,
- வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு - 2 கப்
- பச்சை மிளகாய் 8 - 10
- கரம் மசாலா 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
- அதில் இப்பொழுது வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
- இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
- தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
- அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
- ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
- மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
- அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
- பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
- சுவையான, அருமையான ஆலு பரோட்டா தயார்.
- இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.
Notes:
- எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
Ingredients:
- கோதுமை மாவு - 2 கப்,
- பொடியாக துருவிய காலிஃப்ளவர் - 2 கப்
- பச்சை மிளகாய் 8 - 10
- கரம் மசாலா 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
- அதில் இப்பொழுது பொடியாக துருவிய காலிஃப்ளவர் மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
- இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
- தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
- பூவில் இருக்கும் ஈரமே போதும்.
- அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
- ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
- மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
- அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
- பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
- சுவையான, அருமையான காலிஃப்ளவர் பரோட்டா தயார்.
- இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.
Notes:
- எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
- உலகத்திலேயே மிகவும் சுவையான பரோட்டா ஒன்று உண்டு என்றால் அது இது தான் என்பது என் அபிப்பிராயம். அத்தனை நன்றாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் பரோட்டா .