- பச்சரிசி - அரை கப்
- பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
- நெய் 1/2 கப்
- முந்திரிப் பருப்பு - 10 - 12
- திராக்ஷை 10 -12
- ஏலக்காய் - 5
- பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை
- பால் - 2 கப் - 2 1/2 கப்
- பொடித்த வெல்லம் - 2 கப்
Method:
- அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, முந்திரி திராக்ஷையை வறுத்து, தனியாக எடுத்து வைக்கணும்.
- பிறகு, அதே நெய்யில் அரிசியையும் பருப்பையும் போட்டு கருக்காமல் சிவக்க வறுகணும்.
- பிறகு அதிலேயே கொஞ்சம் .கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர் மற்றும் பாலைவிட்டு வேகவிடவும்.
- அப்பப்போ கிளறனும்.
- அது பாட்டுக்கு வேகட்டும்.
- இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அரை கப் தண்ணீர் விட்டு , கரைந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
- அரிசியும் பருப்பும் நன்கு குழைய வெந்ததும், வெல்ல ஜலத்தை , பால் சேர்த்த அரிசிக் கலவையில் சேர்த்து நன்கு கிளறவும்.
- சிறிது கெட்டியானதும், ஏலக்காயைப் பொடித்துத் தூவிக் கிளறவும். நன்கு சேர்த்துக் கிளறியதும், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான், சுடச் சுட அக்கார அடிசில் தயார்.
- அருமையான இனிப்பு இது.
Notes:
- இதை குக்கரிலும் செய்யலாம். பருப்பு அரிசியை வறுத்து, பால் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கி, ஏலம், முந்திரி சேர்த்துக் ஒரு கொதி விட்டு இறக்கிடலாம். அதுவே போறும்......ஆனால் மேலே சொன்னது போல செய்தால்தான் ரொம்ப சுவையாக இருக்கும்
- மேலும் 'condensed milk ' விட்டும் செய்யாலாம்; சுவை கூடும், அரிசி கொதிக்கும் நேரம் குறையும்.
- அக்கார அடிசில் ...............இது எங்கள் வீடுகள் மற்றும் எங்கள் கோவில்களில் ரொம்பவும் பிரபலமாக பாயசம். ஐயங்கார் புளிக்காச்சல் - புளியோதரை போல த்தான் அக்கார அடிசிலும் குறிப்பாக இது மார்கழி மாதம் 27 ஆம் நாள் செய்யப்படும். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று பாவை நோன்பைத் துவங்குவோர் நிறைய நெய்யும் பாலும் கலந்து இதை செய்வோம்
- பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இது செய்யப்படுகிறது. இந்த பாயசம் செய்யும்போது அரிசி பாலில் வேகவைக்கப்படும். இது சர்க்கரைப் பொங்கல் போல திடமாகவும் இராது. பாயசம் போல திரவமாகவும் இராது. ஆனால் ரொம்ப சூப்பராக அமிருதமாக இருக்கும் செய்து பாருங்களேன் !
No comments:
Post a Comment